சிறப்புக்குரிய ஆஷூரா மௌலூது நிகழ்ச்சி

சிறப்புக்குரிய ஆஷூரா மௌலூது நிகழ்ச்சி


துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் இஃஷா தொழுகைக்கு பின்னர் முஹர்ரம் ஆஷூரா பிறை 9 -ல் கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாகு அலைஹி வஸல்லாம் அவர்களின் இதயங்களான தியாகச்செம்மல்கள் சங்கைமிக்க ஹஜ்ரத் ஹஸன் (ரழி)ஹுசைன் (ரழி) அவர்களின் பெயரில் புனித மௌலுது ஷரீப் மிக சிறப்பாக ஓதப்பட்டன.சிறப்பு சொற்பொழிவும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சங்கைக்குரிய ஷெய்குனா அவர்கள் தங்களது கலீபாவாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத்தலைவர் A.P.சகாபுதீன் M.B.A. ஹக்கியுல்காதரி அவர்களை நியமித்ததையொட்டி கண்ணியமிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் கலீபா அவர்களின் குண நலன்களைப் பற்றியும் தியாகங்களைப் பற்றியும் எடுத்துக்கூறி இச்சபையின் அனைத்து சகோதரர்களின் சார்பாக கலீபா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
இறுதியாக கலீபா அவர்கள் ஏற்புரை நிழ்த்தினார்கள்.
அனைத்து சகோதரர்களும் கலீபாவிற்கு முசபாஹ் செய்து தங்களின் சந்தோசங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

இனிதே தப்ரூகுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இன்ஷாஅல்லாஹ் 16/12/2010 இரவு 8.00 மணிக்கு ஆஷூரா கர்பலா பிறை 10 தினத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. துபாய் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.