வெலிகமையில் கந்தூரிவிழா ஆரம்பம்


இங்கை வெலிகமையில் மீலாது கந்தூரி விழா மிக விமர்சையாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இன்று காலை 10.00 மணிக்கு கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் திருபுகழ் சுப்ஹான மௌலூது ஆரம்பமாகி உள்ளது.
கந்தூரி உணவு தயாரிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயலாளர் ஏ.ஷபீகுர்ரஹ்மான் மன்பயீ அவர்கள் இலங்கை வெலிகமா வந்தடைந்தார்கள்.அவர்களுடன் லால்பேட்டை இமாம் அவர்களும் பாடகர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்களும் வந்துள்ளார்கள்.
பன்னாடுகளிலிருந்து வருகைப்புரிந்துள்ள அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் சங்கைக்குரிய அஸ்சையிது கலீல் அவுன் மௌலானா அவர்களின் இல்லத்தில் குழுமியிருக்கிறார்கள்.

இலங்கைவாழ் முரிதீன்கள் அனைவரும் கந்தூரி வேலைகளில் முன்னனியில் இருக்கிறார்கள் அவர்களின் அளப்பெரிய பணிகளுக்கு அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ஆமீன்.