This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புனித கந்தூரி ஜியாரத் விழா அழைப்பிதழ்

மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் புனித கந்தூரி விழா

எல்லாம் இருந்ததொரு காலம். தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்னும் வெளிரங்க வணக்கங்கள் விமர்சையாக கடைபிடிக்கப்பட்ட காலம். கட்டாய கடமை என்பதால் கடமைக்காக கலிமா சொல்லப்பட்ட காலம்.உள்ரங்கம் உருக்குலைய வெளிரங்கத்தில் இஸ்லாமியர் என்னும் அடையாளத்தில் அமோக வரவேற்பை பெற்ற பொய்யர்கள் நிறைந்ததொரு காலம். பற்பல பட்டங்களால் பட்டைதீட்டப்பெற்று பட்டப் பெற்றவர்கள் பசிக்காத பட்டினியாய் படைதிரண்டு நின்றதொரு காலம். மொத்தத்தில் அறியாமையை அறியாத அறிவாளிகள் நிறைந்த அந்த காலக்கட்டத்தில், பிரபஞ்ச சக்கரவர்த்தி, அறிவின் பட்டணம் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் தலைவாயிலாம், எங்கள் அலிபுலியாரின் (ரலி)வழியில் வெளிப்பட்ட ஏனைய கதிரவனில் அதியொளிர் கதிராய், அகமிய சுடராய், அற்புத உருவாய் தோன்றிய முஹையுத்தீன் ஆண்டகை அவர்களின் புனித மவ்லீது மஜ்லிஸ் கடந்த 05-03-2011 முதல் 15-03-2011 வரை 11 நாட்கள் சிறப்பான முறையில் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக ஓதப்பட்டது.

ஒளி அதிகரிக்க இருள் விலகும் என்பதுபோல் அகமிய இறை அறிவை நிறைவாய் தந்து, தம் பாட்டனாரால் விரிக்கப்பட்ட ரத்தினக் கம்பளத்தில் இம்மானிட வர்கத்தை மீண்டும் நடைகொள்ள செய்த மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் புனித கந்தூரி விழா கடந்த வியாழன் 17-03-2011 அன்று மஹ்ரிப்பிக்கு பின் புனித மிகு இராத்திப்பத்துல் ஹக்கிகத்துல் காதிரிய்யா ஓதப்பட்டு அதை தொடர்ந்து விழா சிறப்பான முறையில் நிகழ்ந்தது.

இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வ‌கித்தார்க‌ள்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக அருள்மறையாம் திருமறையிலிருந்து அப்துல் பாஸித் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
கொடிக்காள்பாளையம் ஹாஜா அலாவுதீன் வஹ்தத்துல் வுஜூது பாடலினை ஓத‌ அத‌ன் த‌மிழாக்க‌த்தை மன்னார்குடி ஷேக்தாவுது அவர்கள் வாசித்தார்கள்.
மதுக்கூர் சாஹுல் ஹமீது ஞானப்பாடலைப் பாடினார்கள்.
நபிப்புகழ் பாடலினை மதுக்கூர் தாவூது பாடினார்கள்.

இவ்விழாவில் பேசியவர்கள்:

நிர்வாகத்தலைவர் கலீபா ஏபி.சஹாபுதீன் - தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
A.N.M.முஹம்மது யூசுப் M.A
மௌலவி அப்துல்ஹமீது நூரி
சுல்தான், ம‌துக்கூர்
ஹிதாய‌த்துல்லா, ம‌துக்கூர்

தவ்பா பைத் ம‌ற்றும் ச‌லவாத்துட‌ன் விழா சிறப்புட‌ன் நிறைவேறிய‌து. வ‌ருகை த‌ந்த‌ அனைவ‌ருக்கும் இரவு உணவு வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌து.
இப்புனித மவ்லீதுக்கும், விழாவிற்க்கும் தொடர்ந்து வருகை தந்து சிறப்பித்த சிறப்பை பெற்றுச்சென்ற அனைத்தவருக்கும் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.

தொகுப்பு .மதுக்கூர் அமீர்அலி
புகைப்படம். அதிரை ஷர்புத்தீன்
மீலாதுந்நபி பெருவிழா

அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் .


19.03.2011 சனிக்கிழமை மதுக்கூர் சிவக்கொல்லை A.K.S திருமண மண்டபத்தில்


தரீக்கத்துள் ஹக்கிய்யத்துள் காதிரிய்யா
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை
மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
சார்பாக
நம் உயிரினும் மேலான ரசூலே கரீம் ஷல்லல்லாகு அலைஹி வசல்லம் அவர்களின் மீலாதுந்நபி பெருவிழா காலை 9.30 முதல் நடைபெற்றது

ஜனாப் கலீபா முஹம்மது காலிது ஹக்கிய்யுள் காதிரிய் அவர்கள்
அவர்கள் தலைமையேற்க ,


ஜமா அத்தார்கள் முன்னிலை வகித்தனர்

கிராஅத் திணை ஜனாப் M. அல்லாமா அப்துல் கரீம் ஹக்கிய்யுள் காதிரிய் அவர்கள் ஓதினார்கள் .


வரவேற்பினை ஜனாப் N.P.M பக்கீர் முஹைதீன் ஹக்கிய்யுள் காதிரிய் B.S.c., அவர்கள் நிகழ்த்தினார்கள்


நபிப்புகழ்ப்பாவினை ஜனாப் R.செய்யிது சலீம் மௌலானா, ஜனாப் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுள் காதிரிய்,


ஜனாப் M.அஹம்மது கபீர் ஹக்கிய்யுள் காதிரிய் அவர்களும் இசைத்தார்கள் .


சிற்றுரை : மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் இமாம் மௌலவி ஹாஜி ஷேக் அலி ரஹீமி அவர்களும்
மேலப்பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மது முஹைதீன் நூரி அவர்களும்
திருமக்கோட்டை பள்ளியின் இமாம் மௌலவி ஜாகிர் ஹுசைன் நூரி அவர்களும் வழங்கினார்கள் .


அண்ணல் நபியும் அஹ்லபைத்துகளும் என்ற தலைப்பிலே காயல் பட்டினம் ஜூம்ஆ பள்ளியின் தலைமை கதீப் மௌலவி ஹாபிழ் H.Aஅப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்


சிறப்பு சொற்பொழிவிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு விடையளித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .


ஆண்கள் பெண்கள் என 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது நிஹழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இருந்தது

நிஹழ்ச்சியின் முடிவில் (1.50p.m) உணவுபொட்டலங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன .


மன நிறைவோடும மகிழ்ச்சியோடும் விழாக்குழுவினர் கலைந்து சென்றனர் , எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே .


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள்.

தகவல் : கலீபா அட்வகேட் லியாக்கத் அலி ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்
புகைப்படங்கள் :Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்
அதிரையில் மீலாதுன்னபி விழாஅதிராம்பட்டினத்தில் உஸ்வத்துன் ஹஸனா மீலாதுவிழா கமிட்டியினரால் 14 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக சிறப்பான முறையில் சுன்னத் வல் ஜமாஅத் அகிதா உடைய ஆலிம் பெரும் மக்கள் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இன்ஷாஅல்லாஹ் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 9.00 மணிவரையில் மிகச் சிறப்பாக பல மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவுடன் இந்த ஆண்டும் மீலாதுவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவினை இணையத்தின் வாயிலாக நாம் காண்பதற்கு அதிரைநேசம் (இங்கு கிளிக் செய்யவும்) வலைதளம் நமக்கு நேரடி ஒளிப்பரப்பை அளிக்கிறது.

கண்மணிநாயகம் (ஸல்அலை) அவர்களின் புனித பிறந்ததின விழாவை நேரடியாக காணும் பாக்கியத்தை தந்த உஸ்வத்துன் ஹஸனா குழுவினருக்கும் அதிரைநேசன் வலைதளத்திற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்கிருபை ரஹ்மத்தும் அளிப்பானாக ஆமின்.

மீலாதுபெருவிழா அழைப்பிதழ்

மதுக்கூரில் மீலாதுபெருவிழா ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சார்பாக நடைபெற உள்ளது அனைவரும் அதில் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம்.


Movie.wmv மௌலுதுன்னபி

பிரபஞ்சத்தின் பேரின்பம் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் உதயதின விழா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 4ஃ03ஃ2011 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானாரின் பேரில் புர்தா ஷரீப் ஓதப்பட்டது.

மீலாதுவிழா ஆரம்பமானது
நிகழ்ச்சியின் துவக்கமாக

கிராஅத் - மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி அவர்கள்

ஹுவல்வுஜூத் பாடல் - ஹாஜாஅலாவுதீன்
தமிழாக்கம் - ஷேக்தாவூது
ஞானப்பாடல் - முஹம்மது தாவூது

நபிப்புகழ் பாடல் - தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பைஜி மற்றும் அடமங்குடி அப்துல்ரஹ்மான்

கவிதைகள் - மதுக்கூர் சாகுல்ஹமீது
கோட்டக்குப்பம் மைதீன்
கிளியனூர் இஸ்மத்
பேச்சாளர்கள்

திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா
கலீபா ஏ.பி.சகாபுதீன்
டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார்

மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டிக்கான அறிவிப்பு தொகுத்தவர்

கிளியனூர் இஸ்மத்

ஆடியோ - அதிரை அப்துல்ரஹ்மான்

புகைப்படங்கள் - அருப்புக்கோட்டை அப்பாஸ்

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித பிறந்ததின விழா மிக சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரசூலே கரீம் (ஸல் அலை)அவர்களின் பெயரில் மீலாது கேள்வி-பதில் போட்டி அறிவிக்கப்பட்டு அமீரகத்தில் வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் பலரும் இந்த போட்டியில் கலந்து சகோதரத்துவ சமயத்தின் அன்பர்களும் இப்போட்டியில் கலந்து தங்களின் பதில்களை அனுப்பிவைத்திருந்தனர்.

இந்த மீலாதுவிழா போட்டியில் கலந்துக் கொண்டு பதிலளித்த இரு நூறுக்கும் அதிகமானவர்கள் அனைவருக்குமே பரிசளிக்க வேண்டும் என்பது ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையினரின் ஆசை. ஆனால் இடவசதியின்மை காரணத்தினால் நாற்பது நபர்களுக்கு மட்டும் பரிசளித்து அவர்களை கொளரவப்படுத்தினோம்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இதைவிட மிகச்சிறப்பாக இவ்விழாவை செய்ய உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசு துபாய் அவ்காப்பின் டைரக்டர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார்(கல்வி இலாக்கா) அவர்கள் கலந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கொடுத்தும் இவ்விழாவில் கண்மணி நாயகத்தின் வாழ்க்கை சரித்திரத்தை மிக அழகாக சுறுக்கமாக அரபு மொழியில் உரை நிகழ்த்தினார்கள்.அவர்களின் உரையை அன்புச் சகோதரர் அபுதாஹிர் அவர்கள் மொழிப் பெயர்த்து தமிழில் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களும் லால்பேட்டை ஜமாத்தார்கள் மற்றும் பல அமைப்பினர்ககளும் கலந்து சிறப்பித்தார்கள்.

இனி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
கிராஅத் - மௌலவி அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி


தலைவர் கலீபா A.P.சகாபுதீன் BE. M.B.A
ஹுவல்வுஜீது பாடல் - ஹாஜா அலாவுதீன் கொடிக்கால்பாளயம்

அதன் தமிழாக்கம் -ஷேக்தாவூது மன்னார்குடி

ஞானப்பாடல்- முஹம்மது தாவூது

நபிப்புகழ் பாடல் - அடமங்குடி அப்துல்ரஹ்மான்

திருமுல்லைவாசல் சையதுஅலி மெளலானா அவர்களின் உரைதீன் இசைசத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பைஜி பாடும் நபிப்புகழ்திருக்குர்ஆன் விரிவுரையாளர் கீழக்கரை மஹ்ஃருப் அவர்களின் சொற்பொழிவு


ஐக்கிய அரபு குடியரசின் துபாய் அவ்காப் டைரக்டர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களை சால்வே அணிவித்து மௌலானாமார்கள் வரவேற்கும் காட்சி
கவிதை வாசிக்கும் மதுக்கூர் சாகுல்ஹமீது

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அவர்கள்
கவிதை வாசிப்பது கோட்டக்குப்பம் முகைதீன்

கவிதை வாசிப்பது கிளியனூர் இஸ்மத்

மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருப்பது கிளியனூர் இஸ்மத்

ஊக்கப்பரிசை சையதுஅலி மௌலானாஅவர்களிடமிருந்து பெறுபவர் முஹம்மது ரபீக் - சோழவந்தான்
ஊக்கப்பரிசு வழங்குபவர்கள் - ஜாகித்அலி மௌலானா தலைவர் கலீபா சகாபுதீன்
பெறுபவர் - ஜபர்உசேன் - மதுரை
ஊக்கப்பரிசு வழங்குவது அப்துல்ஹை மௌலானா
பெறுபவர் -ஷேக்முஹம்மது - தேரிழந்தூர்
ஊக்கப்பரிசு ஜியாவுதீன் மௌலானா வழங்க
பெறுபவர் அஹமதுஅலி - அறும்பாவூர்
ஊக்கப்பரிசு அடமங்குடி அப்துல்ரஹ்மான் வழங்க
பெறுபவர் முர்ஷித்அலி - காயல்பட்டனம்
ஊக்கப்பரிசு அபுசாலிஹ் வழங்க
பெறுபவர் சலாவுதீன் முஹம்மது காசிம் - திருச்சிராப்பள்ளி
ஊக்கப்பரிசு அதிரை அப்துல்ரஹ்மான் வழங்க
பெறுபவர் காஜாமுகைதீன் - சென்னை
ஊக்கப்பரிசு ஆதம் அப்துல்குத்தூஸ் வழங்க
பெறுபவர் ஹாபில் அமீர் - காயல்பட்டனம்
ஊக்கப்பரிசு முஹம்மது தாவூது வழங்க
பெறுபவர் ஜிப்ரான் முனாப் - கொல்லாபுரம்
ஊக்கப்பரிசு மஹ்ஃரூப் காக்கா வழங்க
பெறுவர் எஸ்.எம்.பாரூக் அவர் சகோதரர் சுபைர் - திருவிட்சசேரி
டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் உரை நிகழ்த்துகிறார்
தமிழாக்கம் அபுதாஹிர்

அமர்வதற்கு இடமின்றி திரளாக நிற்கும் சகோதரர்கள்

ஊக்கப்பரிசு வழங்குவது அப்துல்மாலிக்
பெறுபவர் - ராஜ் - நாகப்பட்டினம்

ஊக்கப்பரிசு வழங்குபவர் அபுல்பசர்
பெறுபவர் - இனயத்துல்லாஹ்- வடக்குமாங்குடி

ஊக்கப்பரிசு வழங்குபவர் ஷேக்தாவூது

பெறுபவர் ஜமால் -ஈரோடு

ஊக்கப்பரிசு வழங்குபவர் ஷேக்மைதீன்

பெறுவர் - சகோதரி பௌஜியாவுக்காக அவர் சகோதரர்

ஊக்கப்பரிசு வழங்குபவர் பஷீருல்லாஹ்

பெறுபவர் - சவுக்கத்அலி -உத்தமப்பாளயம்

ஊக்கப்பரிசு வழங்குபவர் அபுதாஹிர்

பெறுபவர் -அபுசாலிக்அலி - பள்ளப்பட்டி - முஹம்மது ரபீக்

ஊக்கப்பரிசு வழங்குபவர் மதார்ஷா

பெறுபவர் - உசேன்சாகிப் மரக்காயர் நாகூர்

ஊக்கப்பரிசு வழங்குபவர் அமீர்அலி

பெறுபவர் - ஹமீம் காரைக்கால்

ஊக்கப்பரிசு வழங்குபவர் முஹம்மது ரியாஸ்

பெறுபவர் ஷபீக் - அதிராம்பட்டினம்

ஊக்கப்பரிசு வழங்குபவர் அப்துல்கபூர்

பெறுபவர் ஹபீப்ரஹ்மான் - விகளத்தூர்

ஊக்கப்பரிசு வழங்குபவர் முஹம்மது மைதீன்

பெறுபவர் சலாவுதீன் - நீடாமங்கலம்

ஊக்கப்பரிசு வழங்குபவர் இத்ரீஸ்

பெறுவர் வசீம் - தஞ்சாவூர்

ஊக்கப்பரிசு வழங்குபவர் அப்துல்ஜப்பார்

பெறுபவர் அப்துல்ரஹீம் - வடக்குமாங்குடி

ஊக்கப்பரிசு வழங்குபவர் அப்துல்ரவூப்

ஊக்கப்பரிசு வழங்குபவர் தீன் இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன்

பெறுபவர் அப்துல்வஹாப் - கண்டி இலங்கை

ஊக்கப்பரிசு வழங்குபவர் ஜெய்னுல் ஆபிதீன்

ஆறுதல் பரிசு வழங்குபவர் அதிரை சர்புதீன்

பெறுபவர் -மன்சூர்அலி - கோயம்புத்தூர்

ஆறுதல்பரிசு வழங்குபவர் புஹாரி (மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத் தலைவர்) பெறுபவர் முஹம்மது காசிம் மதுக்கூர்
ஆறுதல்பரிசு வழங்குபவர் இமாமுதீன் (மதுக்கூர் சுன்னத்வல்ஜமாஅத் கௌரவ ஆலோசகர்)

பெறுபவர் அப்துல்கபூர் - கூத்தாநல்லூர்ஆறுதல்பரிசு வழங்குபவர் முஹம்மது ரூமி (சமுதாய ஊழியர்)

பெறுபவர் ஜே.பஷீர்ஹகமது - லப்பைக்குடிகாடு

ஆறுதல்பரிசு வழங்குபவர் மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி

பெறுபவர் மஹ்ஃரூப் - கீழக்கரை

ஆறுதல்பரிசு வழங்குபவர் பக்கிரிராஜ்

பெறுபவர் ஹகமது முஸ்தபா - காயல்பட்டனம்

தீன் இசைத்தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் நபிப்புகழ் பாடுகிறார்
அலையென திரண்டு நிற்கும் ஆன்மீகச்சகோதரர்கள்
மூன்றாம் பரிசை வழங்குகிறார்கள் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜராருடன் அந்த பரிசை ஸ்பான்ஸர் செய்த ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் அவர்கள் E5 நோக்கியா செல்போன் வழங்கி அத்துடன் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சாற்றிதழும் வழங்கப்பட்டது.

பெறுபவர் முஹம்மது உசேன் - அத்திக்கடை
இரண்டாம் பரிசை வழங்குகிறார்கள் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜராருடன் அந்த பரிசை ஸ்பான்ஸர் செய்த A.M.உஸ்மான் அவர்களின் புதல்வர் U.ஹிதயத்துல்லாஹ் அவர்கள் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சாற்றிதழும் வழங்கப்பட்டது.

பெறுபவர் K.M.முஹம்மது அப்துல்காதர் - காயல்பட்டனம்
முதல் பரிசை வழங்குகிறார்கள் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜராருடன் அந்த பரிசை ஸ்பான்ஸர் செய்த தலைவர் கலீபா A.P.சகாபுதீன் BE.M.B.A அவர்கள் துபாய் - சென்னை - துபாய் விமான டிக்கேட் வழங்குகிறார்கள் அத்துடன் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சாற்றிதழும் வழங்கப்பட்டது.

பெறுபவர் முஹம்மது யூசுப்பைஜி - லால்குடி

நினைவுப் பரிசை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு தலைவர் கலீபா A.P.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி வழங்குகிறார்
முதல் பரிசைப்பெற்ற முஹம்மது யூசுப் பைஜியின் தந்தை யூசுப் சலைமான் பைஜி மீலாதுவிழா கேள்வி -பதில் பொட்டியில் முதல் பரிசு பெற்ற அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.


நிறைவாக நன்றி உரை நிகழ்த்துகிறார் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி

யா நபிஸலாம் அலைக்கும் பைத் ஓதப்படுகிறதுஇந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் உணவும் இனிப்பும் வழங்கப்படுகிறது.
மீலாதுவிழா கேள்விபதில் போட்டிக்கு ஸ்பான்சர் செய்தவர்கள் அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.

A.P.சகாபுதீன்

A.N.M.முஹம்மது யூசுப்

U.ஹிதயத்துல்லாஹ்

A.N.M.M.முஹம்மது இஷாக் மற்றும் அவர் நண்பர்கள்

வைத்தியர் அப்துல்மாலிக்

ஆகியோர்களுக்கு மிக்க நன்றி.!


மீலாதுவிழா கேள்வி - பதில் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.!