திருமறை தந்த மாநபியே மாபெரும் மருத்துவர் ‍‍‍‍- அல் குர்ஆன்

Allah - beginning with the name of - the Most Gracious, the Most Merciful

குல் அ'வுஸுபிரப்பில் ஃபலக் குல் அ'வ்ஸுபிரப்பின் நாஸ் அல் குர்ஆன் ஷரிஃப், அத்தியாயம் அல் ஃபலக் வசனம் 1-5 மற்றும் அத்தியாயம் அன் நாஸ் வசனம் 1-6 [113:1]
(நபியே!) நீர் சொல்வீரா...க: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். [113:2]
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- [113:3]
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- [113:4]
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், [113:5] பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). -- Allah - beginning with the name of - the Most Gracious, the Most Merciful [114:1]
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். [114:2]
(அவனே) மனிதர்களின் அரசன்; [114:3]
(அவனே) மனிதர்களின் நாயன். [114:4]
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). [114:5]
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். [114:6] (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

-- இந்த இரு அத்தியாயங்களின் வசனங்களிலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புகழ் கீதம் காணப்படுகின்றது. இந்த இரு அத்தியாயங்கள் அருளப்பட்டதன் காரணமானது, லுபைத் பின் அஹ்ஸம் என்பவன் ஒரு யஹுதியாவான், அவனும் அவனது பெண்களும் சேர்ந்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மீது கடுமையான சூனியம் வைத்தார்கள். இந்த சூனியத்தினால் நம் நபிகளார் புனித உடல் நலிவுற்று பாதிக்கப்பட்டது.

சில நாட்கள் கழித்து ஹஜ்ரத் ஜிப்ரில் ரூஹுல் அமின் அலைஹி சலாம் அவர்கள் வருகைபுரிந்து கூறினார்கள்
யா ரஸுலுல்லாஹ் ! ஒரு யஹுதி தங்கள் மீது சூனியம் செய்து அதன் பொருட்களை ஒரு கிணற்றில் இருக்கும் ஒரு கல்லின் அடியில் வைத்துள்ளான் என்றார்கள்..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ஹஜ்ரத் சையதினா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து அந்த கிணற்றிக்கு போகச் சொல்லி அவைகளை எடுத்துவருமாறு உத்தரவிட்டார்கள் சையதினா அலி ரழியல்லாஹு அன்ஹு அந்த கிணற்றிக்கு சென்று அதில் உள்ள நீரை எடுத்தார்கள். பின்பு அந்த கல்லை எடுத்து பார்க்கும் போது அதன் அடியில் பேரித்தம் மரத்தின் இலைகளினால் ஆன பை காணப்பட்டது.

அந்த பையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தலை வாரும் சீப்பிலிருந்து எடுத்த "தலைமுடி" (மயிர்)கள் காணப்பட்டன. மேலும் அம்பு எய்யும் வில்லில் உள்ள கயிறு அதில்11 முடிச்சுக்கள் இருந்தன மற்றும் திடமான மெழுகு அதில் மறைந்து வைக்கப்பட்டிருந்த‌ 11 ஊசிகள் தென்பட்டன. இவை அனைத்தும் எடுத்துக் கொண்டு நபிகளாரின் முன் வைக்கப்பட்டது.
இத்தருணத்தில் தான் இந்த இரு அத்தியாயங்கள் அருளப்பட்டன. இதில் மொத்தம் 11 திருவசனங்கள் உள்ளன. அல் ஃபலக் அத்தியாயத்தில் 5 வசனங்களும் அல் நாஸ் அத்தியாயத்தில் 6 வசனங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு வசனத்தையும் படித்த போதே ஒவ்வொரு முடிச்சும் தானாக கழன்று கொண்டது. எல்லா வசனங்களையும் படித்து முடித்த போது எல்லா முடிச்சும் முற்றிலுமாக கழன்றுவிட்டன. அப்போதெ நாயக திருமேனி பூரண சுகம் பெற்றுவிட்டார்கள்.
(தப்ஸீர் கஸாஃயினுள் இர்ஃபான்) இதன் மூலம் பல்வேறு விஷயங்களைக் கொண்டு நாம் தெளிவடையலாம்.
பயன்: 1 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் புகழ் அல்லாஹ் ரப்புல் ஆலமினிடம் மிகவும் மகத்தும் வாய்ந்ததாக இருந்தது. நபிகளாருக்கு சுக வைத்தியம் அல்லது வேறு ஏதும் தேவைப்படுமாயின், நபியுல் கரீம் அவர்களுக்கு எந்த ஒரு வைத்தியரோ அல்லது வேறு எந்த ஒரு நபரின் உதவியோ தேவைப்படாது. அல்லாஹ் சுப்ஹானஹுதாலா ஒருவனே நபியின் தேவையனைதிற்க்கும் போதுமானவனாக இருக்கின்றான். நபிக‌ளார் இவ்வுலகத்தின் மருத்துவர்கள் அனைவருக்கும் பரிபூரண மருத்துவராக இருக்கின்றார்கள்.
நபியுல் அம்பியாவிற்கு வைத்தியம் பார்க்க இவ்வுலகத்தில் யார் இருக்கின்றார்? ஆனால் நாம் அனைவருமே நபிகளாரின் உதவியை நாடி இருக்கின்றோம். ரசூல் அலைஹி ஸலாம் அவர்களுக்கு இறைவனை தவிர உதவி புரிபவர் வேறு எவரும் இல்லை.

பயன்: 2 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு இறைவன் ஆன்மீக‌ கல்வியுடன் உலக கல்விகளையும் கற்றுக்கொடுததுள்ளான். எடுத்துக்காட்டாக மருத்துவம் சார்ந்த கல்வி, மருத்துவ முறைகள் மற்றும் அனைத்து ஞானங்களையும் கற்றுக் கொடுத்துள்ளான். எனவே நபிகளார் எந்த ஒரு மருத்துவரிடமும் எதைப் பற்றியும் ஆலோசனை பெற்றதில்லை. ஹதீஸ் நூல்களின் "துஆ" பற்றிய பகுதிகள் காணப்படுகின்றன, அதே போல் "மருத்துவதிற்க்கென்றே" தனித்தனி பகுதிகள் காணப்படுகின்றன. அதில் மருந்துகளையும் அதை உபயோகிக்கும் முறைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் எந்தெந்த வஸ்துக்களில் என்னென்ன மருந்துகள் இருக்கின்றன, அவைகள் எந்தெந்த நோய்களுக்கு பயன்படும், அதை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற அனைத்து ஞானங்களாலும் அல்லாஹ் சுபஹானவதாலா மூலம் அருளப்பட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மருத்துவ ஞானங்களுக்கு முன் உலகில் உள்ள அனைத்து வைத்தியர்களையும் காணிக்கை செய்தாலும் அது ஈடாகாது.
பயன் 3: நபிமார்களுக்கும் சூனியத்தின் தாக்கம் உடலளவில் எற்படுகின்றது ஆனால் மனநிலையிலும், மதியிலும் அல்லாஹ்வின் உதவியால் தாக்கம் எற்படுவதில்லை. நபிமார்களுக்கு சூனியத்தின் தாக்கம் அவர்களது புனித உடலில் எற்படுவதினால் நபிமார்களின் புகழுக்கு எந்த வித பாதகமும் எற்படுவதில்லை.
மேலும் நபிமார்கள் தாங்கள் உண்ணும் உணவு, விஷ ஜந்துக்களினால் எற்படும் நோவினைகள், விஷத்தினால் எற்படுகின்ற தாக்கம் போன்றவைகள் அனைத்தும் நபிமார்களுக்கு தாக்கத்தை எற்படுத்தும். இவை அனைத்துமே இறைவனின் வல்லமையின் பொருட்டால் மேலும் அப்பொருட்களின் பண்புகளினால் எற்படும் தாக்கங்களே. எனவே இது நபிமார்களின் புகழ் மற்றும் மகத்துவத்திற்கு களங்கம் ஒரு போதும் எற்படுத்துவதில்லை. வஹாபிகள் சிலர் கூறுகின்றனர், ஹஜ்ரத் மூஸா அலைஹி ஸலாம் தன்னுடைய கோல் (கைக் கம்பு) கொண்டு (நாகமாக மாற்றிய‌) அதிசியம் முன்பு சூனியத்தின் தாக்கம் செல்லாமல் போனது இவ்வாறு இருக்க, மூஸா அலைஹி ஸலாம் அன்னவர்களை விட நம் நபிகளார் மேன்மைப் பெற்ற நபியாக இருந்தும் நம் நபிக்கு ஏன் இந்த சூனியத்தின் தாக்கம் எற்பட்டது? என கேட்கின்றனர்.
இதன் பதில்: மூஸா அலைஹி ஸலாம் அன்னவர்களின் அதிசயத்துடன் சூனியத்தின் அதிசியங்கள் மோதின. அதில் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் வெற்றிக் கண்டார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு செய்த சூனியம் அன்னவர்களுக்கு நோவினை எற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு காரணங்களுக்காக இல்லை.

பயன்: 4 இந்த சம்பவங்களிலிருந்து நாம் அறிந்துக் கொள்வது என்னவென்றால் நோய்கள், சூனியம், கண் திருஷ்டி போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள 'துஆ' மற்றும் குர்ஆன் வசனங்கள் பயபக்தியுடன் படித்து அருந்தும் நீர், உண்வு மற்றும் மருந்து போன்றவைகளில் ஊதி உட்கொள்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது இதேபோன்று "தாவிஸ்" (தாயத்து) போன்றவைகளும் ஆகுமாக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஷாமி ‍(குர்ஆன் தஃப்ஸீர், பாகம் 5)) ஜின்களை கொண்டும், நாம் அறியாத பாஷைகளைக் கொண்டும், இணை கற்பிக்கும் இடங்களிலும் (மாற்று மத கோவில்களிலும்), இணை வைக்கும் கலிமாக்களை கொண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் "தாவிஸ்" (தாயத்து)களில் ரத்தத்தை கொண்டு குர்ஆன் வசனங்களை எழுதுவது, "தாவிஸ்" (தாயத்து)களில் இறை வசனங்களை எழுதும் முறையின்றி எழுதுவது, இறை வசனங்களை எழுதி அதை கால் அல்லது காலணிகளில் அணிவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
குறிப்பு: நோய் போன்றவைகளை நீக்குவதற்க்காக கொடுக்கப்படும் "தாவிஸ்" (தாயத்து)களுக்கு பதிலாக பரிசளிக்கப்படும் "ஹதியா" பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுவதற்க்கு அனுமதி உண்டு. டாக்டரிடம் நாம் கொடுக்கும் பணத்தை போன்று தான் இதுவும். இதற்கு நிர்ணயமான மதிப்பு ஏதும் கிடையாது. அது கொடுப்பவரின் வசதி மற்றும் மனதை பொறுத்து அமையும். ஏனெனில் "தாவிஸ்" (தாயத்து)கொடுப்பதும் ஒரு வைத்தியம் செய்வது போன்று தான். (ஆதாரம்: மிஷ்காத் மற்றும் ஷாமி பாகம் 1) உர்து மூலம்: ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார் காஃன் நயமி அஷ்ரஃபி பதாயுனி அலைஹி ரஹ்மா நூல்: ஷானே ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயாதில் குர்ஆன்
By: Noorul Islam
.