துபை கலீபா இல்லத்தில் மௌலுது நிகழ்ச்சிதுபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை 11/02/2011 காலை 9.30 மணிக்கு கண்மணி நாயகம் ரசூல் (ஸல் அலை) அவர்களின் புகழ்பா சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது.

மௌலுது ஷரீப் ஓதியப்பின்னர் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமையில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.

மதுக்கூர் பாடகர் தாவுது அவர்கள் நபிப்புகழ்பாடலைப் பாடினார்.
மதுக்கூர் கவிஞர் இஸ்மாயில் கவிதையை அரங்கேற்றினார்.
தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜ்தீன் பைஜி அவர்கள் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் அன்புத் தாயாரைப்பற்றிய பாடலை அரங்கேற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காயல்பட்டிணம் மவ்லவி அஹமது அப்துல்காதிர் மஹ்ழரி அவர்கள் கலந்து மீலாதுவிழாவின் சிறப்புகளைப் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். மவ்லவி உசேன் மக்கீ அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

ஜூம்மாஹ் தொழுகக்குப்பின் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.


புகைப்படங்கள் மற்றும் ஆடியோ
அதிரை அப்துல்ரஹ்மான்