This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தொழுதல்

வணங்க வேண்டும்
யாரை வணங்குவது?

இறைவனை
வணங்கவேண்டும்.!

அவனைத்தான்
வணங்குகின்றோமா?

சடங்குகளாய்
சரிந்துவிட்டால்
வணங்கும் கணக்கு
சரியாகிவிடுமா?

அறிந்து தெளிந்து
நிறைந்து
வணங்குவது
எப்போது?

வணக்கம்
வெளியிலிருப்பனுக்கு
வழங்கப்படுவதல்ல
நம்மில் நிறைந்தவனுக்கு
அர்ப்பணிக்கப்படுவது.!


- கிளியனூர் இஸ்மத்

திருச்சியில் உதயதின விழா

திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமீஆ யாசீன் அறபுக்கல்லூரியில் சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸ_ல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75வது உதயதின விழா 25.09.2010 சனிக்கிழமை காலையில் 9.30 மணிக்கு மிக சிறப்புடன் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்கள் தலைமைத் தாங்கினார்கள்.

கஸிதத்துல் அவுனிய்யா ஓதப்பட்டது.

இவ்விழாவில் கலீபாக்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

கலீபா ஹபிபுல்லாஹ் ஹக்கியுல்காதிரி,
கலீபா அப்துல்காசிம் ஹக்கியுல்காதிரி,
கலீபா தியாகி சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி,
கலீபா முஹம்மது காலீது ஷா ஹக்கியுல்காதிரி,
கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி,
கலீபா அட்வகேட் லியாகத்அலி ஹக்கியுல்காதிரி,
கலீபா மதுரை உமர் ஹக்கியுல்காதிரி,
மற்றும் தளபதி இராவுத்தர்

இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.பல ஊர்களிலிருந்தும் முரீதுகளான ஆண்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.









தகவல் - முஹம்மது இத்ரீஸ் மதுக்கூர்

எழில்மிகு 75வது உதயதினவிழா













துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கண்மணிநாயகம் ரசூலேகரீம் ஸல்லல்லாஹ_அலைஹி வஸல்லாம் அவர்கள் மீது பூஸரி இமாம் அவர்களால் தொடுக்கப்பட்ட புர்தாஷரீபை ஓதி அதைத் தொடர்ந்து கஸிதத்துல் அவ்னியா ஓதப்பட்டது.
காலை 10 மணிக்கு சங்கைமிகு இமாம் செய்கு நாயகம் அஸ்சையது கலீல்அவ்ன் அவர்களின் எழில்மிகு 75வது உதயதின விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகத்தலைவர் ஏ.பி.சஹாபதீன் தலமைத்தாங்கினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.

அவர்களைத் தொடந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன் பாடினார் அதன் தமிழாக்கத்தை மிக அழகாக
நூருல்ஹக் செய்தார்.

ஞானப்பாடலை மதுக்கூர் தாவுத் அவர்கள் பாடினார்கள்.புகழ்பாடலை மதுக்கூர் சிராஜ்தீன் பாடினார்.

விழாத்தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்.அதைத் தொடந்து பேச்சாளர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

மன்னார்குடி ஷேக்மைதீன்,
மதுக்கூர் ஜெகபர் சாதிக்,
மதுக்கூர் எம்.ஏ.காதிக்,
திண்டுக்கல் அப்பாஸ்ஷாஜகான்,
அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூரி,
மதுக்கூர் சல்மான் (லண்டன்),
மதுக்கூர் அமீர்அலி,
மன்னாடி ஷேக்தாவுது,
மிகஆர்வத்துடன் தங்களின் அனுபவங்களையும் தங்களின் ஞானப் புரிதலைப்பற்றி மிகத் தெளிவாக உரையாடினார்கள்.
இறுதியாக சையதுஅலிமௌலானா அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார்கள்.

பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் நன்றி உரை நல்கினார்.

பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நிர்வாகிகள் காதர்ஷாகிப், இஸ்மத், அதிரை ஷர்புதீன், அப்துல்ரவூப், அபுசாலி,m.s.அப்துல்வஹாப், அப்துல்சுபஹான், அன்வர்உசேன், அபுல்பசர், அமீர்அலி, அப்துல்குத்தூஸ், ஆசிக், அப்துல்ரஹ்மான், முஹம்மது தாவுது, ஜாகிர்உசேன், ஹாஜாஅலாவுதீன், திண்டுகல் ஜெய்னுல்ஆபுதீன், மதார்ஷா, அப்துல்ஹக், நத்தர்ஷா, வழுத்தூர் ரசீது மற்றும் சபை ரூம் நண்பர்கள் அன்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் அபுதாபியிலிருந்து ஜெகபர்சாதிக் பத்தாஹ் எம்.ஏ.சாதிக்அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

























இராத்திபத்துல் காதிரியா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் பிறை 14 லியாழன் வெள்ளி இரவு இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.




மதுக்கூர் சபையில் வியாழன் வெள்ளி இரவு இராத்திபத்துல்காதிரிய்யா வளநாடு அக்பர் ஹக்கியுல்காதிரி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் மதுக்கூர் சுன்னத்வல் ஜமாஅத்தினர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

-தகவல் முஹம்மது இத்ரீஸ் மதுக்கூர்

வணங்கச் சொன்னேன்

வணங்கச் சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்

காணும் யாவும் நானே என்றேன்

காலம் யாவும் நானே என்றேன்



காணமல் இருப்பதும் நானே

எபோதும் இருப்பதும் நானே

காடு மலை கடலும் படைத்தேன்

நட்சத்திர கோளம் படைத்தேன்

சூரியனும் நிலவும் படைத்தேன்

அத்தனையும் படைப்பது எனக்கு

குன் என்ற சொல்லே என்றேன்



வணங்கச் சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்



தோன்றுவது என்னில் என்றேன்

மறைவதும் என்னில் என்றேன்

மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்

மலக்குகளும் நூரில் படைத்தேன்

அதனையும் படைத்து எனக்கு

அடிமைகள் என்றே சொன்னேன்



வணங்கச் சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்



கருவுக்குள் உயிரும் நானே

நெருப்புக்குள் உஷ்ணம் நானே

ஆகாய பெருவெளி நானே

அனைத்திலும் உண்மை நானே



வணங்க சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்



வேதங்களும் விதிகளும் நானே

போதகனும் தூதனும் நானே

போதனைகள் செய்ததும் நானே

வேதனைகள் செய்ததும் நானே

காணும் யாவும் நானே என்றேன்

காலம் யாவும் நானே என்றேன்

காணமல் இருப்பதும் நானே



எபோதும் இருப்பதும் நானே.



BY

வழுத்தூர் Raja Kamal

துபையில் கஸிதத்துல் அவுனியா நிகழ்ச்சி



துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கஸிதத்துல் அவுனியா நிகழ்ச்சி சென்ற 19.09.2010 அன்று முதல் செப்டம்பர் 24ம்தேதி வரையில் தினம் இஷா தொழுகைக்கு பின்னர் ஓதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கண்ணியமிக்க மௌலானாமார்கள், சபையின் நிர்வாகிகள், அங்கத்தினர்கள் அனைவரும் இதில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

நாணயமே எங்கள் நாயகமே.!

பூரண இறையுடனே பூவுலகில் வாழ்ந்திடுவோம்
புனிதமாம் பெருமானாரின் ஷரிஅத்தை பேணிடுவோம்.!

தவ்ஹீது தோட்டத்தினை சரகு வேலி காத்திடுமே
நம் உடபென்னும் வெளித்தோற்றம் நீண்டு வாழ செய்திடுமே.!

கலிமாவின் உண்மையிலே ஹக்கனும் மறைந்துள்ளான்
காட்டித் தந்த நபிநாதர் அவன் தூதர் ஆனாரே.!

இறைவனை கண்டிட்ட நிறைவான மிஃராஜை
தொழுகையில் ஆக்கித் தந்த உயர் குருவே நாயகமே.!

இறைவனும் உயிரினில் கூலியாக வந்திடவே – அருள் நோன்பை
ஆக்கி வைத்த உயர் மதியே நாயகமே.!

பணத்தாசை அழிந்திடவும் ஏழைகள் உயர்வடைந்திடவும்
பொருளாதார உயர்வாம் ஜக்காத் வகுத்த நன்மதியே நாயகமே.!

ஹஜ்யெனும் உயர் பயணத்தில் உம்மத்தினரை ஒருங்கினைத்து
வல்லோனின் கருணையை வாங்கி தந்த மாமதியே நாயகமே.!

உம்மத்தினரின் உயர்வேதான் தன்வாழ்வாய் நினைத்து வாழ்ந்து
உம்மத்தினரை உயர்த்தியவரே உண்மை நாயகமே.!

எத்தனை தூதர்கள் இவ்வுலகில் வந்தாலும் வல்லோனின் கருணை
என்றும் என் சபாஅத் மீதுதான் என்றுரைத்த எம்தலைவர் நாயகமே.!

இறைவனை அறிவதுதான் மார்க்கத்தின் முதல்கடமை என்று
உலகினர்க்கு எடுத்துரைத்த நல்லறிவாம் நாயகமே.!

உங்கள் போல் பொறுமையுடன் எங்கள் துன்பம் சகித்திடும்
எங்கள் குரு கலீல்நாதர் நீடூழி வாழ அருள்வீரே நாயகமே.!

உங்கள் போல் எளிமையுடன் எங்களுடன் வாழ்ந்திடும்
மாமேதை எம்குரு திருக்குடும்பம் சிறந்துவாழ உதவுவீரே நாயகமே.!

தங்களைப்போல் தங்கமதாய் தரணியில் வாழ்ந்து வரும்
மங்கா புகழ் அஃலேபைத்துகள் தலைசிறக்க நாடுவீரே நாயகமே.!

உங்கள் வழிநடந்திடும் உங்கள் உயிர் பேரராம்
எம்குருநாதர் வழிநடக்கும் எங்களையும் காப்பீரே நாயகமே.!

நீங்கள் உரைத்த உண்மைபடி இறைவனை அறிந்திடவே
உயிர்குருவை கைப்பிடித்த எங்கள் வாழ்வை உயர்த்துவீரே நாயகமே.!

உங்கள் புகழ்பாடிவரும் உயர் நன்மக்கள் புகழ் என்றும்
புவிமீதில் சிறந்திடவே அருள்வீரே நாயகமே.!

எங்களுக்காய் வாழ்ந்து இங்கு சொல்லொன்னா துன்பம் பெற்ற
உங்கள் புகழ் பாடிடவே அருள்வீரே நாயகமே.!

இறையோனை அறியாது உங்கள் மேல் கர்வம் கொண்டு
சீரழியும் தீயார் திருந்திட அருள்வீரே நாயகமே.!

இக்கவி எழுதிய உங்கள் திருப்பேரரின் அடிமை முஹம்மது யூசுப்
குடும்பத்துடன் நலவளங்கள் பெற்றிடவே அருள்வீரே நாயகமே.!

ஏகத்துவக் கல்வியினில் ஏற்றம்பெற எம்குருவிடம் தீட்சைபெற்ற
ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையோர்களுக்கு அருள்வீரே நாயகமே.!


-மதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் M.A. ஹக்கியுல்காதிரி

திருச்சியில் புனித புர்தா நிகழ்ச்சி

திருச்சியில் ஆத்மசகோதரர் அப்பாஸ் ஷாஜகான் இல்லத்தில் முரீதுகள் கூடி புனித பத்று மௌலிது ஓதி மஜ்லிசை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கலீபா. எம். சிராஜுதீன்,
தமிழ் மாமணி . கிப்ல ஹல்ரத் மௌலவி. என். அப்துஸ் சலம் ஆலிம்,
மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபு கல்லுரி மேலாளர் எச். அப்துல் கரீம் ஆலிம், மதரச பேராசிரியர்கள் மௌலவி. சயீத் முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி, ரபி உதீன் ஆலிம் நூரி மற்றும் ஏனைய முரீது பிள்ளைகள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முடிவில் சிறப்பு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.








தகவல் : அக்பர் ஷாஜகான் திருச்சி