ஆகஸ்ட் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 05/08/2011 வெள்ளிக்கிழமை மாலை இப்தாருக்கு பின் ஆகஸ்ட் மாதக்கூட்டம் மௌலானா முன்னிலையில் நிர்வாகத் தலைவர் ஏ.பி.சகாபுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மௌலவி முஹம்மது மூஸா மன்பஈ அவர்கள் வருகைப்புரிந்து சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தாயகத்திலிருந்து வருகைப்புரிந்திருக்கும் மூத்த சகோதரர் கண்ணியமிக்க கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து சொற்பொழிவாற்றினார்கள்.

இன் நிகழ்ச்சிக்கு அஜ்மானிலிருந்து பாம்பன் ஜாஹிர்உசேன் மற்றும் அப்துல்கபூர் வருகை புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக திருக்குர்ஆனிலிருந்து கோட்டைக்குப்பம் முஹைய்தீன் கிராஅத் ஓதி துவங்கினார்.
அதன் பின்னர் வஹ்தத்துல்வுஜீத் அரபுபாடலை முஹம்மது தாவுது பாடினார்
நபிப்புகழ்பாடலை மதுக்கூர் சாகுல்ஹமீது பாடினார்

ஞானப்பாடலை பாடுவது மதுக்கூர் சிராஜ்தீன்


தலைமை உரை நிகழ்த்துகிறார் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள்
பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் உரை நிகழ்த்துகிறார்
கிளியனூர் இஸ்மத் உரை நிகழ்த்துகிறார்

சிறப்பு சொற்பொழிவு மௌலவி முஹம்மது மூஸா மன்பஈ நிகழ்த்தினார்கள்.


தௌஃபா பைத்துடன் இனிதே ஆகஸ்ட் மாதக்கூட்டம் நிறைவு பெற்றது.புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான் மற்றும் முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்