சோபனம் பாடி மகிழ்ந்திடுவோம்ஷவ்வால் பிறையின் பதினாறில்

சுந்தர மகவாய் அவ்ன் நாதர்

அவனியை காக்க அவதரித்த

அருள்நிறை ஜோதியை பாடுவமேபாடும் பொருளாய் திலங்கிடுவோர்

எம் பாவம் போக்கி நிலைத்திடுவோர்

மீட்சி கொடுத்தே யாவர்க்கும்

மேன்மை தந்தோரை பாடுவமேபூமிக்கருட்செய இறை நினைத்த

அருட்கொடை வரிசையின் வரிசையரே

அருளாய் எங்கும் நிறைந்து நிற்கும்

அற்புதரை நாம் பாடுவமேஇணையில்லாத இறை விளக்கம்

இறை வலிய் உங்கள் நிறைபோதம்

இரவா நிலையிலும் ஈந்து வரும்

இயல்பினரை நாம் பாடுவமேஎழுத்தாய் மொழியாய் இன்சொல்லாய்

ஏகம் விளக்கி இறை பொருந்த

நிறைவாய் நிற்கும் தத்துவரை

தவறாமல் நாம் பாடுவமேதங்களை காண்பது நலம் பயக்கும்

எங்களின் எல்லா குறை மறையும்

மறுவிலா முழுமதி குலம் தழைத்த

குருகுல நாதரை பாடுவமேஎங்களின் குலமும் தழைத்திடவே

குறையில்லாது வளர்ந்திடவே

பூரணர் அருளைப் பெற்றிடவே

பூர்த்தியாகப் பாடுவமேநிறைந்த புகழும் சாந்தியுடன்

சமாதான முதலாம் நிறைவுகளும்

நித்தியமாக தாங்களுக்கே

எங்களின் இதயம் பாடிடுமே

M.A.சிராஜுதீன் ஹக்கியுல் காதிரி B.com., D.T.Ed.( camp:dubai ) மதுக்கூர் .