அமீரகத்தின் அவ்காப் அதிகாரி செய்குநாயகத்துடன் சந்திப்பு

அமீரகத்தின் அவ்காபின் அரசு உயர் அதிகாரியான டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்கள் சங்கைமிகு இமாம் செய்குநாயகம் அவர்களை சந்தித்து மனம் மகிழ்ந்தார்.ஒவ்வொரு ஆண்டும் செய்குநாயகம் விஜயத்தின் போது அவர்களை சந்தித்து தனது மரியாதையையும் அவர்களிடம் துவாவையும் பெறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள.

இராத்திபத்துல் ஹக்கியத்தில் காதரிய்யா(இராத்தீபு) சிடியை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு வழங்கி சங்கைமிகு செய்குநாயகம் வெளியிட்டார்கள் மற்றும் மௌலானா மார்களுக்கும் வழங்கினார்கள்.

சங்கைமிகு இமாம் செய்குநாயகம் அவர்கள் மொழிப்பெர்த்த பர்ஸன்ஜிய் மவ்லித் நூலை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு வழங்கினார்கள்

தனது சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாக முரிதுக்கு மத்தியில் தானும் செய்குநாயகத்தின் முரிது என்ற எண்ணத்துடன் சில நிமிடங்கள் அரபும், ஆங்கிலமும் கலந்து உரையாற்றினார்கள்.