எழில்மிகு 75வது உதயதினவிழா













துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கண்மணிநாயகம் ரசூலேகரீம் ஸல்லல்லாஹ_அலைஹி வஸல்லாம் அவர்கள் மீது பூஸரி இமாம் அவர்களால் தொடுக்கப்பட்ட புர்தாஷரீபை ஓதி அதைத் தொடர்ந்து கஸிதத்துல் அவ்னியா ஓதப்பட்டது.
காலை 10 மணிக்கு சங்கைமிகு இமாம் செய்கு நாயகம் அஸ்சையது கலீல்அவ்ன் அவர்களின் எழில்மிகு 75வது உதயதின விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகத்தலைவர் ஏ.பி.சஹாபதீன் தலமைத்தாங்கினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.

அவர்களைத் தொடந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன் பாடினார் அதன் தமிழாக்கத்தை மிக அழகாக
நூருல்ஹக் செய்தார்.

ஞானப்பாடலை மதுக்கூர் தாவுத் அவர்கள் பாடினார்கள்.புகழ்பாடலை மதுக்கூர் சிராஜ்தீன் பாடினார்.

விழாத்தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்.அதைத் தொடந்து பேச்சாளர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

மன்னார்குடி ஷேக்மைதீன்,
மதுக்கூர் ஜெகபர் சாதிக்,
மதுக்கூர் எம்.ஏ.காதிக்,
திண்டுக்கல் அப்பாஸ்ஷாஜகான்,
அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூரி,
மதுக்கூர் சல்மான் (லண்டன்),
மதுக்கூர் அமீர்அலி,
மன்னாடி ஷேக்தாவுது,
மிகஆர்வத்துடன் தங்களின் அனுபவங்களையும் தங்களின் ஞானப் புரிதலைப்பற்றி மிகத் தெளிவாக உரையாடினார்கள்.
இறுதியாக சையதுஅலிமௌலானா அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார்கள்.

பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் நன்றி உரை நல்கினார்.

பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நிர்வாகிகள் காதர்ஷாகிப், இஸ்மத், அதிரை ஷர்புதீன், அப்துல்ரவூப், அபுசாலி,m.s.அப்துல்வஹாப், அப்துல்சுபஹான், அன்வர்உசேன், அபுல்பசர், அமீர்அலி, அப்துல்குத்தூஸ், ஆசிக், அப்துல்ரஹ்மான், முஹம்மது தாவுது, ஜாகிர்உசேன், ஹாஜாஅலாவுதீன், திண்டுகல் ஜெய்னுல்ஆபுதீன், மதார்ஷா, அப்துல்ஹக், நத்தர்ஷா, வழுத்தூர் ரசீது மற்றும் சபை ரூம் நண்பர்கள் அன்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் அபுதாபியிலிருந்து ஜெகபர்சாதிக் பத்தாஹ் எம்.ஏ.சாதிக்அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.