ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புர்தா நிகழ்ச்சி


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிரதி மாதம் வெள்ளிக்கிழமை காலையில் புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.
இம்மாதம் 17ம் தேதி வெள்ளிக் காலை 7.30 மணிக்கு புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்றது…
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா துவா ஒதி ஆரம்பம் செய்தார்கள்.
புர்தா ஒதியப்பின் கலீபா முஹம்மது காலீத் அவர்கள் உரையாற்றினார்கள்…
அவர்கள் பேசுகையில்… ஞானத்தின் அவசியத்தையும் அதை விளங்கி செயல்பட வேண்டியும் எடுத்து கூறினார்கள்.
இவ்விழாவில் ஜாகித்அலி மௌலானா துணைத்தலைவர் யூசுப் அவைமுன்னவர் அப்பாஸ் ஷாஜகான் ஆடிட்டர் கிளியனூர் இஸ்மத் அதிரை சர்புதீன் முதுவை ஹிம்தாதுல்லாஹ் மன்னார்குடி ஷேக்தாவுது கீழை காதர்ஷாகிப் அதிரை அப்துல்ரஹ்மான் மதுக்கூர் பாடகர் தாவுது மற்றும் சாகுல் ஹமீது அபுதாபியிலிருந்து ஜெகபர்சாதிக் ஆதம் அப்துல் குத்தூஸ் அப்துல் ரவுப் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து தந்தார்கள்.
விழா இனிதே 8.45 மணிக்கு நிறைவுற்றது…!