This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகர் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 14-ம் ஆண்டு துபாய் விஜயம், இறைவனின் கிருபையால் மிகவும் சிறப்படைந்தது.
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகர் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 14-ம் ஆண்டு துபாய் விஜயம், இறைவனின் கிருபையால் மிகவும் சிறப்படைந்தது.

ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரையில் மஹ்ஃரிப் தொழுகைக்குப் பின், நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் தினம் மஜ்லிஸ் நடைப்பெற்றது.

இந்த மஜ்லிசிற்கு முரிதீன்களும் மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களும் கலந்து தங்களின் சந்தேகங்களை ஷெய்குனாவிடம் கேட்டு தெளிந்தார்கள்.

திருச்சி மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாசீன் அறபுக் கல்லூரி 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் V.M.முஹம்மது ஹஸன் ஆலிம் யாசீனி,V.M.முஹம்மது ஜக்கரிய்யா ஆலிம் யாசீனி ஆகிய மாணவர்கள் சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களின் திரு கரங்களால் யாசீனி பட்டம் பெறுகிறார்கள்.
இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி பெருவிழாவில் சிறப்பம்சமாக குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூயத் தமிழில் எழுதப்பட்ட அரபு-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. சுமார்45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல்
ஹு
ஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் வெளியீடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.

இவ்வகராதியை சிறப்புமிகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளரும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைய்தீன் அவர்களால் வெளியீடப்பட்டது.
இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி கந்தூரி விழாவிற்கு
கைருப் பாரியா பெண்கள் அறபிக் கல்லூரியின் முதல்வரும் புதிய பயணம் இதழ் ஆசிரியரும் – தமிழகத்தில் வஹ்ஹாபிகளை தன் நாவன்மையால் தக்க ஆதாரங்களுடன் சூரையாடும் மௌலவி ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்
சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களை சந்தித்து ஆசிபெறுகிறார்கள்.
இலங்கை வெலிகமையயில் நடைபெற்ற மீலாதுன்னபி கந்தூரி விழாவிற்கு வருகைப் புரிந்த இலங்கை மாகாண ஆளுநர் ஸய்யித் அலவி மௌலானா அவர்களை சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள் அன்போடு வரவேற்கிறார்கள்.

ஃபிக்ஹுச் சட்டங்கள் தேவையா ? (பகுதி-2)


இமாம்கள் கியாஸ் செய்து குர்ஆன், கதீஸ்களின் கருத்துக்களை மாற்றி விட்டதாக சிலர் சொல்லித் திரிகிறார்கள். இது தவறு. 

குர்ஆன் கதீஸில் மறைந்துள்ள உட்பொருளை வெளிப்படுத்தி உள்ளனர். நாம் ஆராயும்போது குர்ஆன், ஹதீஸிலிருந்து இதற்கு ஆதாரம் கிடைக்கின்றது. 

"விசுவாசிகளே! தர்மம் செய்யக் கருதினால் நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திய (தானியம், கனிவர்கம், முதலிய) வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தானமாகச்) செலவுசெய்யுங்கள். 

அவற்றில் கெட்டவற்றில் செலவு செய்ய விரும்பாதீர்கள். (ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடியவர்களாகவேயன்றி எடுக்க மாட்டீர்கள்". (2.227) என அல்லாஹ் கூறியுள்ளான். 

ஹக்கை அறியாமல் எங்ஙனம் வணங்க இயலும்?

"அல்லாஹ்" என்னும் ஒருவனே ஏகன், அனைத்தும் அவனே என்பதுதான் வஹ்தத்துல் வுஜூத் ஆகும்.
அடிப்படைத் தத்துவார்த்தமான அதனை எங்ஙனம் அறியாமல் இருப்பது? எப்படி உணராமல் இருக்கின்றனர்?
என்பது வியப்பிற்குரியதாக இருக்கின்றது.


ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை என உருவத்தில் படைத்தேன் எனது ரூஹை அவரிலே ஊதினேன்
என ஏக இறை கூறுவதே தவ்ஹீதின் கருத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது.


இதிலிருந்து (த்ஜல்லியாக) வெளியாகியிருப்பது ஹக்கே என்பதும் எல்லாமும் அதிலிருந்தே வெளியாயின
என்பதும் தெளிவாகின்றன. இதுவேதான் தவ்ஹீதும், ஷரீஅத்தும், இதனை எங்ஙனம் பிரிக்க இயலும்?

அல்லாஹ்வை ஆராயக்கூடாது, சிந்திக்கக்கூடாது எனச் சிலர் அறியாமையினால் கூறித் திரிகின்றனர்.
ஹக்கை அறியாமல் அவனை நாம் எங்ஙனம் வணங்க இயலும்? எனவே, ஹக்கை அறிவது மிகவும்
அவசியமாகும்.


------சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.
Thanks - Madukkur Sirajudeen

குரு ஒன்று கண்டேன்

குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

மதி யொன்று கண்டேன்
விதி காண வில்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா


அல்லாஹ்வின் தூதர்
அகிலத்தின் நீதர்
அண்ணல் தம்பேரர்
கலீல்அவுனாம் நாதர்

அகஞானம் தங்கும்
அருள்ஞானம் பொங்கும்
மறைஞானம் எங்கும்
காதிரியாவில் அங்கம்

அருள் தந்த
அரும் பொருளே (2)

மருள் அழித்த
முழுமதியே (2)

குணங்கொண்ட சீலர்
குரு எந்தன் குரு அல்லவோ

வந்தேன்
அறிந்தேன்-நின்றேன்
வாழ்கிறேன்

குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

தனையறிந்த ஞானம்
தன்னை மறப்பதில்லை
விழிநோக்கும் பேதம்
ஒளிசேர்ப்பதில்லை

தானென்ற யூகம்
தன்னைஅறிவதில்லை
நானென்ற தேகம்
நீயாவதில்லை

ஞானம் தந்த
அண்ணல் நபி (2)

வாழ்வு தந்த
வேந்தர் வழி (2)

என்றென்றும் மாறாத
மனிதன் நல்ல மனித னல்லவோ

வந்தேன்
அறிந்தேன-நின்றேன்;
வாழ்கிறேன்


குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

மதி ஒன்று கண்டேன்
விதி காண வில்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா


- கிளியனூர் இஸ்மத்

அன்பே வடிவாம் அருங்குணமே !!!

அழகுக்கழகே யரும் பொருளே
அன்பே வடிவாம் அருங்குணமே
எழிலுக் கொப்பில் லாதவரே
இறையீதென் றுரை பகன்றவரே




அழிவுப் பாதையிற் சென்றவரை
அறமே அறியா மறத்தாரை
பொலிவுடன் வாழ வழிவகுத்தார்
பொன்னார் மேனிப் பெருந்தகையே


பூரண நபியே சந்திரரே
பூவுலோர் போற்றும் பெருமானே
காரண நபியே கனியுளமே
கதியே பதியே கரு உருவே


தாரணி போற்றும் சூரியரே
தனி நிகரில்லா தவக்கொழுந்தே
ஆரணமாம் குரு ஆன்தனிலே
ஆறிரை போற்றும் புகழோரே


ஒளியினுமிக்க ஒளியுருவே
உயிரினும் மிக்க உயிர்க்கருவே
வெளியாயுள்ளாய் கரந்துரைந்து
வேதம் விளக்கும் வல்லோரே


துளிரு மெழிலார் நகையழகே
தூய்மை துலங்கும் தேன்மொழியே
ஒளிர்ந்தே காரிரு ளகற்றியதார்
உயிரே குருவே புகழுருவே


கருணைக் கடலே காரிருளை
கலைத்தே யொளியை பரப்பியவெம்
முரணை நீத்தே மறனீக்கி
முழுமுதற் மறையை மாந்தர்க்கு


தருணம் பார்த்தே ஈந்தளித்த
தலைவரெம் பெருமான் நபியே
வருணம் நீக்கி வாழ்வளித்தார்
மாந்த ரொன்ரென பகர்ந்த்தவரே


இயற்றரு மெழிலே இசைமொழியே
இறையவ நிறைகுண குணக்குன்றே
மயர்க்கொள் மாந்தர்க் கருமருந்தே
மறமது னீக்கி யறங்காத்த


செயற்ப் பெருவீரர் விரற்றீரர்
சீரிய பெர்மார் அருஞ்சீலர்
வயிற்றறு கல்லை பசிபோக்க
வரித்து நின்ற பெருமாரே

-------------நபிகள் நாயகம் ஸல் அவர்களின் திருப்பேரர் சங்கை மிகுஇமாம் குத்புஸ்ஸமான் ஷம்ஷுல்வுஜூத் ஜமாலியா செய்யித் கலீல்அவன் மௌலானா அல்ஹசனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

இம்மையில் குருடன் மறுமையிலும் குருடன்

ஓ நண்பனே!
வாழும் போதே அவனை ஆர்வத்தோடு எதிர்பார்த்து நில்.
வாழும் போதே அவனை அறிந்துக் கொள்.
வாழும் போதே அவனை உணர்ந்து ஒன்றுபடு.
ஏனெனில் மீட்சியும் உய்வும் இம்மையில்தான் கிட்டும்.



வாழும் காலத்திலேயே உன் தளைகள் உடைபடவில்லையென்றால் மரணத்தில் மட்டும் உய்வுகிட்டிவிடுமா?

மரணத்திற்குப் பின் ஆன்மா அவனை அடையும் என்று நினைப்பது வெறும் கனவேயாம். ஏனெனில் ஆன்மா இறப்புக்குப் பின் உடலைவிட்டுப் பிரிந்து விடுகிறதே.

அவனை இப்போது காண்பாயானால் அப்போதும் காண்பாய். இல்லையெனில் மரணம் என்னும் மாநகரத்தில் பேய்தான் குடியேற நேரும்.

இறைவனோடு இப்போது நீ இணைவாயானால் பின்னரும் அந்நிலையை அடைவாய்.

மெய்ம்மையில் மூழ்கி எழு;உண்மையான குருநாதரை அறிந்துகொள்.இறைவனின் திருநாமத்தில் நம்பிக்கை வை.

கபீர் சொல்கிறார்- "உயிரின் தேடல் நாட்டமே உற்றுழி உதவும் துணை.தேடல் நாட்டத்திற்கு நான் அடிமை".

- கபீரின் நூறு பாடல்கள் நூலிருந்து

இறையை மறந்திடாதே!!!

கௌதுல் அஉளமே! பாபிகளுக்கு வரிசை கொண்டும் சங்கை கொண்டும் நன்மாராயம் கூறுவீராக.
அகப்பெருமை (ஆரம்பத்தில் ) உடையோருக்கு பழிப்பைக் கொண்டும், வேதனையைக் கொண்டும்
துன்மாராயம் கூறுவீராக.




விளக்கம் : வழிபாடுடையவர்கள் சுவர்க்கம் அல்லது சௌகரியம் அல்லது செழுமை அல்லது
சுகபோகங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். பாபத்தையுடையவர்கள் இறைவனுடைய
கிருபை அல்லது தயை அல்லது கருணையை எண்ணிக் கொண்டிருப்பார்கள். நன்மை செய்து
கொண்டிருப்பர்வகள் நன்மையில் மருண்டு இறைவனல்லாதவற்றை விரும்பிக்கொண்டிருப்பார்கள்.
பபிகளோ தாம் செய்த பாபங்களுக்காக இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
அதிக நன்னடத்தைகளும் சுதந்திரமும் சுபிட்சமும் இறைவனை மறக்கச்செய்யும்
திரைகளாகிவிடுகின்றன. தாம் செய்த குற்றத்திற்கு அழுங்கிப் பயந்திருப்பவர்களுக்குத் திரை
அறுந்து இறையை மறந்திடாதிருக்க அது உதவுகிறது.


கௌதுல் அஉளம் அவர்களுடைய ரிஸாலதுல் கௌதிய்யா எனும் நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து......


மொழி பெயர்த்தவர்கள் சங்கைமிகு குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் (ரலி) அவர்கள்.


விளக்கம் சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா அவர்கள்.

Thanks- Sirajudeen Madukkur

தனிச்சிறப்பு மிக்க பெருமானார் ( ஸல் ) அவர்கள்.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தனிச்சிறப்பு " உபூதிய்யத்"
என்னும் அடிமைத்தனத்தை இரண்டு நிலைகளிலும் ஒழித்ததாகும்.

அவற்றில் ஒன்று மக்களில் அடிமையாய் கருதப்பட்டவர்களுக்கு சமுதாயத்தில் சமஉரிமை அளித்து
மனிதரில் யாரும் யாருக்கும் அடிமை இலலை என்பதனை உணர்த்தியதாகும்.

இரண்டாவது, ஆபிதும் (வணங்குபவனும்) மஉபூதும் (வணங்கப்படுபவனும் ) எதார்த்தத்தில் ஒன்றேதான்
வேறானதல்ல அனைத்தையும் ஏகமாகக் காணும்போது அங்கே எஜமான், அடிமை என்னும் பிரிவில்லை.

எனவே "எஜமான்" என ஒருவன் உள்ளான் "அடிமை" என நான் உள்ளேன் எனும் எண்ணத்திலுள்ள அடிமைத்தனத்தையும்
எம்பட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அகற்றினார்கள்.

எனவேதான் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அனைத்திலும் மேலானவர்கள் எனக்கூறுகிறோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பேரன்பு கொள்ளாதவன் பேரின்பம் காணமாட்டான்.


அருளியவர்கள் : - சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.

அழகாய் இருக்கிறது நினைத்தால் அழகாய் இருக்கிறது

சிறுபிள்ளை பிராயத்தில் பளிங்கி (கோலி) விளையாடிய நினைவு. பளிங்குகள் உருண்டையாக கண்ணாடியால் செய்யப்பட்டு உள்ளே வண்ணங்களாக காட்சியளிக்கும். வண்ணங்கள் இல்லாது
தண்ணீர்த் துளிபோல் காட்சியளிக்கும் பளிங்குகளும் உண்டு. அது பார்ப்பதற்கு நிறமில்லாது தண்ணீர்த் துளி போலவே இருக்கும்.

சமீபத்தில் சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களின் ஞான வாரிதத்துக்களை படித்துக் கொண்டிருக்கும் போது அதில்...

'நிறமற்ற நீரின் உண்மை
நிரமுற்ற வைகள் தன்மை
மரமற்ற பிர்ம உண்மை
வடிவாதல் வாழ்வில் நன்மை'

என்ற வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன. நீர்த்துளி போன்ற நிறமே இல்லாத பளிங்குகளின் ஞாபகம்
வந்தது. நீர்போன்று நிறமே இல்லாதவை வண்ணங்களை ஏற்று நிறமாக காட்சியளிக்கின்றது .
வண்ணங்களாக காட்சியளிப்பவற்றின் ஆதியுண்மை நிறமற்ற தன்மையே. நிறமுற்றிருக்கும் அனைத்தின் உண்மையும் நிறமற்ற தன்மையே என நினைத்துப் பார்க்கும்போது அழகாய் இருக்கிறது.

மனிதனாய் நிறமுற்றிருக்கும் நமது உண்மை?.......... think yourself.

-சிராஜுதீன். துபை

தகைமை நிறைந்த தந்தை நாயகத்தின் கந்தூரி விழா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 14/10/2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு புர்தா ஷரீப் நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு திருமுல்லை வாசலில் நிறைந்திருக்கும் சங்கைமிக்க தந்தை நாயகம் இமாம் ஜமாலிய்யா யாசீன் மௌலானா அவர்களின் விசால் தின கந்தூரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில் மற்றும் தலைமை கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி அவர்களும் நடாத்தினார்கள்.









புர்தா நிகழ்ச்சிக்கு பின்னர் சங்கைமிக்க தந்தை நாயகம் ஜமாலிய்யா யாசீன் மௌலானா அவர்களின் விசால் தினமான கந்தூரி விழாவின் துவக்க உரை நிகழ்த்துகிறார் அதிரை எஸ்.சர்புதீன் ஹக்கியுல் காதிரி
கிராஅத் ஹையும் மௌலானா ஹக்கியுல் காதிரி அவர்கள்
மதுக்கூர் முஹம்மது தாவூது மற்றும் கொடிக்கால் பாளையம் ஹாஜா அலாவுதீன் ஹு வல்வுஜுது பாடலை பாடுகிறார்கள்.

கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி நபி புகழ் பாடுகிறார்
மன்னார்குடி ஷேக்தாவூது ஹக்கியுல் காதிரி வரவெற்புரை நிகழ்த்துகிறார்
தலைமை உரை நிகழ்த்தும் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி

நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி உரை




சென்னையிலிருந்து வருகைப் புரிந்திருக்கும் ஆன்மீக சகோதரர் ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்களுக்கு மௌலானாமார்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்துகிறார்கள்


ஹைதர்நிஜாம் உரை

கொடிக்கால் பாளையம் ஹாஜாஅலாவுதீன் ஹக்கியுல் காதிரி பாடுகிறார்

சகோதரர் காதர் சாஹிப் ஹக்கியுல் காதிரி உரை நிகழ்த்துகிறார்
மதுக்கூர் சிராஜிதீன் ஹக்கியுல் காதிரி பாடுகிறார்




மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி விழா நாயகரின் விலாயத்தைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

கிளியனூர் இஸ்மத் நன்றி உரை









இந்நிகழ்ச்சிக்கு தப்ரூக் சபையின் சார்பாக வழங்கப்பட்டது இதில் நூற்றுக்கனாகானோர் கலந்து விழாவை சிறப்பித்து அருள் பெற்று மனம் நிறைந்தார்கள்...

இந்நிகழ்ச்சிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக செயல்பட்ட மன்னார்குடி ஷேக்தாவூது, மதுக்கூர் அமீர்அலி, மதுக்கூர் அலிஅக்பர், முஹம்மது யூனூஸ், நத்தர்ஷா மற்றும் சபை அறை நண்பர்கள் அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக அனைவருக்கும் நன்றி!

தூய சிந்தனை, மாய சிந்தனை

மனிதா!...

உன் மானிட சிந்தனையுடன் உன் தூய சிந்தனையை சிறிது நேரமாவது வைத்துக்கொள்.
அது உன் தீய சிந்தனையிலிருந்து உன்னை திசை திருப்பி நேர் வழிக்கு கொண்டுவந்துவிடும்.

தூய சிந்தனையென்பது எது? அதில் கபடம் இல்லை, குபாடம் இல்லை, பாபம் இல்லை,
களவு,சூது இலலை. அது ஒன்றையே சிந்திப்பதாகும். மாய சிந்தனை மனிதனை ஆதி நிலையை அறியவிடாது மயக்கிவிடுகிறது .

இந்த மாயச் சிந்தனையால் எல்லாவற்றையும் அறிந்து பேரறிஞன் எனும் பெயர் நீ பெற்றாலும்
நீ ஒரு பதர் என்பதை உணர்ந்துகொள்.

-சங்கைமிக்க ஷெய்கு நாயகம் அவர்கள் அருளிய சிந்தனைத் துளி............
-சிராஜ்தீன் மதுக்கூர்

பிறை 14லின் இராத்திபு நிகழ்ச்சி




துபாய் ஏகத்துவ மெள்ஞ்ஞான சபையில் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி 11/10/2011 செவ்வாய் புதன் மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் கலீபாக்கள் ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்.

திருமுல்லைவாசலில் நிறைந்திருக்கும் குத்துபுகள் திலகம் சங்கைமிக்க ஜமாலிய்யா அஸ்செய்யிது யாசீன் மௌலானா அவர்களின் விசால் தின நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற இருப்பதால் மூன்று தினங்களுக்கு கஸீதா சபையில் ஓதப்படுகிறது.

நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் சங்கைமிக்க தந்தைநாயகத்தைப் பற்றிய நினைவுகளை ஷெய்கு நாயகம் அவர்கள் பகிர்ந்துக் கொண்ட பதிவுகளை சபையில் அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இஃஷா தொழுகை அங்கு நடைபெற்றது அதன் பின் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

சென்னையில் உதயதின விழா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் இன்று 09/10/2011 ஞாயிற்றுக்கிழமை காலையில் சங்கைமிக்க ஷெய்கு நாயகத்தின் உதயதின விழா கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு சென்னை வாழ் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

-தகவல் மற்றும் புகைப்படங்கள் : ஹைதர் நிஜாம் சென்னை






சத்தியம் அதிலே நித்தியம் நீ செய்

அறிவில் சிறந்த பெரியார் ஒருவர்
கல்வி ஞானத்தில் சிறந்தே திகழ்ந்தார்
இறைவன் ஒருவன் என்றே பகன்றார்
இதற்கென சான்றுகள் ஆயிரம் கொடுத்தார்

இவரை ஒருநாள் மரணம் நெருங்க
சிந்தை தடுமாற மிரண்டார்
அவர் சக்தி இழந்தே தவித்தார்
இறைவன் ஒருவன் என்றே கூறி

ஆயிரம் சான்றுகள் அதனை
அவர் ஒவ்வொன்றாகவே அழைத்தார்
ஆயிரம் அதனை செய்த்தான் அவனும்
வொவ்வொன்றாகவே வுடைத்தான்

அவர் வேதனை தொடரவே வதைத்தான்
கல்வி ஞானத்தின் பலத்தினை இழந்தே
தன் ஷெய்குவின் வுதவியை அழைத்தார்
சிந்தையை அவரிடம் குவித்தார்

'குல்ஹூவல்லாஹூ அஹத்' அதுவே
மும்முறை ஷெய்குவின் வாக்கு
கொண்டார் ஷெய்கில் நம்பிக்கை
பற்றிய உறுதியில் வெற்றி

ஆயிரம் சான்றுகள் தாரா வுதவி
தன்பலம் முழுதும் தாரா வுதவி
ஷெய்குவில் நம்பிக்கை கொடுத்தது
வெற்றியை அவர்பக்கம் அழைத்தது

சக்தியும் திடமும் இருக்கும் நாளில்
மானிடர் அறியார் உண்மை
மரணம் நெருங்கும் இயலாநாளில்
அறிய கிடைக்கவே நேரும்

சாரும் நீரும் ஷெய்கில் சரணம்
சத்தியம் அதிலே நித்தியம்-நீ செய்
சத்தியம் அதிலே நித்தியம்
ஜெயம் தர அதுவே போதும்-உன்
ஜெயம் தர அதுவே போதும்

ஆக்கம் : M.A. சிராஜுதீன் ஹக்கிய்யுள் காதிரிய்யி B.COM , D.T.Ed, துபாய்.

பொறாமை எனும் நஞ்சு

எங்கும் எவ்விடத்து பார்ப்பினும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தும் தன்னை சிறிது சிறிதாக அழித்து வரும் பேரழிவை கொடுக்கும் பொறாமை என்னும் நஞ்சு பதிந்துள்ளது.

இந்த பொறாமை மனத்துட் பதுங்கி கிடக்க முடியாது மேலிடும்போது இடத்தையோ நேரத்தையோ சிறிதும் கவனிக்காது குத்துவேன், வெட்டுவேன், கிழிப்பேன், அறுப்பேன் எனும் இழிவான சுலோகங்கள் வாயிலிருந்து
வெளியாகின்றன; எப்போதும் கொடிய எண்ணங்களுடைய நீசர்களுக்கே இத்தகைய கொடிய வார்த்தைகள்வெளிவருவதுண்டு.
நல்லவர்கள் வாயிலே நல்லவையே வெளியாகும் மற்றவன் மீது பொறாமை படுவதனால் பொறாமை படுபவனே இழிவுபட்டு அழிவு படும் நிலைமை உண்டாகிறது.

சிலர் நல்லவர்கள் போலிருக்கிறார்கள்.மற்றவரின் முன்னேற்றத்தையோ முயற்சியையோ உயர்ச்சியையோ கண்டபோது உள்ளம் எரிந்து நாசமாகின்றது.


இஃது எம் முரீத்களிலும், நல்லவர்போல் காட்சியளிப்பவரிடத்தும், முக்கியமானவர்கள் என கருதப்படுகின்ற சிலரிடத்தும் உள்ளதைப் பார்க்க நாம் கவலைப்படுகின்றோம் ஏன்? பாபம் இந்தக் கூட்டம் நாசமகப்போகிறதே
என்பதை நினைக்கும்போதுதான் கவலை.

சிலருக்கு நெருப்புக் கோபம் வருகிறது. வந்தவுடனே அவர்களுக்குக்
கண்மூக்கு தெரியாப்போகும். கண்மூக்கு தெரியாதவர் பாதை வழியே போவதும் ஆபத்து. எந்த நரகிற் போய் விழுவாரோ அதுவும் தெரியாது. இப்படி பொறாமையை வெளிக்கட்டுவோரும் உள்ளனர். உள்ளே அடக்கிக்கொண்டு
நிலைமாறுபவர்களும் உள்ளார்கள்.

இந்த நோய் இன்னும் சிலரிடத்து நீங்கவில்லை. இஃது ஒரு வகையான
கொடிய தொற்று நோய். இது தொற்றினால் நல்லவரையும் கெடுத்துவிடும்.


__ சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.


தகவல் : M. A. சிராஜூதீன். துபை.

உற்சாகத்துடன் உதயதின விழா

நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம்
குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித்
கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின்
76 - ஆவது உதய தின விழா...

நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் 76 - ஆவது உதய தின விழா, திருச்சியில் நமது மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக் கல்லூரி வளாகத்தில் - சங்கைக்குரிய குத்புல் பரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலி) அவர்களின் நினைவரங்கத்தில் 02.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

விழாவுக்கு சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

நமது ஷைகு நாயகமவர்களின் கலீபாக்கள் முன்னிலை வகித்தார்கள்.

மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி. N. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத் ஓதினார். மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரி மாணவர்கள் ஸத்தார் கான் ஹக்கிய்யுல் காதிரிய், பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோர் வஹ்ததுல் வுஜூத் பாடலைப் பாடினார்கள்.

மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியின் முதல்வர் ஜனாப். மக்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்களின் தலைமையுரையோடு விழாச் சொற்பொழிவுகள் தொடங்கின. கண்ணியத்திற்குரிய ஸய்யித் அலி மௌலானா அவர்கள், தலைமை கலீபா H.M. ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்(சென்னை), கலீபா.M. சிராஜுத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திருச்சி), கலீபா. A.முஹம்மது காசீம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (பெரம்பலூர்), கலீபா.ஆலிம்புலவர். S. உஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திண்டுக்கல்), தியாகி. M.முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திருச்சி), கலீபா. முஹம்மது காலித் ஷா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (மதுக்கூர்), கலீபா. அட்வகேட். A.N.M.லியாகத் அலி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (மதுக்கூர்) ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.
நிறைவாக, ஜனாப். J.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

சொற்பொழிவுகளுக்கு இடையிற் சோபனமாய், கலீபா. ஆலிம்புலவர். S. உஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், கலீபா. அட்வகேட். அப்துர் ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நபிப்புகழ்ப்பாக்களையும், ஞானப் பாடல்களையும் பாடினார்கள்.

விழா நிகழ்வுகளை தமிழ்மாமணி. மௌலவி.N.அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

சங்கைமிகு நமது ஷைகு நாயகமவர்களின் உதயதினமான இந்நன்னாளில், அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக, நமது சபையில் உள்ள முரீதுப் பிள்ளைகள் சிலருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நமது ஷைகு நாயகம் அவர்களின் உயரிய - புனித ஆக்கங்கள் அனைத்தும், மத்ரஸா வளாகத்தில் விற்பனைக்காக ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

சங்கைமிகு நமது ஷைகு நாயகமவர்களின் உதயதினமான பெருநாளை முன்னிட்டு, நமது மதுரஸா வளாகத்தைப் போன்ற மினியேச்சர் அமைப்பை, குலாம் கலீல். ஜனாப். அக்பர் அலி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. ஜாபர் அலி ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. V.M.முஹம்மது ஹஸன் ஆலிம் யாஸீனிய் ஆகியோரின் தூண்டுதலோடும், உறுதுணையோடும், மத்ரஸா மாணவர்கள் சத்தார் கான்,யூசுப் கான், இப்றாஹீம், முஹம்மது, ஹக்கீம் பாஷா, அப்துல் ஹக்கீம், உமர் கய்யாம், பீர் முஹம்மது, ஆஷிக் மௌலானா, A.சையது இப்றாஹீம், முஹம்மது யூனுஸ், முஹம்மது காலித், முஹம்மது ஹாரீஸ், ராஜா முஹம்மது,அனீஸ் அஹ்மத், நூர் முஹம்மது ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது மத்ரஸா மினியேச்சர் அமைப்பு ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியது.

விழாவுக்கான வீடியோ ஏற்பாட்டிற்கும், மினியேச்சர் அமைப்புக்கும், புதிய ஸ்டேஜ் அமைப்பிற்கும் தேவையான உதவிகளை குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஆத்ம சகோதரர்கள் முஹம்மது மீரான், நத்ஹர்ஷா மற்றும் முரீதுப் பிள்ளைகள் செய்திருந்தனர்.

விழா நிறைவாக, அனைவருக்கும் கந்தூரி உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல்,

நமது மத்ரஸாவிற்கு அருகில் அமைந்துள்ள சாந்திவனம் மனநலக் காப்பகத்திற்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் தமிழகமெங்குமிருந்தும் முரீதுப் பிள்ளைகள், அஹ்பாபுகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


தகவல் : A. நைனார் முஹம்மது அன்சாரி M.A, ஹக்கிய்யுல் காதிரிய், திருச்சி


விழா நிகழ்வுகளை தமிழ்மாமணி. மௌலவி.N.அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்(திருச்சி) தொகுத்து வழங்குகிறார்.

மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரி மாணவர்கள் ஸத்தார் கான் ஹக்கிய்யுல் காதிரிய், பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்
ஆகியோர் வஹ்ததுல் வுஜூத் பாடலைப் பாடுகிறார்கள்.
கலீபா.ஆலிம்புலவர். எஸ். உஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திண்டுக்கல்)



கண்ணியத்திற்குரிய சையதுஅலி மௌலானா (திருமுல்லைவாசல்)
தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.
தியாகி கலீபா சிராஜ்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.










கலீபா எம்.முஹம்மது காலீது (ஷா) அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

ஆலிம்புலவர்
அட்வகேட் கலீபா அப்துல்ரவூப் அவர்கள் நபிப்புகழ் பாடுகிறார்கள்.
முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திருச்சி) உரை நிகழ்த்துகிறார்கள்.
தமிழ்மாமணி. மௌலவி.N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்

தலைமை கலீபா . எம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நிதி உதவி வழங்குகிறார்கள்.
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக கண்ணியத்திற்குரிய சையதுஅலி மௌலானா அவர்கள் நிதி உதவி வழங்கினார்கள்.
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக, ஆத்ம சகோதரர் கலீபா A.N.M.லியாகத்அலி B A B L, ஹக்கியுல் காதிரி அவர்கள் நமது சபையில் உள்ள முரீதுப் பிள்ளைகள் சிலருக்கு நிதி உதவி வழங்கினார்.

ஆத்ம சகோதரர் ஜே.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றி உரை நிகழ்த்துகிறார்.
நமது ஷைகு நாயகம் அவர்களின் உயரிய - புனித ஆக்கங்கள் அனைத்தும், மத்ரஸா வளாகத்தில் விற்பனைக்காக ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.




நமது மதுரஸா வளாகத்தைப் போன்ற மினியேச்சர் அமைப்பை, குலாம் கலீல். ஜனாப். அக்பர் அலி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. ஜாபர் அலி ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. ஏ.ஆ. முஹம்மது ஹஸன்
ஆலிம் யாஸீனிய் ஆகியோரின் தூண்டுதலோடும், உறுதுணையோடும், மத்ரஸா மாணவர்கள் சத்தார் கான்,யூசுப் கான், இப்றாஹீம், முஹம்மது, ஹக்கீம் பாஷா, அப்துல் ஹக்கீம், உமர் கய்யாம், பீர் முஹம்மது, ஆஷிக் மௌலானா, ஏ. சையது இப்றாஹீம், முஹம்மது யூனுஸ், முஹம்மது காலித், முஹம்மது ஹாரீஸ், ராஜா முஹம்மது,அனீஸ் அஹ்மத், நூர் முஹம்மது ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.