பெரும் தியாகம்


இயற்கைப் பொருட்களைக் கவனியுங்கள். மழைவர நனைகிறோம், வெயில்வரக் காய்கிறோம்.`
நீரின்றி தாவரங்கள் வாடுகின்றன. காற்று வீசப் பொருட்கள் அசைகின்றன.காற்றின்றேல்
அசைவின்றி நிற்கின்றன.

இவைகள் நடப்பதுபோல் நடக்கட்டும் என்று இருக்கின்றன. இது சூபியத் (மெய்ஞானம்) ஆகும்.
ஆயினும் இறை ஊகிக்க அறிவையும் செயற்பட அசைவையும் மனிதனுக்கு கொடையாக
கொடுத்துள்ளது. புத்தியுடன் வாழ்வோர் போற்றப்படுவர்.

மனிதனுக்கு ஒரு குணம் உண்டு.அது சமயோசிதப்படி நடப்பதாகும். கண்டவையெல்லாம் கவலை
எனவும் தொட்டவையெல்லாம் கெட்டவை எனவும் பார்த்தவை எல்லாம் பாராமுகம் எனவும்
கருதி மனதைப் புண்படுத்துவதும்தான் அதனால் கெடுவதும் பெரும் தப்பாகும்.

இவைகள் நீங்கி வாழவே ஹக்கு தவ்ஹீதை (ஏகத்துவ ஞானத்தை) நமக்குத் தந்தது.

தௌஹீதை (ஏகத்துவ ஞானத்தை) ஒருவரால் மற்றவருக்கு எந்த அளவுக்கு பரப்ப முடியுமோ
அந்த அளவில் பரப்பாலும் அதற்காக முயற்சித்தலும்தான் நாம் ஹக்கு(ஏகன்)க்குச் செய்யும் பெரும் தியாகம்.

நல்லமுறையில் தௌஹீத் (ஏகத்துவ ஞான) விளக்கங்களை உரியவர்களுக்குக் கூறுங்கள்.

---- சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.

Thanks - sirajudeen