மதுக்கூரில் பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்

ரமலான் பிறை 17 பத்ருசஹாபாக்களின் நினைவு தினம் கலீபா அட்வகேட் ஏ.என்.எம்.லியாகத்அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் வீட்டில் மஃரிபுக்குப் பிறகு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஏகத்துமெய்ஞ்ஞான சபையின் கலீபாக்கள் மூத்த சகோதரர்கள் மற்றும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.பிறை 1-லிருந்து பிறை 16 வரை பத்ரு சஹாபாக்களுக்காக முரிதீன்களும் பொதுமக்களும் ஓதிய 172 குர்ஆனும் 1728 யாசினும் ஹத்தம் செய்யப்பட்டது.மேலும் பத்ரு சஹாபாக்களின் தியாகத்தை பொதுமக்கள் அறியவேண்டும் என்ற நோக்கில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு திறப்பதற்கும் பெண்கள் தொழக்கூடிய அனைத்து இடங்களுக்கும் 1300 க்கும் மேற்பட்ட பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.மக்களுக்கு நினைவூட்டக்கூடிய வகையில் பிரியாணி பொட்டலத்தின் மேல் அட்டையில் பத்ரு சஹாபாக்களின் நினைவு வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.உணவு தயாரிப்பு மற்றும் பரிமாற்றம் வேலை அனைத்திற்கும் ஏகத்துமெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் அயராது பாடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் அல்லாஹ்தாலா நற்கூலியை வழங்குவானாக ஆமீன்.தகவல் – புகைப்படங்கள் இஞ்ஜினியர் இத்ரிஸ் மதுக்கூர்