ஹஜ்மாத சிறப்புக் கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஹஜ்மாத சிறப்புக் கூட்டம் நவம்பர் 3ம் தேதி மாலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் ஹக்கியுல்காதிரி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி நபிப்புகழ்பாடலை பாடுகிறார்.

கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஞானப்பாடலை பாடியும் தியாகத் திருநாள் எப்படி ஏற்பட்டது என்ற சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள்.

நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A ஹக்கியுல் காதிரி அவர்கள், உரையாற்றுகையில்.. ஆண்டுதோறும் நாம் செய்துவரும் கூட்டுக் குர்பானியின் சிறப்புகளையும், அதனால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைப் பற்றியும், இதைக் கொண்டு நமது மதுரஸா மற்றும் ஏழைகளுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றியும், கூட்டுக் குர்பானியில் பங்கெடுக்காதவர்கள் அவசியம் தங்களின் பங்கை செலுத்தும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் ஹக்கியுல் காதிரி ஹஜ்ஜின் சிறப்புகளை கூறினார்கள்.
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் சிறப்புக்குரியா ஹஜ்பெருநாளின் சிறப்புகளைப் பற்றியும் ஷெய்கு நாயகத்தின் கரம் பற்றியதால் நாம் அடைந்திருக்கும் பலன்களைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார்கள்.

இறுதியாக தௌஃபா பைத் ஓதி இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவடைந்தது.அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.