அவ்னிய்யா கம்பியூட்டர் கல்வி மையம் திறப்புவிழா!

நமது உயிரினும் மேலான சங்கைக்குரிய இமாம் வாப்பா நாயகமவர்களின் கனவை மெய்பிக்கும் வண்ணமாக ஜமாலிய்யாத் தோட்டத்தில் இன்னொரு மலராக - ஜாமிஆ யாசீன் கல்லூரியின் மற்றொரு கிளையாக எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையால் அகிலத்தின் அருட்கொடை அண்ணலெம் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் நல்லாசியால் சங்கைக்குரிய இமாம் வாப்பா நாயகமவர்களின் துவா பரக்கத்தால்

சென்ற 24.04.2011 (ஞாயிற்றுக்கிழமை)நமது மதரஸா வளாகத்தில் சீரும் சிறப்புமாக அவ்னிய்யா கம்பியூட்டர் கல்வி மையம் இனிதே துவங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு கண்ணியத்திற்குரிய ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் கலீபாக்கள் முஹிப்பான முரீதுகள் தமிழகமெங்குமிருந்தும் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முதல்வர் எம்.சேக்முஹம்மது அவர்கள் விழாவில் கலந்து உரையாற்றிய போது

"மதரஸாக்களில் உலக்கல்வியுடன் கம்பியூட்டர் கல்வியும் இணைத்து மாணவர்களுக்கு வழிகாட்டுவது இதுவரையில் எங்குமே நடைபெறாத பார்க்காத ஒன்று. இது வரலாற்றிலே பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று"
என சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மற்றுமொரு சிறப்பு விருந்தினராக ஜே.ஜே.பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஹுசைன் லால் அவர்கள் பேருரையாற்றினார்கள்.

விழாவில் கலந்துக் கொண்டவர்களின் முன்னிலையில் கண்ணியத்திற்குரிய தலைமைக் கலீபா எச்.எம்.ஹபீபுல்லா அவர்கள் அவ்னிய்யா கம்பியூட்டர் கல்வி மையத்தை திறந்து வைத்தார்கள்.

அதன் பின்னர் ஏகத்து மெய்ஞ்ஞானசபையின் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.இதில் திரளாக முரீது பிள்ளைகள் கலந்துக் கொண்டனர்.அவ்வமயம் தலைமைக் கலீபா எச்.எம்.ஹபீபுல்லா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்கள்.மற்றும் ஜே.எம்.சதக்கத்துல்லா அவர்கள் ஆண்டுக்கணக்கைச் சமர்ப்பித்தார்கள்.

சலவாத்துடன் விழா சலாமத்தாக நிறைவுப் பெற்றது.விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல் - அன்சாரி திருச்சி