பதுரு சஹாபாக்கள் நினைவு தினம்

ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு என்ற இடத்தில் மதினாவிற்கு அருகில் பதுரு யுத்தம் நடைப்பெற்றது.எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாகு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் இஸ்லாம் பரவுவதற்கும் முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி.அறுநூற்றிருபத்து நான்காம் ஆண்டு ஹிஜ்ரி இரண்டாம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள் 313 பேர் என்றும் இன்னும் வேறு பல வேறுபாடுகளும் கூறுகின்றனர்.எதிரிகளின் தொகை ஏறக்குறைய ஆயிரம் என்றனர்.எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.போர் நடந்த அந்த இடங்களின் படங்களை கீழே பாருங்கள்On 17th Ramadan Year 2nd of Hejra, Prophet Mohammad (PBUH) came to BADER from MADINA With around 300 of his Followers from the way shows in picture (Red Arrow).Prophet Mohammed (PBUH) Camp with his Army in this Area and The Hill in the Picture is Called (Odoat Al Dunea)Right Arrow Shows (Al Odoat Al Dunea) and on versant of it Muslims Camp, Middle Arrow Shows the way which ABO SOFEAN Convoy pass all the way through and Left Arrow Shows Malaeka mountain (where JEBREAL and MEKAEAL sent By ALLAH with 1000 Of Malaeka to help Muslims Army against Unbelievers.)This is where Muslims Army moved to where BADER WELL was at the back of themA different picture angle of (Al Odoat Al Dunea) and Malaeka Mountain and the new camp area where Muslims moved to.The Arrow shows the place of the Followers GravesBADER THE OLD TOWNஅந்த சிறப்புமிக்க யுத்தத்தில் கலந்துக் கொண்ட பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17-லில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 16/08/2011 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன.அத்துடன் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள் உறுப்பினர் அனைவரும் திருக்குர்ஆன் 30 சூதும் ஒதி பதுரு சஹாபாக்களுக்கு ஹதியா செய்தனர்.அதன் பின் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் பதுரு சஹாபாக்களின் சரிதையை சுருக்கமாக 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்கள்.இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பல அமைப்புகளிலிருந்தும் அழைக்கப்பட்டு, பலரும் வருகைப்புரிந்து, சங்கைமிக்க புனித பத்ரீன்களின் நினைவுதினத்தை கண்ணியப்படுத்தி, இறைவனிடமிருந்து நற்கிருபையை பெற்றவர்களாக இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் அல்லாஹ்தால அவர்களின் நாட்டங்களை நிறைவேற்றி நன்மைகளை அதிகமதிகம் வழங்குவானாக ஆமீன்.துபாய் ஈமான் அமைப்பிலிருந்து விழாக்குழுச் செயலாளர் முஹம்மது யஹ்யா, ஈமானின் தணிக்கணையாளரும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணைத் தலைவருமான எஸ். முஹம்மது பாருக், அமீரக சமூகசேவகர் குத்தாலம் அசரப்அலி, வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா, மதுக்கூர் சுன்னத்வல் ஜமாஅத்தினர்கள், மற்றும் லால்பேட்டை ஜமாஅத்தினர்கள் கீழக்கரை அபுதாஹிர்பைஜி, கீழக்கரை மஹ்ரூப் காக்கா, மற்றும் ஊடகத்துறை முதுவை ஹிதாயத்துல்லாஹ்,கீழக்கரை யாசீன் மற்றும் கோட்டுர் வடகரை ஷேக்தாவூது மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பதுரு சஹாபாக்களின் நினைவு தினத்தை மிக சிறப்பாக நிகழ்த்தி இஃப்தார் நிகழ்ச்சியையும் சிறப்புச் செய்தார்கள்.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

முதுவை ஹிதயத்துல்லா