புனித புர்தா நிகழ்ச்சியும் மாதாந்திரக் கூட்டமும்வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு புனித புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்றது இன்நிகழ்ச்சிக்கு அனைத்து முரிதீன்களும் கலந்துக் கொண்டனர்.

புர்தா நிகச்சிக்கு பின்னர் மாதாந்திரக் கூட்டம் துவங்கியது.இக்கூட்டம் மௌலானாமார்களின் முன்னிலையில் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்புவிருந்தினராக இந்தியாவிலிருந்து வருகைப்புரிந்துள்ள கண்ணிமிக்க கலீபா மௌலவி எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்கள் கலந்து விழாவை சிறப்பித்து தந்தார்கள்.கிராஅத் கோட்டைக்குப்பம் முஹைய்தீன்

கலீபா ஆலிம்புலவர் ஹுவல் வுஜூது பாடலைப்பாடுகிறார்கள்

ஹுவல் வுஜூது பாடலின் தமிழாக்கத்தை அபுல்பஸர் வாசிக்கிறார்

நபிப்புகழ்பாடுவது முஹம்மது தாவுது அவர்கள்


ஞானப்பாடல் பாடுவது சிராஜ்தீன் அவர்கள்


தலைமை உரை நிகழ்த்துகிறார்கள் சையதுஅலி மௌலானா


நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் உரை நிகழ்த்தகிறார்கள்

கலீபா ஆலிம்புலவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கொளரவப்படுத்துகிறார்கள்சிறப்புரை நிகழ்த்துகிறார்கள் ஆலிம் புலவர் அவர்கள்நன்றிஉரை நிகழ்த்துகின்றார் முஹம்மது யூசுப் அவர்கள்புகைப்படம் - அருப்புக்கோட்டை அப்பாஸ்