This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தினம்


Thanks Abulbaser

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை(29.10.2010) காலை 8.30 மணிக்கு புர்தா ஓதப்பட்டது அதன்பின் குத்புல் திலகம் சங்கைமிக்க யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் புனித விசால் தினத்தின் சிறப்புகளை கொண்டாடும் கந்தூரிவிழாவாக மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவிவிழாவிற்கு கண்ணியமிக்க ஜாஹித்அலி மௌலானா முன்னிலை வகிக்க, திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

விழாவின் துவக்கமாக கொடிக்கால்பாளையம் ஹாஜாஅலாவுதீன் கிராத் ஓதி விழாவை துவங்கிவைத்து, வஹ்தத்துல்வுஜீத் அறபு பாடலையும் பாடினார்.
அந்த அறபு ஞானப்பாடலின் தமிழாக்கத்தை ஆலியூர் அபுல்பசர் செய்தார்.
விழா நாயகரைப்பற்றிய புகழ்பாடல்களை மதுக்கூர் சிராஜிதீன் மற்றும் அதிரை அப்துல்ரஹ்மான் பாடினார்கள்.

தலைமைஉரை நிகழ்த்திய சையது அலி மௌலானா அவர்கள் தங்களது உரையில்
"தமிழகத்தில் எந்த ஊரிலும் இல்லாத உரூஸ் கந்தூரிழா திருமுல்லைவாசலில் ஆண்டுதோரும் நடைப்பெறுகிறது.
களியாட்டங்கள், கச்சேரிகள் என்று எதுவுமில்லாமல் ஆயிரக்கணக்கான முரீதீன்கள் ஒன்றுகூடி மௌலுதும், இராத்திபத்துல் காதிரிய்யாவும் ஒதி ஜியாரத்து மட்டுமே நடைபெறுவது மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக திருமுல்லைவாசல் தந்தை நாயகத்தின் கந்தூரிவிழா திகழ்கிறது" என்றும் அவர்களின் தமிழ் இஸ்லாமிய உலகிற்கு அவர்கள் செய்த சாதனைகளையும் எடுத்தியம்பினார்கள்.

அவர்களை தொடர்ந்து மன்னார்குடி M.முஹம்மது மக்கூம் தன்னுடைய உரையில் சங்கைமிகு வாப்பாநாயகத்தின் இந்தியவிஜயத்தில் அவர்களுடன் பல ஊர்களுக்கும் சென்று வந்த அனுபவங்களையும் அவர்களிடமிருந்து பெற்ற ஞான அறிவுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.

திண்டுக்கல் A.அப்பாஸ் சாஜகான் விழாநாயகரின் வாழ்க்கை சரித்திரத்தை நினைவூட்டி உரையாடினார்.

முதுகுளத்தூர் A.அஹமது இம்தாதுல்லாஹ் விழாநாயகரின் சிறப்புகளை பேசினார்.

கீழக்கரை K.A.காதர்சாஹிப் தமிழகத்தில் நடந்துவரும் குழப்பங்களையும் போலி தவ்ஹீத்வாதிகளையும் தோலுறித்து பேசினார்.

கிளியனூர் இஸ்மத் தனது அனுபவத்தையும் மஹான்களின் மகத்துவத்தையும் உரையாற்றினார்.

மதுக்கூர் M.ராஜாமுஹம்மது முதல்முறையாக மேடையேறினார் குருநாதரின் மேல் வைக்கும் நம்பிக்கையைப் பற்றி பேசினார்.

மதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் வழித்தோன்றல்களின் வாழ்க்கைமுறையையும் அதை எப்படி நாம் பேணவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக சபையின் நிர்வாகத்தலைவர் A.P.சஹாபுதீன் தந்தைநாயகத்தின் ஞானவெளிப்பாடுகளையும் அவர்களின் சிறப்புகளையும் கோடிட்டு காட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு அனைத்து முரீதுகளும் அபுதாபி, சார்ஜா, ராசல்கைமா, புஜேரா மற்றும் துபாய் பல இடங்களிலிருந்தும் வந்து கலந்து சிறப்பித்தார்கள் விழா ஹால் நிரம்பி பலர் ரூம்களில் அமர்ந்திருந்தனர்.

இறுதியாக சலவாத்துடன் 11.30 மணிக்கு விழா நிறைவுபெற்றது அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.
-----------------------------------

HAJA ALAVDEEN
------------------------------------

SIRAJUDEEN
----------------------------------

ADIRAI ABDULRAHMAN
----------------------------------

SYED ALI MOULANA
---------------------------------

MOHAMED MAKTHUM
----------------------------------

ABBAS SHAJAHAN
----------------------------------

AHMED HIMDATHULLA
---------------------------------

KADER SHAHIB
---------------------------------

KILIYANUR ISMATH
--------------------------------

M.RAJAMOHAMED
-------------------------------

பொதுச்செயலாளர் A.N.M.MOHAMED YUSEF
--------------------------------

நிர்வாகத் தலைவர் A.P.SAHABUDEEN
-------------------------------
இன்றைய நிகழ்வுகள்


சிங்கப்பூரில் புனித கந்தூரிவிழா

சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 24.10.2010 ஞாயிறு திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்குப் பின்
குத்புல் பரீத் சங்கைமிகு யாசீன் மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் புனித விசால்தின கந்தூரிவிழாவினை மிக விமர்சையாக ஆன்மீக சகோதரர் சம்சுல் மற்றும் அப்பாஸ் அவர்களில் இல்லத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்தியா கொடிக்கால்பாளையத்திலிருந்து கேபிஎம்.பசீர்ஹகமது கலந்து தந்தைநாயகத்தின் வரலாற்று சிறப்புகளை பேசினார்.

நிர்வாகத்தலைவர் நிஜாமுதீன் தலைமையில் மற்றும் சுபுஹான், சாதிக் இன்னும் ஆன்மீகச் சகோதரர்கள் கலந்து அருளைப்பெற இவ்விழாவை சிறப்பித்தார்கள்
இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது