சூன்யம்-ஒரு பொய்யான விஷயம்!!!


சூன்யத்தைப் பற்றி நாம் பலமுறை இது பொய்யான விஷயம் எனக்கூறி வந்துள்ளோம்.
சூனியம் செய்தவர்களோடு பழகிப் பார்த்த பிறகும் அது பொய்யான விஷயம் என்பதனை 
நாமும் அறிந்து நமது முரீதுகளுக்கும் போதித்தோம்.

சூன்யம் என ஒன்று இலலை என்பதனை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துவிட்டது.
அறிவுள்ள-மூளையுள்ள எந்தவொரு மனிதனும் சூன்யத்தை நம்பமாட்டான்.

ஒரு முட்டையில் எழுதி நிலத்தில் புதைத்து வைப்பதலோ, ஒரு தகட்டில் எழுதி பூமியில்
புதைத்து வைப்பதாலோ மனிதனுக்குப் பைத்தியம் பிடித்து விடுமா? என்னே அறியாமை?

ரசூலுல்லாஹ் ஷல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சூன்யம் செய்ததாக 
தப்ஸீர் ஜலாலைனில் கூறப்படுகிறது அவ்வாறு சூன்யம் செய்யப்பட்டபோதுதான் 
"குல் அஊது பிறப்பில் பலக்" சூறாவும் "குல் அஊது பிறப்பின்னாஸ்" சூறாவும் இறங்கியதாக 
அந்த தப்ஸீரில் கூறப்படுகிறது.

திருமறையின் பிறிதொரு வசனத்தில் காபிர்கள் "நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட மனிதரையா
பின்பற்றுகிறீர்கள்? எனக்கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க... இந்த வசனத்தின்படி 
ரசூலுல்லாஹ்வை சூனியம் செய்யப்பட்டவர்களல்ல என ஏற்றுக்கொள்பவர்கள்
"குல் அஊது பிறப்பில் பலக்" சூறாவிற்கு விளக்கம் சொல்லும்போது 
ரசூலுல்லாஹ் ஷல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சூன்யம் செய்யப்பட்டதாகக் 
கூறுவது அறிவிற்கு பொருத்தமானதாக இல்லையே?
பெண்களுக்குத் தான் இந்த "ஸிஹ்ரு" விஷயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது 
ஸிஹ்ரு பொய்யான விஷயம் என்பதனையறியாது பெண்கள் தாங்களும் குழம்பி பிறரையும் 
குழப்பி விடுகிறார்கள்.

அல்லாஹ் நாடக் கூடியவைதான் நடக்குமே தவிர தகட்டில் ஒன்றை, முட்டையில் ஒன்றை எழுதி 
புதைப்பதாலோ எந்தவொன்றும் நடக்காது.

அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதை விளங்குவதற்க்க்காகத்தான் முரீத்-பைஅத் பெறுகிறோம் 
என்பதை அறிய வேண்டும். அல்லாஹ் நாடியது தான் நடக்கும். அதுதான் இயற்கை.

                                                                     -சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் 

Thanks - Sirajudeen Madukkur