This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

கவலை நீங்க ஒருவழி!

எந்த நேரத்திலும் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான்
அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறிய விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக்
கொண்டிருந்தால், அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து
கொண்டிருக்கும். ஆதலால், எந்தக் கஷ்ட நிலையிலும் சந்தோஷப்பட்டால் அவனுக்கு அந்தக்
கஷ்டம் நீங்கிச் சந்தோசம் நிலை கொள்ளும். இது இயற்கை. கவலை வருமாயின் அவற்றை
மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
நன்றி - சிராஜிதீன் மதுக்கூர்

மரக்கன்றுகள் நடும் & வழங்கும் விழா

உலக வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்கமும் மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்றது .

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக மதுக்கூர் கிளையின் செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் அவர்களும் உறுப்பினர் இத்ரீஸ் அவர்களும் கலந்து கொண்டு ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ( தேக்கு , செஞ்சந்தனம் ) மரக்கன்றுகள் நட்டனர் .மேலும் ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க கிளையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர் . 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை வழங்கியது

தகவல் , புகைப்படங்கள் : Er.A.இத்ரீஸ்





பெரும் தியாகம்


இயற்கைப் பொருட்களைக் கவனியுங்கள். மழைவர நனைகிறோம், வெயில்வரக் காய்கிறோம்.`
நீரின்றி தாவரங்கள் வாடுகின்றன. காற்று வீசப் பொருட்கள் அசைகின்றன.காற்றின்றேல்
அசைவின்றி நிற்கின்றன.

இவைகள் நடப்பதுபோல் நடக்கட்டும் என்று இருக்கின்றன. இது சூபியத் (மெய்ஞானம்) ஆகும்.
ஆயினும் இறை ஊகிக்க அறிவையும் செயற்பட அசைவையும் மனிதனுக்கு கொடையாக
கொடுத்துள்ளது. புத்தியுடன் வாழ்வோர் போற்றப்படுவர்.

மனிதனுக்கு ஒரு குணம் உண்டு.அது சமயோசிதப்படி நடப்பதாகும். கண்டவையெல்லாம் கவலை
எனவும் தொட்டவையெல்லாம் கெட்டவை எனவும் பார்த்தவை எல்லாம் பாராமுகம் எனவும்
கருதி மனதைப் புண்படுத்துவதும்தான் அதனால் கெடுவதும் பெரும் தப்பாகும்.

இவைகள் நீங்கி வாழவே ஹக்கு தவ்ஹீதை (ஏகத்துவ ஞானத்தை) நமக்குத் தந்தது.

தௌஹீதை (ஏகத்துவ ஞானத்தை) ஒருவரால் மற்றவருக்கு எந்த அளவுக்கு பரப்ப முடியுமோ
அந்த அளவில் பரப்பாலும் அதற்காக முயற்சித்தலும்தான் நாம் ஹக்கு(ஏகன்)க்குச் செய்யும் பெரும் தியாகம்.

நல்லமுறையில் தௌஹீத் (ஏகத்துவ ஞான) விளக்கங்களை உரியவர்களுக்குக் கூறுங்கள்.

---- சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.

Thanks - sirajudeen

புனித புர்தா நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு துபாய் சபையில் புனிதபுர்தா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி ஜாமிஆ மஸ்ஜிதில் 27 ஆண்டுகளாக பணிப்புரிந்த சித்த மருத்துவர் முதுவை டாக்டர் மௌலவி ஷேக்முஹம்மது ஆலிம் மன்பஈ அவர்கள் வருகைப்புரிந்து பயான் செய்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து பொருளாதார நிபுணர் மோத்திலால் ஓசூவல் செக்யூரிட்டி நிறுவனத்தின் சப்புரோக்கர் திருவாரூர் பிரோஸா அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இந்திய பங்குசந்தை மற்றும் ஷரீஅத் பங்குகளைப் பற்றிய விளக்கமான சொற்பொழிவை நிகழ்த்தினார்.

முதுவை டாக்டர் மௌலவி ஷேக்முஹம்மது ஆலிம் மன்பஈ அவர்களுக்கு பொன்னாடையை மௌலானாமார்களும் கலீபா சகாபுதீன் அவர்களும் அணிவிக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர் திருவாரூர் பிரோஸா அவர்களுக்கு மௌலானாமார்கள் மற்றும் கலீபா சகாபுதீன் அவர்களும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்துகிறார்கள்.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

ஞானியின் உறக்கம்

கௌதுல் அஉளமே! பாமர மக்களின் உறக்கம் போலல்லாது என்னிடம் உறங்குங்கள்.
அப்பொழுது நீங்கள் என்னைக் காண்பீர்கள்.

இறைவா! நான் உன்னிடத்தில் எப்படி உறங்குவேன் என்றேன். அல்லாஹுத்தஆலா
சொன்னான். இன்பங்களைவிட்டும் உடல் அமைதி கொள்ளல். சரீர இச்சைகளை விட்டும்
நப்ஸூ அமைதி கொள்ளல். ஆலோசனைகளை விட்டும் கல்பு அமைதி கொள்ளல்.
பேச்சு, பார்வை, கேள்வி, ஆகியவற்றை விட்டும் ரூஹ் அமைதி கொள்கிறது கொண்டும்,
உமது உள்ளமை எனது உள்ளமையில் அழிந்து உமது வர்ணனை எனது வர்ணனைகளில்
தரிபடுகிறது கொண்டுமாகும்.


விளக்கம்:
பாமர மக்களின் உறக்கம் உண்டு குடித்து குடும்ப பாசத்தில் மயங்கி மதிமருண்டு இரண்டென்னும்
எண்ணத்தில் உறங்குவதாகும். ஞானியின் உறக்கம் ஊணும் நீயே பானமும் நீயே குடும்பமும் நீயே
உறக்கமும் நீயே நானே உன்னில் இரண்டறக் கலந்தேன் எனும் உறக்கமாகும். இந்த ஞான
உறக்கத்திலேதான் இறைவனைக் காணமுடியும். இன்பம் இச்சை என்பன அவனிலிருந்து இல்லாமற்போதல். தேவையற்ற நான் வேறு நீ வேறு என்னும் எண்ணங்களிலிருந்து விடுதலை
பெறுதல். பேசுவது என் பேச்சு, காண்பது என் பார்வை, கேட்பது என் கேள்வி எனும் நான் எனும்
மமதையை விட்டு எல்லாம் ஹக்கிலிருந்தே ஆகிறதாய் அறிந்து அமைதி கொள்தல்,
ஆசாபாசங்களை அறுத்து பஞ்சேந்திரியங்களும் அவனுக்கே உரித்து என எண்ணி இறை உள்ளமையில்
தன் உள்ளமையை அழித்து உன் வருனனையே என் வருணனை என் அவனில் முழுமையாய்க்
கலந்து இரண்டறக் கலந்திருத்தலே ஞானியின் தூக்கமாகும்.

கௌதுல் அஉளம் அவர்களுடைய ரிஸாலதுல் கௌதிய்யா எனும் நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து......

மொழி பெயர்த்தவர்கள் சங்கைமிகு குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் (ரலி) அவர்கள்.

விளக்கம் சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா அவர்கள்.

Thanks -Sirajudeen Madukkur

பிறை 14லின் இராத்தீபு நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 10/11/2011 வியாழன் மாலை மஃஹ்ரிபு தொழுகைக்கு பின் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

பாபம் தவிர்

சிலர் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாமனார், மாமியார், கணவர் செய்யக்கூடிய பெண் கொடுமை மிகப்பெரிய பாபமாகும். 
ஒருவன் ஓர் அநியாயத்தை செய்துவிட்டால் அவன் அந்த அநியாயத்தை 
அடைந்தே தீரவேண்டும்.

ஒருவருக்கு துன்பம் தரக்கூடிய பெரும்பாபமான காரியத்தை யாரும் கண்டிப்பாகச் செய்துவிடாதீர்கள்.
பிறருடைய மனதை புண்படுத்தக்கூடிய பெரும்பாபத்தைப்போல வேறு பாபம் உலகில் இலலை.

ஏழை விடும் கண்ணீர் கூறிய வாளைப்போல என்பதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் கூறியதை மனதில் கொண்டு ஏழைகளுக்கு அநியாயம் செய்து விடாதீர்கள். இதுதான் ஷிர்க்கோடு 
சேர்ந்த மிகக் கொடிய பாபம். மனம் நேர்மையிருந்தால்தான் ஒருவன் ஷிர்க்கை விட்டும் நீங்க முடியும். 

                                                              ---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
Thanks - Madukkur Sirajudeen

ஈத்முபாரக்