வெலிகமையில் ஞானமழை

சங்கைமிகு ஷெய்குனா அவர்களின் திரு இல்லத்தில் 19/02/2011 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் மஜ்லிஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கண்ணியமிக்க ஆலிம் பெருந்தகை மௌலவி ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயலாளர் தளபதி மௌலவி ஷபீகுர்ரஹ்மான் மௌலவி அப்துல்சமது மற்றும் ஆன்மீகசகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மௌலவி உசேன்முஹம்மது மன்பஈ தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி ஆகியோர் அண்ணல்நபிகளின் புகழ்பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார்கள்.