திருச்சியி​ல் ரமலான் மாத இராத்திபு மஜ்லிஸ்

திருச்சி ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் கண்ணியமிக்க கலீபா எம்.சிராஜிதீன் அவர்களின் இல்லத்தில் ரமலான் மாதத்தின் இஃராத்திபு மஜ்லிஸ் சங்கைக்குரிய சையித் ஜமாலியா யாசீன் அலீ மௌலானா மற்றும் சையித் ஷாமிஸ் அலீ மௌலானா அவர்களின் தலைமையில்

சென்ற 14-08-2011 ஞாயிற்று கிழமை மாலை இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இராத்திபு மஜ்லிஸ் மஃரிப் தொழுகைக்கு பின்னர் நடைப்பெற்றது.

இஃப்தார் மற்றும் இராத்திபு மஜ்லிஸில் முரீதுகள் மற்றும் மதரசா மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.புகைப்படங்கள் மற்றும் தகவல்: நைனார் முஹம்மது அன்சாரி திருச்சி