This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சமய நல்லிணக்க விழா


அனைவருக்கும் இணக்கம்!
என்ன?
வணக்கமா?இணக்கமா?
எழுத்துப் பிழையா?
வார்த்தை தடுமாற்றமா?
இல்லை!...

வணக்கம் சொல்வதில்
சிறிது ஆபத்தும்
கலந்து இருக்கிறது!

காந்திஜியைக் கொன்ற
கோட்சேயின் கையில்
மறைந்திருந்த
துப்பாக்கி போல்!

இன்று
வணக்க மனிதர்களிடம்தாம்
பிணக்கும் மிகைத்திருக்கிறது!
வணக்கம் என
மனதார-வாயாராக் கூறும்
தகுதி வரும்வரை
சிறிது காலத்துக்குச் சொல்வோம்
இணக்கம்!
சொல்லப்போனால்
இணக்கம் தான் வணக்கமே!


இது காந்திக்குப் பிடித்த விழா!
காந்திகிராமத்தில்
அவரின் மடியிலேயே நடக்கும்
பொருத்தமான விழா!
அவர்தான்
சமய நல்லிணக்கத்திற்காக
சாவை சந்தித்த சத்தியமனிதர்!
காந்தி வாழ்கிறார்...இன்னும்...
நம் வடிவங்களில்!அதனால்தான்
அவரது நல்லிணக்க விதைகளை
நாட்டில் நாம் விதைக்கிறோம்!
காந்தி வாழலாம்-ஆனால்
கோட்சேக்கள் வாழ்வதில்
நியாயம் இருக்கிறதா?
இந்திய விடுதலை பெற்று
அறுபதாண்டுகள் கடந்த பின்னும்
வேற்றுமைச் சிந்தனைகளின்
வேர்கள் அழியவில்லையே!
அதனால்தான்
காந்தியை
காந்தி நகரிலிருந்து
காந்திகிராமத்திற்கு
அழைத்திருக்கிறோம்!
கோட்சேக்கள்
தலை எடுக்கும் போதெல்லாம்
காந்தியும் அவதரிப்பார்
அழியாமல்!மறையாமல்!

அன்பர்களே!
நாம் அனைவரும்
இதயங்களால் நடந்து வந்து
இங்கு அமர்ந்திருக்கிறோம்!
கை குலுக்கினால்
பிரிந்து விடுமென்று
மெய்குலுக்கி மனம்
விரிந்து மலர்ந்திருக்கிறோம்!
சமூகத்தில் அவ்வப்போது
பற்றிக்கொள்ளும் நெருப்பு
ஊரையே அழித்துவிடக் கூடாதென்ற
சமூக அக்கறை!

ஒருவருக்கொருவர்
கொடுத்து வாங்குவதற்காக
சம்பந்திகள் போல இங்கு
சங்கமித்திருக்கிறோம்!
சமயங்கள் எனும்
சமையலறையில்
அவரவர் தயாரித்த
அறுசுவை உணவை
பரிமாறிக் கொள்ள
ஆவலோடு கூடியுள்ளோம்!

இஸ்லாமிய பிரியாணி
சனாதனப் பொங்கள்
கிறித்துவ அப்பம்-என
வகை வகையாக
வண்ண வண்ண உணவுகள்!
பசிக்கும் ஒருவன்
இதில் எதைச் சாப்பிட்டாலும்
நிச்சயமாக பசி அடங்கும்!
உணவுதான் வேறுவேறு தவிர
உள்ளடக்கம் ஊட்டச்சத்துதான்!
இறைவனை அடையவேண்டுமென்ற
மனிதனின் பசியை அடக்கவே
மதங்கள்-மார்க்கங்கள் தோன்றின!
அந்தப் பசியே
வெறியாக வெடிக்கும்போது
பத்தும்-அன்பு-பண்பு-நட்பு-பாசம்
என பத்தும் பறந்து போகிறது!
பக்தி கத்தியாகப் பரிணாமம் பெறுகிறது!
சடங்கு எனும் கிடங்கில் விழும்போது
அறிவு முடங்கிப் போகிறது!
அரிசியை உண்ண ஆவல் கொண்டவன்
ஆத்திரத்தில் அவசரம் அவசரமாக
உமியை உண்டு
வயிறு ஊதி அலைகின்றான்!
பயிரை வளர்ப்பதற்காகப் பாத்திகட்டி
களையை வளர்க்கிறான்!
முத்துக்களை எறிந்துவிட்டு
சிப்பிகளைச் சேகரிக்கிறான்!
பூக்களைப் பிய்த்து எறிந்து
நாரை அணிந்து
நாட்டியமாடுகிறான்.!
மதங்களின் உள்ளடக்கமான
தத்துவ மாத்திரைகளை எறிந்து விட்டு
கனமாக-அதன்
அட்டைகளை விழுங்குகிறான்.!
அமைதியான வடிவமான இறைவனிடமிருந்து
அன்பு வடிவமான மனிதப் புனிதர்களின்
வழியாக வந்ததே
மதங்கள்-மார்க்கங்கள்-அறநெறிகள்
ஆண்டவனோ-அவர்களோ
அன்பதைத் தவிர வேறு எதையும்
போதித்ததில்லை.!

ஆனால்
காஷ்மீர்-அமர்நாத்
குஜராத்-அகமதாபாத்
ஒரிஸ்ஸா-பெங்களுர்
குடைப்பாறைப்பட்டி-நத்தம்
எதை உணர்த்துகின்றன?
பகுத்தறிவுப் பகலவன்
பெரியார் உரைத்ததைப்போல்
மதங்கள்-வேதங்கள்-தோற்றுவிட்டனவா?
அவர் அழகாக சொன்னார்!
வேதங்கள் தோற்றுவிட்டன!
அதன் நீதி போதனைகளை-அதை
கெட்டியாகப் பற்றி நிற்போரே
பின்பற்றவில்லையே!-என
சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா?
வேதங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்-ஆனால்
வாழ்கிறோமா என்பதே கேள்விக்குறி!
ஏதோ வாழ்வோம் என
ஒரு வழியை தேர்ந்து கொண்ட
ஆன்மீகவாதிகளுக்கு
அதிகப் பொறுப்புகள் உண்டு!
அவர்கள் தேர்ந்து கொண்ட
அறவழித் தொகுப்பின்
சாட்சிகள் அவர்கள்!


ஒரு முஸ்லிம் குர்ஆனின் சாட்சி
ஓர் இந்து கீதையின் சாட்சி
ஒரு கிருத்தவர் பைபிளின் சாட்சி
ஆனால்
சாட்சிகளே பொய் சாட்சியாகலாமா?
குர்ஆன் கூறுகிறது
அனைவரும் ஆதம் பெற்ற மக்கள்!
ஆதமும் ஏவாளும்
இந்த அவைக்கு வருகை தந்தால்
அந்தப் பெற்றோரின் பார்வையில் நாம்
அன்பான பிள்ளைகளாகத்தாமே
தெரிவோம்!
கண்ணன் இங்கு காட்சி தந்தால்
இத்தனை பேரும்
என் உயிர் அல்லவா? என ரசிக்கமாட்டாரா?
இயேசு பெருமான் இங்கு வந்தால்
என் ஒளியிலிருந்து ஏற்றப்பட்ட
எத்தனை மெழுகுவர்த்திகள் என
வியக்கமாட்டாரா?


இந்தப் பார்வை
நம்மிடம் ஏன் இல்லை?
நாம் வேறு வேறாக எண்ணுகிறோம்!
நாம் வேறல்ல
விலக முடியாமல்
பின்னிப் பிணைந்து கிடக்கும்
வேர்கள் நாம்!
உங்கள் நுரையீரல் வரை
சென்று திரும்பிய சுவாசக் காற்றை
நான் சுவாசிக்கிறேன்.!
உங்கள் குருதியை உருவாக்கும்
உணவுப் பொருள்தான்
என் இரத்தத்தையும் உருவாக்குகிறது!
நீங்கள் வாங்கியச் சென்ற
அரிசி மூட்டையில்
பாதியை நான் வாங்குகிறேன்!
நீங்கள் வாங்கிய கடையில்
முதல் வடை நீங்கள் வாங்கினால்
கடைசி வடை எனக்குக் கிடைக்கிறது!
மின்வெட்டில்
இருவரும் இருட்டில் தவிக்கிறோம்!
உங்களைக் கடித்துக்
கொண்டிருக்கும் போதே
என்மீது ஒரு கண் வைத்திருக்கிறது
ஏக்கம் தீராத கொசு!
இந்த அரங்கம் நிரம்ப
அணுக்களின் தொகுப்பாகத்தான்
நாம் அமர்ந்திருக்கிறோம்!
ஒரே பிரபஞ்சம்
ஒரேபூமி-ஒரேசூரியன்-ஒரேசந்திரன்
ஒரேநாடு-ஒரேஊர்
ஒரே நகராட்சிக் குடிநீர்
ஒரே காலை-ஒரே மாலை
அப்படியானால்
வேறுவேறு என்பது வேடிக்கையல்லவா?
சோலை ஒன்று
மலர்கள் பல வண்ணங்களில்
பலவாசத்தில்!
மலர்களின் கூட்டணிதானேசோலை!
மனிதர்களின் கூட்டணிதானே சமூகம்!


அன்பர்களே!
அரசியல்வாதிகளே!
கொள்கையைப் புதைத்து
கூட்டணி சேரும்போது
ஆன்மீகவாதிகளாகிய நாம்
இணக்கம் காண முடியாதா?
அவர்கள் தங்கள்
உயிராக மதிக்கும்
கொள்கைகளையே
ஒத்திவைக்கும்போது
நாம் மயிராக மதிக்கவேண்டிய
தீவிர எண்ணங்களை
தீய்த்துவிட முடியாதா?
விட்டுக் கொடுத்தவர்
கெட்டுப் போனதில்லை!
எட்டி உதைத்தவர்
என்றும் நிலைத்ததில்லை!
நாம்
எட்டி உதைப்பவரின் காலடியிலும்
சகிப்புத்தன்மை-சமரசம் எனும்
சந்தன மலர்களைத் தூவுவோம்!
அது அவர்களின்
சிந்தனை உணர்வுகளைத் தூண்டலாம்!
இதுவே சமயங்களின் முடிவு
வேதங்களின் விடிவு!
காந்தியின் கனவு!
நபிகள் நாயகத்தின் நனவு
அனைவருக்கும் இணக்கம்!
அல்ல...அல்ல...
வணக்கம்.!

---திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற மத நல்லிணக்க விழாவில் எஸ்.உசேன் முஹம்மது ஹக்கியுல்காதியுல் மன்பயீ வாசித்த கவிதை---

தாகிபிரபம்...2

இறை கேட்ட கேள்வி
மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்…?

மகானின் பதில்
இறைவா…! குழந்தை பிறந்தபோது அது பரிபூரணத்திலிருந்து ( உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது . அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீக கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை.
அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினை புரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும் நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று.
தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது.
தன் முன்னைய நிலையை மறந்து நான்வேறு நீவேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தூன் மனம் போன போக்கில் போகவும் அழிவு வேலைகள் செய்யவும் உண்மைக்கு மாறாக நடக்கவும் மானிட நேயம் ஐக்கியம் இரக்கம் முதலானவைகளை உதறித்தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான்.
உன்னிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால் தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்து விடாது தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன் இந்நிலையடைந்தமையால் தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டவன். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன் பூரணமனிதனானான். இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.
-மகான் இமாம் கலீல்அவுன் மௌலானா

தாகிபிரபம்

இறைவா!
ஆம் உண்மைதானே
என்னில் உன்னை நான் பார்க்கிறேன்
நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய்
இதிற்றான் நான் நீ –என்னும் பிரிந்த பார்வை வந்தது
அதில்
நான் நீ எனப் பாராமலும்
முழுமையாக காண்பதே முழுமையாகும்
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிரிவின்றி எப்போதும்
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
பார்த்துக் கொண்டிருப்பதே
உண்மையான முழுத் தோற்றமாகும்

இப்போதும் எப்போதும்
யான் உன்னிலிருந்து
வெளியான போதும்
எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக் கொண்டு
பரிபூரணத்தில்
கடலில்அலை கலப்பது போலக் கலந்து
இலயித்து நிலைத்து நிற்பதிலே
இன்பம் கண்டிருப்பின்
வெளியாகதிருப்பினும்
வெளித்தோன்றியிருப்பினும்
இரண்டும் பிரமஇரண்டறக்கலந்த
சூனிய அமாவான அந்தகமான
தத்துவ மசி நிலையாகும்
சூனியமாய் எப்படியிருந்தோமோ அப்படியே
இப்போதுமிருக்கிறோம் எனும்
நிலை கொள்ளல் வேண்டும்
அதுவே சாலச் சிறந்தது…!

-இமாம் ஸய்யிது கலீல் அவுன் மௌலானா அவர்கள் எழுதிய தாகி பிரபபம் நூலிலிருந்து

புனித பதுறு சஹாபாக்களின் திருநாமங்கள்


எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹ_ அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் இஸ்லாம் பரவுவதற்கும் முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி.அறுநூற்றிருபத்து நான்காம் ஆண்டு ஹிஜ்ரி இரண்டாம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள் 313 பேர் என்றும் இன்னும் வேறு பல வேறுபாடுகளும் கூறுகின்றனர்.
எதிரிகளின் தொகை ஏறக்குறைய ஆயிரம் என்றனர்.
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.



அந்த புனிதப் போரில் கலந்துக் கொண்ட 345 உத்தம சஹாபாக்களின் திருநாமங்கள்
1. அபுபக்ர்(ரலி) 2. உமர் (ரலி) 3. உதுமான் (ரலி) 4. அலிய் (ரலி) 5. தல்ஹா (ரலி)6. ஸ_பைர் (ரலி) 7. அப்துர்ரஹ்மான் (ரலி) 8. ஸஉது (ரலி) 9. ஸஈத் (ரலி) 10. அபூஉபைதா (ரலி)11. அனஸ் (ரலி) 12. அர்கம் (ரலி) 13. அனஸாஹ் (ரலி) 14. இயாஸ் (ரலி) 15. உனைஸ் (ரலி)16. இயாஸ் (ரலி) 17. அனஸ் (ரலி) 18. உபய் (ரலி) 19. அஸ்அத் (ரலி) 20. அவ்ஸ் (ரலி)21. பிலால் (ரலி) 22. புஜைர் (ரலி) 23. பஹ்ஹாஸ் (ரலி) 24. பஸ்பஸாஹ் (ரலி) 25. பராஉ (ரலி)26. பஷீர் (ரலி) 27. பிஷ்ர் (ரலி) 28. தமீம் (ரலி) 29. தமீம் (ரலி) 30. தமீம் (ரலி) 31. ஸக்ப் (ரலி) 32. ஸஉலபாஹ் (ரலி) 33. ஸாபித் (ரலி) 34. ஸாபித் (ரலி) 35. ஸாபித் (ரலி)36. ஸாபித் (ரலி) 37. ஸாபித் (ரலி) 38. ஸாபித் (ரலி) 39. ஸஉலபாஹ் (ரலி) 40. ஸஉலபாஹ் (ரலி) 41. ஜபுர் (ரலி) 42. ஜாபிர் (ரலி) 43. ஜூபைர் (ரலி) 44. ஜாபிர் (ரலி) 45. ஜூபைர் (ரலி) 46. ஜாபிர் (ரலி) 47. ஜப்பார் (ரலி) 48. ஹம்ஸாஹ் (ரலி) 49. ஹாதிப் (ரலி) 50. ஹாதிப் (ரலி) 51. ஹ_ஸைன் (ரலி) 52. ஹர்ஸ் (ரலி) 53. ஹர்ஸ் (ரலி) 54. ஹர்ஸ் (ரலி) 55. ஹர்ஸ் (ரலி) 56. ஹர்ஸ் (ரலி) 57. ஹர்ஸ் (ரலி) 58. ஹர்ஸ் (ரலி) 59. ஹர்ஸ் (ரலி) 60. ஹர்ஸ் (ரலி) 61. ஹாரிஸாஹ் (ரலி) 62. ஹாரிஸாஹ் (ரலி) 63. ஹாரிஸ் (ரலி) 64. ஹாரிஸ் (ரலி) 65. ஹ_ரைஸ் (ரலி) 66. ஹ_பாப் (ரலி) 67. ஹபீப் (ரலி) 68. ஹராம் (ரலி) 69. ஹம்ஸாஹ் (ரலி)
70. காலித் (ரலி) 71. கப்பாப் (ரலி) 72. குனைஸ் (ரலி) 73. குஸைம் (ரலி) 74. கௌலிய் (ரலி) 75. கவ்வாப் (ரலி) 76. கிதாஷ் (ரலி) 77. கிராஷ் (ரலி) 78. காரிஜா (ரலி) 79. கல்லாத் (ரலி) 80. கல்லாத் (ரலி) 81. கல்லாத் (ரலி) 82. கல்லாத் (லரி) 83. காலித் (ரலி) 84. குலைத் (ரலி) 85. கலீபா (ரலி) 86. குபைப் (ரலி) 87. திஷ்ஷிமாலைன் (ரலி) 88. தக்வான் (ரலி) 89. ரபீஆ (ரலி) 90. ரிப்இய் (ரலி) 91. ரிபாஅத் (ரலி) 92. ராபிஉ (ரலி) 93. ராபிஉ (ரலி) 94. ராபிஉ (ரலி) 95. ராபிஉ (ரலி) 96. ராபிஉ (ரலி) 97. ரிபாஆ (ரலி) 98. ரிபாஆ (ரலி) 99. ரிபாஆ (ரலி) 100. ராஷித் (ரலி) 101. ரபீஉ (ரலி) 102. ருஹைலா (ரலி) 103. ஸைத் (ரலி) 104. ஸைத் (ரலி) 105. ஸைத் (ரலி) 106. ஸியாத் (ரலி) 107. ஸியாத் (ரலி) 108. ஸியாத் (ரலி) 109 . ஸைத் (ரலி) 110. ஸைத் (ரலி) 111. ஸைத் (ரலி) 112. ஸாஇப் (ரலி) 113. ஸாலிம் (ரலி) 114. ஸபுரா (ரலி) 115. ஸினான் (ரலி) 116. ஸ_ஹைல் (ரலி) 117. ஸவைபித் (ரலி) 118. ஸஉத் (ரலி) 119. ஸஉத் (ரலி) 120. ஸஉத் (ரலி) 121. ஸஉத் (ரலி) 122. ஸஉத் (ரலி) 123. ஸஉத் (ரலி) 124. ஸிமாக் (ரலி) 125. ஸ_ப்யான் (ரலி) 126. ஸல்மா (ரலி) 127. ஸல்மா (ரலி) 128. ஸல்மா (ரலி) 129. ஸாலிம் (ரலி) 130. ஸஹ்ல் (ரலி) 131. ஸஹ்ல் (ரலி) 132. ஸஹல் (ரலி) 133. ஸ_ஹைல் (ரலி) 134. ஸஉத் (ரலி) 135. ஸஉத் (ரலி) 136. ஸஉத் (ரலி) 137. ஸஉத் (ரலி) 138. ஸஉத் (ரலி) 139. ஸிமாக் (ரலி) 140. ஸ_ப்யான் (ரலி) 141. ஸ_ராகா 142. ஸ_ராகா (ரலி) 143. ஸ_லைம் (ரலி) 144. ஸ_லைம் (ரலி) 145. ஸ_லைம் (ரலி) 146. ஸ_லைம் (ரலி) 147. ஸலீத் (ரலி) 148. ஸினான் (ரலி) 149. ஸவாத் (ரலி) 150. ஸவாத் (ரலி) 151. சுஜாஉ (ரலி) 152. சம்மாஸ் (ரலி) 153. ஷரீக் (ரலி) 154. ஸப்வான் (ரலி) 155. ஸ_ஹைப் (ரலி) 156. ஸபீஹ் (ரலி) 157. ஸைபிய் (ரலி) 158. ளஹ்ஹாக் (ரலி) 159. ளஹ்ஹாக் (ரலி) 160. ளம்ரா (ரலி) 161. துலைப் (ரலி) 162. துபைல் (ரலி) 163. துபைல் (ரலி) 164. துபைல் (ரலி)
165. ஆகில் (ரலி) 166. உபைதா (ரலி) 167. உமைர் (ரலி) 168. உமைர் (ரலி) 169. அப்துல்லாஹ் (ரலி) 170. அப்துல்லாஹ் (ரலி) 171. அப்துல்லாஹ் (ரலி) 172. அப்துல்லாஹ் (ரலி) 173. அப்துல்லாஹ் (ரலி) 174. அப்துல்லாஹ் (ரலி) 175. அய்யாள் (ரலி) 176. உஸ்மான் (ரலி) 177. உகுபா (ரலி) 178. உகுபா (ரலி) 179. உக்காஷா (ரலி) 180. ஆமிர் (ரலி) 181. ஆமிர் (ரலி) 182. ஆமிர் (ரலி) 183. உம்மார் (ரலி) 184. அம்று (ரலி) 185. அம்று (ரலி) 186. அம்று (ரலி) 187. அம்று (ரலி) 188. அம்று (ரலி) 189. அம்று (ரலி) 190. ஆமிர் (ரலி) 191. உம்மாரா (ரலி) 192. உவைம் (ரலி) 193. அப்பாத் (ரலி) 194. உபைத் (ரலி) 195. உபைத் (ரலி) 196. உபைத் (ரலி) 197. அப்துர்றஹ்மான் 198. அப்துல்லாஹ் (ரலி) 199. அப்துல்லாஹ் (ரலி) 200. அப்துல்லாஹ் (ரலி) 201. அப்துல்லாஹ் (ரலி) 202. அப்துல்லாஹ் 203. ஆஸிம் (ரலி) 204. ஆஸிம் (ரலி) 205. ஆஸிம் (ரலி) 206. அவ்ப் (ரலி) 207. உமைர் (ரலி) 208. உமைர் (ரலி) 209. உமைர் (ரலி) 210. உம்மாரா (ரலி) 211. உபைத் (ரலி) 212. அப்துரப்பிஹி (ரலி) 213. அப்தா (ரலி) 214. அப்துல்லாஹ் (ரலி) 215. அப்துல்லாஹ் (ரலி) 216. அம்று (ரலி) 217. அம்று (ரலி) 218. அம்று (ரலி) 219. அம்று (ரலி) 220. அம்று (ரலி) 221. அம்று (ரலி) 222. ஆமிர் (ரலி) 223. ஆமிர் (ரலி) 224. ஆமிர் (ரலி) 225. ஆமிர் (ரலி) 226. ஆஇத் (ரலி) 227. ஆஸிம் (ரலி) 228. உஸைமா (ரலி) 229. இஸ்மா (ரலி) 230. அப்ஸ் (ரலி) 231. அப்பாத் (ரலி) 232. உபாதா (ரலி) 233. அப்துல்லாஹ் (ரலி) 234. அப்துல்லாஹ் (ரலி) 235. அப்துல்லாஹ் (ரலி) 236. அப்துல்லாஹ் (ரலி) 237.அப்துல்லாஹ் (ரலி) 238. அப்துல்லாஹ் (ரலி) 239. அப்துல்லாஹ் (ரலி) 240. அப்துல்லாஹ் (ரலி) 241. அப்துல்லாஹ் (ரலி) 242. அப்துல்லாஹ் (ரலி) 243. அப்துல்லாஹ் (ரலி) 244. அப்துல்லாஹ் (ரலி) 245. அப்துல்லாஹ் (ரலி) 246. அப்துல்லாஹ் (ரலி) 247. அஸ்லான் (ரலி) 248. உத்பான் (ரலி) 249. உத்பா (ரலி) 250. உத்பா (ரலி) 251. உத்பா (ரலி) 252. உகுபா (ரலி) 253. உகுபா (ரலி) 254. அதிய் (ரலி) 255. அதிய்யா (ரலி)
256. கன்னாம் (ரலி) 257. பாகிஹ் (ரலி) 258. பர்வத (ரலி) 259. குதாமத (ரலி) 260. கதாதா (ரலி) 261. குதுபா (ரலி) 262. கைஸ் (ரலி) 263. கைஸ் (ரலி) 264. கைஸ் (ரலி) 265. கஉபு (ரலி) 266. கஉபு (ரலி) 267. லிபுதா (ரலி) 268. மிஹ்ஜஉ (ரலி) 269. மாலிக் (ரலி) 270. மாலிக் (ரலி) 271. மிதுலாஜ் (ரலி) 272. மஸ்அபு (ரலி) 273. மஉமர் (ரலி) 274. மர்ஸத் (ரலி) 275. மிகுதாது (ரலி) 276. மிஸ்தஹ் (ரலி) 277. மஸ்ஊத் (ரலி) 278. முஹ்ரிஸ் (ரலி) 279. முஅத்தப் (ரலி) 280. மஉன் (ரலி) 281. முபஷ்ஷிர் (ரலி) 282. முஹம்மத் (ரலி) 283. முன்திர் (ரலி) 284. முன்திர் (ரலி) 285. மாலிக் (ரலி) 286. மாலிக் (ரலி) 287. மஉன் (ரலி) 288. முஅத்தப் (ரலி) 289. முஅத்தப் (ரலி) 290. மஸ்ஊத் (ரலி) 291. முஅவ்விது (ரலி) 292. மு அவ்விது (ரலி) 293. முஆது (ரலி) 294. முஆது (ரலி) 295. முன்திர் (ரலி) 296. முஹர்ரிஸ் (ரலி) 297. முலைல் (ரலி) 298. நள்ர் (ரலி) 299. நுஉமான் (ரலி) 300. நுஉமான் (ரலி) 301. நுஉமான் (ரலி) 302. நுஉமான் (ரலி) 303. நுஉமான் (ரலி) 304. நுஉமான் (ரலி) 305. நுஎஉமான் (ரலி) 306. நுஉமான் (ரலி) 307. நௌபுல் (ரலி)
308. வாகித் (ரலி) 309. வஹபு (ரலி) 310. வஹபு (ரலி) 311. வதீஆ (ரலி) 312. வதுகா (ரலி) 313. ஹானிஉ (ரலி) 314. ஹ_பைல் (ரலி) 315. ஹிலால் (ரலி) 316. யதீத் (ரலி) 317. யதீத் (ரலி) 318. யதீத் (ரலி) 319. யதீத் (ரலி) 320. யதீத் (ரலி) 321. அபீஸினான் (ரலி) 322. அபீஉகைல் (ரலி) 323. அபில்ஹைஸம் (ரலி) 324 அபீமுலைல் (ரலி) 325. அபீலுபானா (ரலி) 326. அபீஹன்னா (ரலி) 327. அபீஹன்னா (ரலி) 328. அபீளய்யாஹ் (ரலி) 329. அபீஷைக் (ரலி) 330. அபீதுஜானா (ரலி) 331. அபீதல்ஹா (ரலி) 332. அபில்அஉவர் (ரலி) 333. அபீஅய்யூப் (ரலி) 334. அபீஹபீப் (ரலி) 335. அபீகைஸ் (ரலி) 336. அபீகல்லாத் (ரலி) 337. அபீகாரிஜத் (ரலி) 338. அபீஸிர்மா (ரலி) 339. அபீஹ_ஸைமா (ரலி) 340. அபீசுதாதா (ரலி) 341. (அபீதாஊத் (ரலி) 342. அபீஸலீத் (ரலி) 343. அபீஹஸன் (ரலி) 344. அபில்யஸ்ர் (ரலி) 345. அபீமஸ்ஊத் (ரலி)
அல்லாஹ்வே கிருபையாளனே முஸ்லீம்களுக்குக் கிருபை புரிவாயாக.தியாகிகளான பதுரையுடைய ஸஹாபாக்களைப் பொருந்திக் கொள்வாயாக.தூதர்களில் இறுதியான எங்கள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கருணையும் ஈடேற்றமும் பொழிவாயாக.ஆவர்கள் கிளையார் மீதும் அவர்கள் தோழர்கள் மீதும் கருணையும் ஈடேற்றமும் அருள்வாயாக.பதுறு மவ்லிது நூலிலிருந்து….ஆக்கம் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்)
தமிழாக்கம்….இமாம் ஜமாலியா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா அவர்கள்….



பத்ருப் போர் - ஓர் ஒப்பீடு



ஆயத்தங்கள்:

காஃபிர்கள் படை நபித்தோழர்கள் படை


படைபலம் அன்சாரிகள் 236

முஹாஜிர்கள் 77

மொத்தம் 950 313

குதிரைகள் 100 2

ஒட்டகைகள் 700 70

கவசங்கள் நிறைய 6

வாட்கள் நிறைய 8

மற்றவை வேல், அம்பு முதலியன கழிகள், கற்கள்

உணவு நிறைவான விருந்துகள் ரமளான் நோன்பு


சேதங்கள்:

அன்சாரிகள் 8

முஹாஜிர்கள் 6

மொத்த மரணம் 70 14

சிறைப்படல் 70 எவருமில்லை


முடிவு:

* புறமுதுகிட்டு ஓடிய * சத்திய தவ்ஹீதின்

படுதோல்வி முதல் வெற்றி.

* அபூ சுஃப்யான் தவிர * ஷஹீதுகள் வீர

மற்ற முன்னணித் சுவர்க்கம் ஏகினர்.

தலைவர்கள் அனைவரும்

மடிந்தனர்.

* கைதிகள் மற்றும் மக்கா

திரும்பியோரில் சிலரிடம்

மனமாற்றம்.

அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காரிரிய்யா அறிமுகம்

ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்கள் நபிகள் நாயகம் ( ஸல் அலை) அவர்களின் பரிசுத்தமான திருக்குடும்பத்தில் 34ம் தலைமுறைத் தோன்றலாகவும் வலிகள் கோமான் கௌதுல் அஉலம் முஹியுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் 21-ம் தலைமுறையாய் உதித்தவருமாவார்கள்.

கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா மௌலானா
இவர்களின் பாட்டனார் கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா மௌலானா அவர்கள் பகுதாதிலிருந்து இந்தியா வந்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் பரப்பி தமிழகத்திலுள்ள சம்பைப்பட்டினத்தில் அடக்கமாயுள்ளார்கள். புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதியவர்களும் இஅரபு-அரபுத்தமிழ் அகராதியை முஸ்லிம் உலகிற்குத் தொகுத்து வழங்கியவர்களும்இ இன்ஸானுல் காமில் என்ற ஆத்மஞான நூலுக்கு விரிவுரை எழுதியவர்களும்இ அரபு மொழியில் நிகரில்லாப் புலமை பெற்று அது போன்றே பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கியவர்கள்.

ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா
குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் இவர்களின் தந்தையாவார்கள். அவுன் நாயகமவர்கள் தங்கள் தந்தையாரிடமே அரபிக் கல்வியையும்இ ஆன்மீகக் கல்வியையும் முழுமையாகப் பயின்று அவர்களின் ஆன்மீக வாரிசாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தோற்றுவித்த அத்தரீகதுல் ஹக்கியதுல் காதிரிய்யா வெனும் லஜ்னதுல் இர்பானித் தவ்ஹீத் (ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை) ஏற்படுத்தி மக்களுக்கு ஆன்மீக அறிவூட்டும் ஒப்பற்ற காமில் ஷெய்காக விளங்குகிறார்கள்…!

சையது கலீல் அவ்ன் மௌலானா
அரபு மொழியில் இவர்கள் இயற்றியுள்ள பேரின்பப்பாக்கள் இவர்களின் அரபுமொழிப் புலமையையும் ஆன்மீக உச்சத்தையும் புலப்படுத்தும். தமிழ்மொழியில் இவர்கள் பெற்றிருக்கும் புலமையோ வார்த்தைகளால் வடிக்க முடியாதது. சங்ககாலப் புலமையை இவர்களின் தமிழ் ஆக்கங்களில் காணமுடியும். தமிழுக்கு ஒரு புதிய பிரபந்தத்தையே தோற்றுவித்துத் தந்த நாயகர் பன்னிருபாடல் இசித்திரக் கவிகளால் அலங்கரிக்கப்பட்ட மகானந்தாலங்காரமாலை இலங்கைச் சாகித்திய மண்டலத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ வள நாட்டில் பயிர்பெருக்க வாரீர்இ இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களில் இவர்களின் யாப்புத் திறனையும் இஆழமான கவிதையாற்றலையும் காணமுடியும். ஞானம் என்றால் என்னவென்று அறிந்துத் துடிப்பவர்களுக்கு அறிமுக நூலாக எழுதப்பட்ட பேரின்பப்பாதையும்இ ஹகாயிகுஸ்ஸபா இதுற்பதுல் முர்ஸலா போன்ற அரபு நூற்களுக்கு எழுதிய விளக்கமும் தமிழ் முஸ்லிம் உலகுக்கு இவர்கள் அளித்த ஞானப் புதையல்களாகும்.

முழுக்க முழுக்க ஞானத்தையே கருப்பொருளாகக் கொண்டு வெளிவரும் மாத இதழ் ஒன்றை மறைஞானப்பேழை என்ற பெயரில் வெளியிடச் செய்துள்ளார்கள்.

இவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையானது இலங்கை ,இந்தியா ,சிங்கப்பூர் ,மலேசியா துபாய், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இயங்கிவருகிறது.
இவர்களின் ஞான வழிகாட்டல் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையிலானது.

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...3

முன்னர் அனைத்துப் பொருளுமாய் இருந்தோம். அதிலிருந்தே நாமும் உருவம் பெற்றோம். இதனாலே வேறுபட்டோம். ஆயினும் நாமும் அனைத்துப் பொருளும் அதனிலிருந்தே வெளியானோம்…

நம் பாட்டனார் ரசூல் (ஸல்அலை) அவர்களின் காலத்திலிருந்து எதிர்ப்புகள் தௌஹீதிற்கு வந்து கொண்டிருக்கின்றன. நாம் வாரிசாக இருப்பதால் நம் காலத்திலும் இது வரவேண்டியது அவசியமாகிவிட்டது. ரசூல் (ஸல்அலை) காலத்திலிருந்த அபூஜஹ்ல் அபூலஹப் ஆகியோரின் சந்ததிகளும் நம் காலத்தில் உள்ளார்கள். ஆதலால் இது விஷயங்களுக்கு நாம் கவலையோ துன்பமோ படவில்லை…

நாம் என்றும் பொய் கூறவில்லை. தௌஹீத் என்று மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்குடன் பொய்கூறவில்லை. பரிசுத்தமாக உண்மைத் தௌஹீதையே கூறுகிறோம்…

ஊருக்குள் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொள்வது நம் நோக்கமல்ல. ஊரில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். உண்மையான ஷரீஅத்தையும் தௌஹீதையும் பின்பற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.

ரசூல் (ஸல்அலை) அவர்களுக்கு அதிக எதிரிகள் இருந்தார்கள். அதே போன்று மற்றும் நபிமார்கள், வலீமார்களுக்கும் கடும் எதிரிகளுமிருந்தார்கள். அது ஹக்கினால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெரும்பேறாகும். அவ்வாறே நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எதிரிகள் இருப்பார்கள். இதனால் நாம் சோதிக்கப்படுவதில்லை. நம் எதிரிகள்தாம் சோதிக்கப்படுகிறார்கள். சோதிக்கப்பட்டு அவர்கள் திருந்தி விடுவார்களாயின் நன்மை பயக்கும். இல்லையாயின் அவர்கள் நிலைமை கவலைக்கிடமானதாகும். எதிரிகள் எம்மை எதிர்ப்பதைவிட அவர்களுடன் ஹக்கு எதிர்க்கப்போவது மிகக் கடுமையானது. மிகப் பயங்கரமான முன்னர் நடந்தவைகள் அந்த எதிரிகளுக்கு உதாரணமாகக் கடவது.

நம்மைப்பற்றி மேலும் துர்வார்த்தைகள் உபயோகித்து தௌஹீதை ஏளனம் செய்வாராயின் நிச்சயம் ஸ_உல்ஹாத்திமாவை அடைவார்கள்…!

-ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மௌலானா

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...௨


ரசூல் (ஸல்அலை)அவர்களை நமது தாய் தந்தையர் மற்றும் உயிரைவிட அதிகமாக நேசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள்பால் உள்ள மிகுந்த அன்பால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்போம். அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்தால் நமது வாழ்க்கை சீரியதாக இருக்கும். அதற்கு அன்புதான் அடிப்படை. ரசூல்(ஸல்அலை) அவர்கள் கூறியது அனைத்தும் அறிவுதான்...!

எம்பெருமானார்(ஸல்அலை) அவர்களை நேசிக்காமல் இறைவனுடைய நெருக்கத்தையோ அன்பையோ நம்மால் எந்த வகையிலும் அடையமுடியாது. ஒருவன் அவ்வாறு நினைப்பின் அவன் மதிக்கெட்ட மூடனாவான்...!

நபிகள் நாயகம் (ஸல்அலை) அவர்களை அவர்கள் ஹக்கின் பரிபூரணத்தோன்றல் எனும் உட்கருத்துக்காகவும் அவர்களின்றேல் பரிபூரண பரிசுத்த சாந்தமான நல்வாழ்வு மானிடர்கள் எய்தி இருக்கமாட்டார்கள் என்பதற்காகவும் அவர்களின் அருங்குணம் வீரம் செயலற்றும் தன்மை போன்ற மற்ற எண்ணற்ற நற்காரியங்களுக்காகவும் எம் உள் வெளி இரகசியங்கள் கொண்ட பாட்டனார் என்பதற்காகவும் அவர்களை றான் உள்ளார நேசிக்கின்றேன்...!

ஒர் ஊரில் ஒரேயொரு முரீது இருந்தாலும் அவர் ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஒரு நாளாவது புனித மவ்லிது ஷரீபை ஒதி கந்தூரி கொடுத்து அந்த மாதத்தைச் சிறப்பிக்கவேண்டும்.

கந்தூரி மீலாது விழாக்களைச் சிறப்பாக செய்யுங்கள். நம் ஊரில் மீலாது கந்தூரி செய்வதால் நமக்கு மட்டுமல்ல -நம் எல்லோருக்கும் நன்மையுண்டு பெண்களும் வீட்டில் மவ்லூது ஷரீப் ஒத வேண்டும்.

ஹஸன்-ஹ+ஸைன் (ரலி) மவ்லிதையும் ஒதுங்கள். பத்ரு ஸஹாபாக்கள் மவ்லிதையும் ஒதுங்கள்...!

புனித மிஃராஜ் நிகழ்ச்சி










துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பெருமானார் (ஸல்அலை) அவர்களின் விண்ணுலக பயணமான புனித மிஃராஜ் நிகழ்ச்சி ஜூலை 19-ல் ஞாயிறு திங்கள் இரவு 7.45 மணிக்கு துவங்கப்பட்டது….
இன் நிகழ்ச்சிக்கு திருமுல்லைவாசல் சைய்யதுஅலி மௌலானா தலைமை வகித்தார்கள்
துணைத்தலைவர் யூசுப் அவர்கள் மிஃராஜ் சிறப்புகளைப்பற்றி வரலாற்று சம்பவங்களை தெளிவாக கூறினார்…அவரைத் தொடர்ந்து கலீபா முஹம்மது காலீத் அவர்கள் மிஃராஜின் தாத்பரியங்களை விளக்கி முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக தலைமை வகித்த சைய்யதுஅலி மௌலானா அவர்கள் தற்போதைய காலத்தில் விஞ்ஞானிகளும் மிஃராஜ்ஜை பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் என்றும் ஒவ்வொரு மூமினுக்கும் தொழுகையில் மிஃராஜ் இருக்கிறது என்று பெருமானார் (ஸல் அலை) அவர்களின் திருவாக்கினை எடுத்து கூறி இறுதியாக துவஆ ஒதினார்கள் . இந்நிகழ்ச்சியில் ஜாகித்அலி மௌலானா ஜியாவுதீன் மௌலானா கீழை காதர்சாஹிப் அதிரை சர்புதீன் அதிரை அப்துல் ரஹ்மான் மன்னார்குடி ஷேக்தாவுது பேராவூரணி அன்வர்உசேன் மதுக்கூர் ஹாஜாஅலவுதீன் ஆடிட்டர் கிளியனூர் இஸ்மத் திருமக்கோட்டை தாஜ்தீன் மதுக்கூர் இதயத்துல்லாஹ் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள் இஷாத் தொழுகைக்குபின் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.

-ஆலிம் புலவர்

மனம்


மனமானது பாராட்டுகளைப் பெற்று ஃபிர்அவ்ன் ஆகிவிட்டது. அதாவது ஆணவம் கொண்டுவிட்டது. நீ எளிமையை ஏற்று தாழ்ந்தவனாகிவிடு. தலைமையை வேண்டாதே. முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். அரசனாக முயலாதே. உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும். உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

மனமானது பாராட்டுகளைப் பெற்று ஃபிர்அவ்ன் ஆகிவிட்டது. அதாவது ஆணவம் கொண்டுவிட்டது. நீ எளிமையை ஏற்று தாழ்ந்தவனாகிவிடு. தலைமையை வேண்டாதே. முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். அரசனாக முயலாதே. உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும். உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது. ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு. துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும். அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்

அலியைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய். அல்லாஹ்வைத் தவிர
மற்றவைகளை தவிர்த்து விட முயற்சிசெய். இந்தப் பாழடைந்துபோகும் உலகத்தை விட்டு மனதை விளக்கிக் கொள்.
-மஸ்னவி மௌலானா ரூமி (ரஹ்)

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...1


பிரபஞ்சத்தின் எல்லா வகை இயக்கங்களும் இந்த ஸலவாத்தெனும் துஆவால் நிரைபடுத்தப்படுகின்றன. இதனால்தான் அல்லாஹ்வும் வானவர்களும் ஸலவாத்துச் சொல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு வேறு தாற்பரியங்களும் நிறைய உள்ளன. இதில் ரசூல் நாயகம்(ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டதும் இஃது அவர்களுக்கு மட்டுமின்றி பரிபூரண பிரபஞ்சத்துக்கும் கேட்கும் பிரார்த்தனையாகும்.
************************************
இஸ்லாத்தில் கொஞ்சமும் ஷிர்கு (இணை வைத்தல்)இல்லாத முழுமையான தத்துவமுள்ளது. இதையறியாத மக்கள்தாம் இஸ்லாத்தில் தத்துவஞானமில்லை என்கின்றனர். இஸ்லாத்தில் உள்ள தத்துவஞானம் தான் மிகச் சிறப்புடையதாகும்.
***************************************
சிலர் இஸ்லாத்தில் தத்துவஞானம் இல்லை எனக்கூறி இஸ்லாத்தையே இழிவுபடுத்துகின்றனர். இஸ்லாத்தில் வணக்க வழிபாடுமுறைகள் மட்டுமே கூறப்படுவதாயும் வேறு மதங்களில் தத்துவங்கள் உள்ளதாயும் முஸ்லிம்களிற் சிலரே கூறத் தொடங்கியுள்ளனர். இஃது இஸ்லாத்திற்குச் செய்யும் துரோகமாகும்.
*********************************
அசையதா பக்கி உள்ளவருக்கு எல்லாம் கைகூடும்.
************************************
பில்லி சூனியத்தை நம்பி ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள். அதில் ஒரு புண்ணியமும் இல்லை. நோய் வந்தால் டாக்டரிடம் செல்லவேண்டும். அதுவே நல்லது. சூனியத்திற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நமது முரீதுகளுக்கும் அப்படித்தான்.
*************************************
நாங்கள் ஷரீஅத் தரீகத் ஹக்கீகத் மஃரிபத் என்ற நான்கு படிகளிலுமே ஓரே நேரத்தில் இருக்கிறோம் என்று கூறுங்கள்.
**************************************
டாக்டர்களால் செய்ய முடியாத மருத்துவத்தை நபிகள் நாயகம்(ஸல் அலை)அவர்கள் கற்றுக் கொடுத்த தொழுகை செய்துவிடும். தொழுகையானது கண் காது மூளை உடல் ஆத்மா என அனைத்திற்கும் மருந்தாக விளங்குகிறது. எம்காலில் இருந்த வலியினைக் குணமாக்கியது.
****************************************
தன்னையோ தன் பெயரையோ எமக்குள்ள எதுகைகளையோ நினையாது இஸ்தம்பமான எம்மை மறந்த மறதி நிலையில் நாமாகிவிட வேண்டும். நிஷ்டையும் இதுவே. முஷாஹதாவும் இதுவே. அப்போதே தன்னை அனல் ஹக் என்றும் அனள்ளாஹ் என்றும் அறிந்தவன் கூறுவான்...

-ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவுன் மௌலானா

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புர்தா நிகழ்ச்சி


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிரதி மாதம் வெள்ளிக்கிழமை காலையில் புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.
இம்மாதம் 17ம் தேதி வெள்ளிக் காலை 7.30 மணிக்கு புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்றது…
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா துவா ஒதி ஆரம்பம் செய்தார்கள்.
புர்தா ஒதியப்பின் கலீபா முஹம்மது காலீத் அவர்கள் உரையாற்றினார்கள்…
அவர்கள் பேசுகையில்… ஞானத்தின் அவசியத்தையும் அதை விளங்கி செயல்பட வேண்டியும் எடுத்து கூறினார்கள்.
இவ்விழாவில் ஜாகித்அலி மௌலானா துணைத்தலைவர் யூசுப் அவைமுன்னவர் அப்பாஸ் ஷாஜகான் ஆடிட்டர் கிளியனூர் இஸ்மத் அதிரை சர்புதீன் முதுவை ஹிம்தாதுல்லாஹ் மன்னார்குடி ஷேக்தாவுது கீழை காதர்ஷாகிப் அதிரை அப்துல்ரஹ்மான் மதுக்கூர் பாடகர் தாவுது மற்றும் சாகுல் ஹமீது அபுதாபியிலிருந்து ஜெகபர்சாதிக் ஆதம் அப்துல் குத்தூஸ் அப்துல் ரவுப் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து தந்தார்கள்.
விழா இனிதே 8.45 மணிக்கு நிறைவுற்றது…!

பிறை 14 ஜூலை மாத இராத்தீபு நிகழ்ச்சி




துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிறை 14லில் இராத்தீபு நிகழ்ச்சி பிரதி ஒவ்வொரு மாதமும் நடந்துவருகின்றன. ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன...
இன் நிகழ்ச்சியில் திருமுல்லைவாசல் சைய்யது அலி மௌலானா துவா ஒதினார்கள்
ஜாகித்அலி மௌலானா மற்றும் கலீபா காலிது துணைத் தலைவர் மதுக்கூர் யூசுப் செயளாளர் சகாபுதீன் ஆடிட்டர் கிளியனூர் இஸ்மத் நிர்வாக உறுப்பினர்கள் எழுத்தாளர் அதிரை சர்புதீன் மற்றும்
பொறுப்பாளர்கள் உறுப்பினர்களும் கலந்து இவ்விழாவை சிறப்பித்தார்கள்...
இன் நிகழ்ச்சிக்கு பின் இஷா தொழுகை அங்கு நடைப்பெற்றுது...தொழுகைக்கு பின் தப்ருக் வழங்கப்பட்டன...
இனிதே இன்நிகழ்ச்சி நிறைவுற்றது...!!

எழில்மிகு சிங்கையில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினருடன்







கடந்த மாதம் ஜூன் 17ம் தேதி சிங்கப்பூர் சென்றிருந்தேன்...அங்கு எழில்மிகு சிங்கையில் இயங்கிவரும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அழைப்பை ஏற்று மாதாந்திர கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அவர்களை சந்திததில் பெரிதும் மனம் மகிழ்ந்தேன்...
சிங்கை சகோதரர்கள் மிக ஆர்வத்துடன் இயங்கிவருவதைக் கண்டு ஆனந்தம் கொண்டேன்...