திருமறை போற்றும் திருநபி

- நபியே நாம் உம்மை அகிலத்தார் அனைவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பியிருக்கிறோம். (17 : 22 : 107)

- (விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக (நம்முடைய) ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகிவிட்டால் (அது) அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்) அன்றி, உங்(கள் நன்மை)களை பெரிதும் விரும்புகின்றவராகவும், விசுவாசி(களாகிய உங்)கள்மீது மிக்க அன்பும் கிருபையும் உடையோராகவும் இருக்கின்றார். (11 : 10, 128)


- ஆகவே,எவர்கள் மெய்யாகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (இவ்வாறு) வழிப்படுகின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வின் அருளைப் பெற்ற, நபிமார்கள், சத்தியவான்கள், பிராண தியாகிகள், நல்லொழுக்கமுடையவர்கள் முதலியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக்கஅழகான தோழர்கள். (5 : 4, 69)


- எவன் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு முற்றிலும் வழிப்ப(ட்)டு (நடக்)கின்றானோ அவன், நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டான். ஆகவே (நபியே) உம்மை எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப் பட வேண்டாம்) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை. (5: 4, 80)

- அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி, நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே உங்களுக்கு இருக்கின்றது. (21 : 33, 21)


- விசுவாசிகளுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அவர்களுடைய தாய்மார்களாவார்கள். (21 : 33, 6)

- விசுவாசிகளே நீங்கள் (நம்முடைய) தூதருடன் இரகசியம் பேச நேரும்போது உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்து விடுங்கள். இது உங்களுக்கு மிக்க நன்மையையும் மா தூய தன்மையுமாகும். (28 : 58 : 12)


-மறை ஞானப்பேழை ஆசிரியர் குழு