ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி!

உங்கள் பதில்களை கேள்வி எண்ணுடன் மற்றும் பதில் A, B, C இதில் நீங்கள் தேர்வு செய்யும் ஒரு ஆங்கில எழுத்தை மட்டும் எழுதி இமெயிலில் அனுப்பி வையுங்கள்.

அவசியம் நீங்கள் குறிப்பிட வேண்டிய விசயங்கள்

உங்கள் பெயர் *

கைபேசி எண் *

இமெயில் முகவரி *

1 நிச்சயமாக அல்லாஹ்வும் அவன் மலக்குகளும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுகின்றார்கள். (ஆகவே) விசுவாசிகளே... நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள் என்று இறைவன் சங்கைமிகு அல்குர்ஆன் ஷரீப்பில் எந்த அத்தியாத்தில் கூறுகின்றான்?

A* 40:03 குர்ஆன் அத்தியாய‌ம்
B* 32:03 குர்ஆன் அத்தியாய‌ம்
C* 33:56 குர்ஆன் அத்தியாய‌ம்


2. அல்லாஹ்வின் திருத்தூதரான கோமான் நபி(ஸல்) அவர்கள் மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் மேலானாவர்களாக இருக்கிறார்கள்.

A* இவ்வாக்கியம் சங்கை மிகு புஹாரி ஹதீஸ்ஸில் வருகிறது.
B* இவ்வாக்கியம் மேன்மையும் சங்கையும் பொருந்திய அல்குர்ஆன் ஷரீப்பில் வசனம்.
C* ஹஜரத் உதுமான் (ரலி) அவர்கள் வாழ்கையில் ஏற்பட்ட சம்பவம்.


3. உத்தம நபி(ஸல்) அவர்களின் இளமைக் காலங்களில் மக்கள் எந்த சிறப்பு பெயர் கூறி அழைத்தார்கள்? *

A* அல் அமீன்
B* அல் அமீர்
C* இப்னு அப்துல்லாஹ்


4. கண்மணி நாயகம் ரசூல்(ஸல்) அவர்களை இறைவன் யாருக்கு நபியாக அனுப்பினான்?

A* அரபு நாட்டவர்களுக்கு
B* உலக மக்கள் அனைவருக்கும்
C* பனு இஸ்ரவேலர்களுக்கு


5. உங்கள் உயிரை விடவும் நீங்கள் என்னை நேசிக்காதவரை உங்கள் ஈமான் பூர்த்தியாகாது என்று மறை தந்த மாநபி ரசூல் (ஸல்) அவர்கள் எந்த சஹாபியிடம் கூறினார்கள்? *

A* ஹஜ்ரத் அலி (ரலி)
B * ஹஜ்ரத் உமர் (ரலி)
C * ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி)


6. அறிவின் பட்டிணம் நான், அதன் நுழைவு வாயில் என்று யாரை மறை தந்த மாநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A * ஹஜ்ரத் அலி (ரலி)
B* ஹஜ்ரத் உமர்( ரலி)
C* ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)


7. யார் யாருடைய‌ ப‌ரிந்துறையின் பேரில் 50 வ‌க்து தொழுகை 5 வ‌க்தாக‌ குறைக்க‌ப்ப‌ட்ட‌து?

A* ஈசா ந‌பி (அலை) ம‌ற்றும் நபிகள் கோமான் ர‌சூல் (ஸ‌ல்)
B* மூசா ந‌பி (அலை) ம‌ற்றும் நபிகள் கோமான் ர‌சூல் (ஸ‌ல்)
C* சுலைமான் ந‌பி (அலை) ம‌ற்றும் நபிகள் கோமான் ர‌சூல் (ஸ‌ல்)


8. தெளர் குகையில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களுடன் இருந்த சஹாபி யார்?

A* ஹஜ்ரத் அலி (ரலி)
B* ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
C* ஹஜ்ரத் உமர்( ரலி)


9. பெருமான் நபி(ஸல்) அவர்களுக்கு செவிலி தாயாராக அன்னை ஹலீமா ஸஃதிய்யா அவர்கள் இருந்தார்கள்.

A* சரி
B* தவறு


10. உத்தம நபி(ஸல்) அவர்கள் தாயிபு நகருக்கு யாருடன் சென்றார்கள்?

A* ஹஜ்ரத் உமர் (ரலி)
B* ஹஜ்ரத் அலி (ரலி)
C* ஹஜ்ரத் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி)


11. புனித‌ மிஃராஜ் நிகழ்ச்சி எப்போது நடந்தது?

A* திரு நபி ரசூல்(ஸல்)அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த 11ம் வருடம் கிடைத்தது.
B* திரு நபி ரசூல்(ஸல்)அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த 10ம் வருடம் கிடைத்தது.
C* திரு நபி ரசூல்(ஸல்)அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த 12ம் வருடம் கிடைத்தது


12. அருமை நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்களை புகழ்ந்து பாடியதால், அவர்களின் திருக்கரங்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட கவிஞர் யார்?

A* ஹல‌ரத் கஅப் இப்னு ஜுஹைர் (ரலி)
B* ஹலரத் அப்பாஸ் (ரலி)
C* ஹம்ஸா (ரலி)


13. பூமான் நபி(ஸல்) அவர்களும் அவர்களது தோழரும் தெளர் குகையில் எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்கள்?

A* 3 இரவு 3 பகல்
B* 3 இரவு 4 பகல்
C* 2 இரவு 3 பகல்


14. மதினாவில் உத்தம நபி ரசூலே கரீம்(ஸல்) அவர்கள் முதன் முதலில் கட்டிய பள்ளிவாசலின் பெயர் என்ன?

A* மஸ்ஜிதுன் நபவி
B* மஸ்ஜித் அக்ஸா
C* மஸ்ஜிதே கூபா


15. முத‌ன் முத‌லில் பாங்கு சொல்லிய‌ ர‌சூல் நாய‌க‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் தோழ‌ர் யார்?

A* பிலால் (ர‌லி)
B* உம‌ர் (ர‌லி)
C* த‌ஹ்ல‌பா (ர‌லி)


16. கோமான் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் முத‌ன் முத‌லில் ஷாம் தேச‌த்திற்கு யாருட‌ன் சென்றார்க‌ள்?

A* சிறிய தந்தையுடன் சென்றார்கள்
B* த‌னியாக‌ சென்றார்க‌ள்
C* த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் சென்றார்க‌ள்


17. செம்மல் நபி(ஸல்) அவர்களுக்கு எத்தனை வயதில் திருமணம் நடந்தது?

A* 25 வது வயதில்
B* 26 வது வயதில்
C* 27 வது வயதில்


18. பெருமானார் ரசூலே கரீம்(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கிய பொழுது எங்கு இருந்தார்கள்?

A* ஹீரா மலைக்குகை
B* கஃபத்துல்லா
C* ஹஜ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் இல்லம்


19. பெருமானார்(ஸல்) அவர்கள் வஹீயைப் பற்றி முதன் முதலில் அன்னை ஹதிஜா பிராட்டியார் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

A* சரி
B* தவறு
C* இரண்டும் இல்லை


20. தெளர் குகையில் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள், தனது தோழரை விஷ நாகம் தீண்டியப்பொழுது தனது முபாரக்கான உமிழ் நீரை மருந்தாக பயன்படுத்தினார்கள்.

A* சரி
B* தவறு
C* இரண்டும் இல்லை


21. வேந்தர் நாய‌க‌ம் ர‌சூலே க‌ரீம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ங்களுடைய‌ ஈர‌க்குலை என்று யாரை கூறினார்க‌ள்?

A* அன்னை பாத்திமா (ர‌லி)
B* இமாம் ஹ‌ச‌ன் (ர‌லி) ஹுசைன் (ர‌லி)
C* க‌திஜா பிராட்டியார் (ர‌லி)


22. கர்பலா யுத்தத்தில் ஷஹிதான உத்தம ரசூல் (ஸல்) அவர்களின் திருப்பேரர் யார்?

A* இமாம் ஹசன் (ரலி)
B* இமாம் ஹுசைன் (ரலி)
C* இமாம்கள் இருவரும்


23. கர்பலா யுத்தத்தில் உடல்நிலை சரியில்லாததால் உயிர் பிழைத்த கோமான் ரசூல் (ஸல்) அவர்களின் புனித வாரிசு யார்?

A* ஜெய்னுல்லாபிதீன் (ரலி)
B* ஹஜ்ரத் ஜாபர் பின் அலி (ரலி)
C* ஹஜ்ரத் அலி அஸ்கர் பின் ஹுசைன் (ரலி)


24. _________ தேசம் சென்றேனும் சீர் கல்வி கற்க வேண்டும் என்று பெருமானார்(ஸல்) கூறிய நாடு எது?

A* இந்தியா
B* சீனா
C* ஏம‌ன்


25. _________ ஊர் வாசிகள், நபிகள் பெருமானாரை கல்லால் அடித்த போது இறைவன் தனது வானவர் மூலம் இந்த ஊரை முற்றிலும் அழித்த விடவா? என்று வினவிய போது, வேண்டாம் இவர்கள் இன்று திருந்தாவிட்டாலும் இவர்களது எதிர்கால சந்ததியினர் திருந்துவார்கள் என்று பொறுமை காத்த பூமான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

A* ஷாம்
B* ஏமன்
C* தாயிப்


26. நல்லாட்சி நடத்திய‌ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் ஆட்சி செய்த‌ அவர்களது தோழர் உமர் (ரலி) அவர்களை போல் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறிய இந்தியர் தலைவர் யார்?

A* பண்டிட் ஜவர்ஹலால் நேரு
B* மகாத்மா காந்தி
C* டாக்டர் அபுல் கலாம் ஆசாத்


27. “The 100” என்ற பிரபல நூலில் புனித‌ நபி (ஸல்) அவர்களே முதலிடத்திற்கு எல்லா வகையிலும் தகுதியானவர்கள் என்று முதல் இடம் கொடுத்த நபர் எந்த மதத்தை சார்ந்தவர்?

A* இஸ்லாம்
B* கிறிஸ்தவர்
C* யூதர்


28. ‍‍‍‍‍நபிமார்களின் தலைவர் ஹஜ்ரத் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் சந்திரனை பிளந்ததை கண்டு முஸ்லிமான இந்திய அரசர் யார்?

A* சேரமான் பெருமான்
B* சோழ பெருமான்
C* பாண்டிய பெருமான்


29. காருண்ய நபி (ஸல்) அவர்களுக்கு முன் உங்கள் குரலை உயர்த்தி சப்தமிட்டு கூற வேண்டாம் என்று எதில் கூறப்பட்டுள்ளது?

A* சங்கைமிகு அல்குர்ஆன் ஷரீப்
B* ஹதீஸ் கிரந்தம்
C* ஹதீஸே குத்ஸி


30. அகிலத்தின் அருட்கொடை ஹலரத் ரசூல் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு எத்தனை தோழர்களுடன் ஹிஜ்ரத் செய்ய தொடங்கினார்கள்?

A* ஒன்று
B* இரண்டு
C* மூன்று


31. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மனி யார்?

A* அன்னை கதிஜா நாயகி (ரலி)
B* அன்னை ஆயிஷா நாயகி (ரலி)
C* அன்னை உம்மு குல்தூம் நாயகி (ரலி)


32. சொர்க‌த்தின் த‌லைவி என்று யாரை நபிமார்களின் தலைவர் ரசூல் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்?

A* அன்னை ஹவ்வா (அலை)
B* அன்னை மரியம் (அலை)
C* அன்னை பாத்திமா (ரலி)


33. இருலோக இரட்சகர் நபி (ஸல்) அவர்கள் வாழ்கின்ற மண்ணில் கழிவுகளால் அசுத்தப்படுத்த விரும்பாத இமாம் யார்?

A* இமாம் அபுஹனிபா (ரஹ்)
B* இமாம் ஷாபி (ரஹ்)
C* இமாம் அஹமது இப்னு ஹம்பலி (ரஹ்)


34. எத்தனை நபிமார்களுக்கு மறைபோற்றும் மாநபி ரசூல் (ஸல்)அவர்கள் இமாமத் செய்து தொழ வைத்தார்கள்?

A* சங்கைமிகு அல்குர்ஆன் ஷரீபில் கூறப்பட்ட‌ 25 நபிமார்கள் மட்டும்,
B* 1,25,000 நபிமார்கள்
C* முன் வந்த நபிமார்கள் அனைவருக்கும்


35. எந்த போரில் கலந்து கொண்டவர்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு சுவர்க்கவாதிகள் என்று அறிவிக்கப்பட்டது.

A* உகது போர்
B* பத்ரு போர்
C* அகழ் போர்


36. வாத‌ நோயினால் பீடிக்கப்பட்டு நோய் நீங்குவதற்காக வேண்டி இறைவனை காட்டிதந்த குருநபி நபி ரசூல் (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலை இயற்றியதன் பொருட்டு குணம் பெற்ற இமாம் பூசரி (ரஹ்) இயற்றிய புகழ் மாலையின் பெயர் என்ன?

A* பத்ரு மவ்லிது
B* சுபுஹான மவ்லிது
C* புர்தா மவ்லிது


37. இறைவனிடம் பிராத்தனை (துஆ) புரியும் போது ஹலரத் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் மீது முதலிலும், முடிவிலும் ஸலவாத்துடன் கூடிய‌ துஆ மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

A* சரி
B* தவறு
C* இரண்டும் இல்லை


38. உங்களிடம் இரண்டை விட்டு செல்கிறேன். அதை பின்பற்றி வாழும் காலம் எல்லாம் வழி தவறமாட்டீர்கள் என்று மனித குல வழிகாட்டி நபி(ஸல்) அவர்கள் எதனை கூறினார்கள்?

A* சங்கைமிகு அல்குர்ஆன் ஷரீபும், எனது குடும்ப வழிமுறையும்
B* சங்கைமிகு அல்குர்ஆன் ஷரீபும், ஹதிஸே குத்ஸி
C* அல் ஹதீஸ், எனது குடும்ப வழிமுறையும்


39. “(நபியே) நீர் கூறும் நான் உங்களிடம் எனது குடும்பத்தினரை அன்பு கொள்வதை தவிர வேறு எதனையும் கூலியாக கேட்கவில்லை"

A* சங்கைமிகு திருகுர்ஆன் வசனம்.
B* ஹ‌திஸே குத்ஸி
C* அல்ஹ‌தீஸ்.


40. மீலாது விழா கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

A* அல்லாஹ்வும் அவ‌ன‌து ப‌ரிசுத்த‌ வானவ‌ர்க‌ளும் புகழும் ஹளர‌த் பெருமானார் (ஸல்) அவர்களை புகழ்வ‌தின் மூல‌ம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவது.
B* பிர‌ப‌ஞ்ச‌த்தின் அருட்கொடை பெருமானார் (ஸல்) அவர்களை புகழ்ந்து அவர்கள் காட்டி தந்த வழிமுறையில் வாழ்ந்து நேர்வழிப் பெறுவது.
C* அழகிய முன்மாதிரி என்று அல்குர்ஆன் ஷரீபில் அல்லாஹ் போற்றும் ஹளர‌த் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உலக மக்களுக்கு பரப்புவதன் மூலம் உலகத்தில் சாந்தியும் சமாதானத்தையும் ஏற்படுத்துவது.


41. மரணத்தை தவிர எல்லா நோயிகளுக்கும் மருந்து என்று உயிரினும் மேலான உத்தம நபி ரசூல் (ஸல்) எதனை கூறினார்கள்?

A* தேன்
B* கருஞ்சீரகம்
C* அத்திப்பழம்


42. பெருமானார் நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய போர் என்று எதனை குறிப்பிட்டார்கள்?

A* பத்ரு போர்
B* உகது போர்
C* மனோ இச்சையுடன் (நப்ஸ்) போராடுவது


43. சமாதானத்தை விரும்பும் சாந்த நபி (ஸல்) அவர்களால் ஏற்படுத்தப்பட்ட எந்த உடன்படிக்கை சிறப்பு மிக்க உடன்படிக்கையாக அறிஞ்ஞ‌ர்களால் இன்றும் கருதப்படுகிறது.

A* ஹுதைபியா உடன்படிக்கை
B* மக்கா உடன்படிக்கை
C* யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை


44. வெற்றியின் வேந்தர் ஹளரத் பெருமானார் (ஸல்) அவர்களின் திரு பற்கள் சஹீதானதைக் கேள்விப்பட்டு தனது அனைத்து பற்களையும் உடைத்துக் கொண்ட நேசர் யார்?

A* உவைசுல் கர்னைன் (ரலி)
B* உகாஷா (ரலி)
C* உதுமான் (ரலி)


45. அறிவு கடல் பெருமானார் ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் திரு முடியின் பெய‌ரில் அழைக்கப்படும் பள்ளிவாசல் எந்த நாட்டில் உள்ளது?

A* இந்தியா
B* பாக்கிஸ்தான்
C* சவூதி அரேபியா


46. பூமான் நபி ரசூலே கரீம் (ஸல்) அவர்களது திருமேனியின் மீது வீசும் நறுமணம் எது?

A* சந்தனம்
B* கஸ்தூரி
C* ஜவ்வாது‌


47. உத்தம நபி ரசூல் (ஸல்) அவர்களின் பேரர்கள் இமாம் ஹஸன்(ரலி) இமாம் ஹுசைன்(ரலி) சொர்க்கத்தின் இளைஞர்களின் தலைவர்கள் ஆவார்கள்

A* சரி
B* தவறு
C* இரண்டும் இல்லை


48. ஹஜ்ஜத்துல் விதா உரை நடைபெற்ற நாள் எது?

A* துல்ஹஜ் பிறை 9-ம் நாள்
B* துல்ஹஜ் பிறை 8-ம் நாள்
C* துல்ஹஜ் பிறை 10-ம் நாள்


49. பெருமானார் ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ளை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அருமை ச‌ஹாபா பெரும‌க்க‌ள் அனைவ‌ரும், கோமான் ந‌பி ர‌சூல் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளிட‌ம் "யார‌சூலுல்லாஹ் எங்க‌ளுடைய‌ தாயும், தந்தையும் உங்க‌ளுக்கு அற்ப‌ண‌மாக‌ட்டும்" என்று கூறுவார்க‌ள்.

A* சரி
B* தவறு
C* இரண்டும் இல்லை


50. பூமான் ந‌பி ர‌சூல்(ஸ‌ல்) அவர்க‌ள் ம‌க்கா வெற்றியின் போது ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ஒட்ட‌க‌த்தின் பெய‌ர் "க‌ஸ்வா"

A* சரி
B* தவறு


51. கோமான் ரசூல் (ஸல்) அவர்கள் பின்னர் நடக்க விருந்த விஷயங்களை இறைவனிடமிருந்து முன்னரே முன்னறிவிப்பு செய்யும் அதிகாரம் பெற்றவராக இருந்தார்கள்.

A* சரி
B* தவறு
C* இரண்டும் இல்லை


52. அருட்கொடையாள‌ன் அல்லாஹ் த‌ன‌து அருள்ம‌றையாம் திருக்குர்ஆனில் ந‌ம் உயிரினும் மேலாகிய‌ கோமான் ந‌பி ர‌சூல் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளை "நிச்ச‌ய‌மாக‌ நீங்க‌ள் அழ‌கான‌ ந‌ற்குண‌முடைய‌வ‌ராக‌வே இருக்கின்றீர்க‌ள்" என்று பூமான் ந‌பி(ஸ‌ல்) புக‌ழ்ந்து கூறும் இறை வ‌ச‌ன‌ம் எது?

A* 68: 4
B* 78: 4
C* 88: 4


53. பூமான் ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ ச‌ஹாபா பெரும‌க்க‌ளிட‌த்தில் ஏதேனும் வின‌வினால் அவ‌ர்க‌ளிட‌மிருந்து "அல்லாஹ்வும் அவ‌ன‌து தூத‌ருமே ந‌ன்கு அறிந்த‌வ‌ர்க‌ள்" என்ற‌ ப‌தில் கிடைக்கும்.

A* சரி
B* தவறு


54. ஈருலக இரட்சகர் ந‌பி ர‌சூல் (ஸ‌ல்) அழைக்கும்போது தொழுதுக் கொண்டிருந்தாலும், தொழுகையை விட்டுவிட்டு அவ‌ர்க‌ளுக்கு ப‌தில் அளிக்க‌ வேண்டும்.

A* சரி
B* தவறு


55. மார்க்க‌த்தின் முத‌ல் க‌ட‌மை அல்லாஹ்வை அறிவ‌து என்று கோமான் ர‌சூல் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.

A* சரி
B* தவறு


56. இறைவ‌ன் த‌ன் இட‌த்திற்கு அழைத்து சந்தித்த‌ ந‌பி யார்?

A* ந‌பி ஈசா (அலை)
B* நபி இபுராஹிம் (அலை)
C* நபி மூசா (அலை)
D* நபி ரசூல்(ஸல்)


57. பெருமானார் நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஈன்றெடுத்த அன்னை ஆமினா (ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் எங்குள்ளது?

A* ஜன்னத்துல் பக்கி
B* அல் அப்வஉ
C* பைத்துல் முக்கந்தஸ்


58. என்னுடைய சஹாபாக்கள் எல்லோரும் விண்ணில் மின்னும் நட்சத்திரங்களுக்கு ஒப்பானவர்கள், அவர்களில் யாரை பின்பற்றினாலும் வ‌ழி த‌வ‌ற‌மாட்டீர்க‌ள் - ந‌பிமொழி.

A* சரி
B* தவறு


59. நபியே உங்களை படைத்திருக்காவிட்டால் அகில உலகங்களையும் படைத்திருக்கமாட்டேன் என்று இறைவன் எதில் கூறுகிறான்?

A* அல்குர்ஆன் ஷரீப்
B* அல் ஹதீஸ்
C* ஹதீஸே குத்ஸி


60. பூமான் நபி ரசூலே கரீம் (ஸல்) தொழுது கொண்டிருக்கும் பொழுது அவர்களின் முதுகில் ஏறி விளையாடிய திருப்பேரர் யார்?

A* இமாம் ஹஸன் (ரலி)
B* இமாம் ஹுசைன் (ரலி)
C* இருவரும்


61. ஆதம் (அலை) அவர்கள் மண்ணுக்கும், நீருக்கும் இடையில் இருக்கும் போதே நான் நபியாக இருந்தேன் என்று கூறிய நபி யார்?

A* நபி ஆதம்(அலை)
B* நபி இபுராஹிம் (அலை)
C* நபி ரசூலே கரீம் (ஸல்)


62. நானிலம் போற்றும் நன்னபி நாயகம் (ஸல்) ஷாம் தேசத்திற்கு சிறுவயதில் வியாபாரத்திற்கு செல்லும்போது அவர்களை இறைத்தூதர் என்று அடையாளம் கண்டு "யூதர்களினால் இவருக்கு அதிக இடைஞ்சல்கள் வரும். ஆனபடியால் இக்குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்" என்ற முன்னறிவிப்பு செய்த கிறிஸ்துவ பாதிரியார் யார்?

A* புஹைரா
B* சுரேகா
C* அப்ரஷா


63. ச‌த்திய‌ம் வ‌ந்துவிட்ட‌து அச‌த்திய‌ம் அழிந்துவிட்ட‌து நிச்ச‌ய‌மாக‌ அச‌த்திய‌ம் அழிந்தே தீரும் இது அல்குர்ஆன் ஷரீபில் எத்த‌னையாவ‌து அத்தியாய‌ம்?

A* 17: 81
B* 18: 81
C* 16: 81


தங்களின் தாயக ஊர் பெயரை பதிவு செய்யவும் *