This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

மிஉராஜ் இல்லாதவருக்கு தொழுகையில்லை

அல்லாஹ்த்தாஅலா சொன்னான்

மிஉராஜானது நானல்லாத சர்வ வஸ்துக்களையும் விட்டு அகன்று விடுதலாகும். மிஉராஜின் பூரணமானது பார்வை மழுங்கவில்லை இன்னம் அது மட்டைக் கடக்கவுமில்லை என்ற குர்ஆனிய திருவாக்கியத்தின் கருத்தாகும்.

விளக்கம்-

மிஉராஜ் என்பது இறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது. இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்தி அவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவுமொன்றே அதற்கும் எனக்கும் பிரிவுமில்லை. நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய் இறையில் அருப்பணிப்பதே மிஉராஜ் எனும் உயர்ச்சியாகும். இந்த மிஉராஜின் முழுமை இறைவனை முழுமையாய் பார்வை மழுங்காமற் காண்டலாகும்.

பார்வை மழுங்கலென்பது இறைவனைப் பிரிவு பிரிவாய் சிறிதுசிறிதாய் எண்ணி நானும் நீயும் வேறு எனும்நிலையில் எண்ணத்தைச் சின்னபின்னப்படுத்தி ஒரு பொருளைக் கூறுபடுத்துவது போல் இறைவனைக் கூறுபடுத்திச் சித்திரவதை செய்யும் நிலையாகும். இந்த உயர்ச்சியின் நிலை மட்டையும் கடக்காது. அனைத்தும் நானே எனும் மன்சூருல் ஹல்லாஜ்(ரலி) அவர்களின் உன்னத நிலையை அடைவதாகும்.

அனைத்தும் நானே நானே ஹக்கு எனும் நிலையை மட்டைக்கடக்காத உண்மை நிலையாகும்.
நானே இறைவன் என்று மமதையுடன் பிர்அவுன் கூறிவந்த நிலைமையே மட்டைக் கடந்த நிலையாகும். எனவே இதில் இரண்டு நிலையுண்டு ஒரு நிலை ஹக்கையே அறியாது மமதைக் கொண்டு தானே இறைவன் என்று கூறிக் கொண்டது.

இரண்டாவது நிலை அனைத்தும் நானே என்று இறைவனை அறிந்து பூரணமாய் இரண்டறக் கலந்து மாறா இன்பமடையும் நிலை. அறியாத மூடர்கள் இறைவனைக் கூறுபோட்ட இறை தண்டனையை அடையும் நிலையையும் இறையின்பத்தை அடையும் நிலையையும் இரண்டாகக் கலந்து காண்பதோடு உண்மைக்கு மாறாகவும் பேசித்திரிவது பித்துபிடித்த மந்த நிலையாகும்.

கௌதுல் அஉளமே! என்னிடத்தில் மிஉராஜ் இல்லாதவனுக்கு தொழுகையே இல்லை.
விளக்கம்- தொழுகை என்பது எது என்று முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழுகையுடையோரின் தொழுகையே மிஉராஜாகும். அல்லாஹ் இடத்தில் மிஉராஜ் இல்லாதோருக்கு தொழுகையில்லை. எவன் மிஉராஜை மறுத்தானோ அவனுக்கு இறையிடத்துத் தொழுகையுமில்லை. எனவே எம் மூரீதுகள் மிஉராஜைவுடையவர்களாக வாழ்வார்களாக ஆமீன்.!

-மறைஞானப்பேழை (2011 சூன்)
ரிஸாலா கௌதிய்யா நூலிலிருந்து…

இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி





துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 16/06/2011 வியாழன் மாலை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்குப் பின் இராத்திப்த்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன்றைய நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை அப்பாஸ் தப்ரூக் வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின் இஷா தொழுகை நடைபெற்றது.

புனித உம்ரா வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சஹாபுதீன் அவர்கள் தனது குடும்பத்தாருடன் புனித உம்ரா சென்றுவிட்டு 14/06/2011 அன்று திரும்பி உள்ளார்கள்.
அவர்களை வரவேற்கும் முகமாக சபை சகோதரர்களும் நிர்வாகத்தினரும் 15/06/2011 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் அவர் இல்லம் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.

முஹம்மது மாதிஹ் அவர்களுக்கு ஜியாவுதீன் மௌலானா மற்றும் அதிரை ஷர்புதீன், ஷேக்தாவுது பொன்னாடை அணிவித்தார்கள்

கலீபா ஏ.பி.சஹாபுதீன் அவர்களுக்கு மூத்த சகோதரர் எம்.எஸ்.அப்துல்வஹாப் மற்றும் சாகுல்ஹமீது பொன்னாடை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முஹம்மது யூசுப், கிளியனூர் இஸ்மத், அதிரை அப்துல்ரஹ்மான், ஜாகிர்உசேன், அபுல்பசர், அக்பர் ஆகியோர்களும் கலந்து தங்கள் வாழ்த்தினை வழங்கினார்கள்.
வருகைத்தந்த சகோதரர்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் மற்றும் பேரிச்சைப்பழம் வழங்கப்பட்டது.



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்க...ள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.



--------------------------------------------------------------------------



Jinna Rahman 11:04am Jun 7



அபூ ஹாஸிம்(ரஹ்), ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.



'ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!' எனக் கூறிவிட்டு, 'புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!" என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

அப்பெண்மணி,

'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!" என்றார். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள். (அவர்கள் உள்ளே சென்று விட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருமனிதர். 'இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'சரி தருகிறேன்!" என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து அதைச் சுருட்டி, (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், 'நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே!' எனக் கூறினார். அதற்கு அம் மனிதர், 'நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்!" என்றார். அது அவ்வாறே, அவரின் கஃபனாக ஆனது!

Volume :2 Book :34 (2093)



--------------------------------------------------------------------

அண்ணல்நபிகளின் அழகிய பொன்மொழி-2

நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்கமாட்டார்கள். அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள்.
யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

பராஉ (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி - 3783

-------------------------------------------------------------------------

என்னைக்கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவரைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் மொழிந்தார்கள்.

அறிவிப்பவர்: செய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி, மிஷ்காத்

-------------------------------------------------------------------------

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:
" மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ...ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய்ப்பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.

(திர்மிதி: 2676, இப்னு மாஜா: 42, அபூதாவுத்: 4607, முஸ்னத் அஹ்மத் : 4 - 126, மிஷ்காத்:165

----------------------------------------------------------------------------

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:
" எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்."
மிஷ்காத்: 6012, முஸ்னத் அஹ்மத்: 1 - 26

-----------------------------------------------------------------------------

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (சஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்...து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்-. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹுல் புகாரி - 3651

--------------------------------------------------------------------------

மாதாந்திரக் கூட்டம்

ஜுன் மாதக்கூட்டம் வியாழன்கிழமை 02/06/2011 மாலை 8.45 மணிக்கு துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மதிப்பிற்குரிய ஆத்மசகோதரர் ஜனாப் M.S.அப்துல்வஹாப் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கு கண்ணியமிக்க ஜனாப் சையது அலி மௌலானா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த நிகழ்விற்கு அமீரகத்தில் இயங்கும் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளரும், காயல் நலமன்றம் மற்றும் இக்ராஹ் கல்வி அமைப்பின் பொறுப்பாளருமான மதிப்பிற்குரிய சகோதரர் ஜனாப் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத் கோட்டக்குப்பம் முஹைய்தீன் அவர்கள் ஓதி அமர ஹுவல்வுஜுத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது அவர்கள் பாடினார்கள்.

அதன் தமிழாக்கம் ஆலியூர் அபுல்பசர்
நபிப்புகழ் பாடல் மதுக்கூர் சாகுல் ஹமீது

ஞானப்பாடல் மதுக்கூர் சிராஜ்தீன்
தலைமை உரையை துக்கம் சையதுஅலி மௌலானா



மதுக்கூர் ஹிதயத்துல்லாஹ் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை கூறி அதன் பொருளையும் விளக்கி பேசினார்
மதுக்கூர் நஜ்முதீன் சுயசிந்தனையை ஏற்படுத்தும் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கூறினார்
கிளியனூர் இஸ்மத் தன்னை அறியும் ஞானமே இஸ்லாத்தின் முக்கியக் கடமை என்பதை வலிறுத்தி பேசினார்.
சிறப்பு பேச்சாளர் காயல் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் சபாஅத்தை பற்றியும் பல விருந்தினர்களை பேசுவதற்கு இச்சபைக்கு நான் அழைத்து வந்திருக்கிறேன் அதன் பொருட்டால் இங்கு நான் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று எடுத்தியம்பினார்.




பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையில் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் மீதும் கொண்ட நேசத்தைப்பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசாக பர்ஜன்ஸி மௌலூது நூலை வழங்குகிறார்கள்
காயல் அப்துல்காதிர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்
தௌபா பைத் ஓதப்பட்டு இனிதே இம்மாதக்கூட்டம் நிறைவு பெற்றது
இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.