இலவச கண் சிகிச்சை முகாம்


அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை நிறுவனர் சங்கைக்குரிய
செய்யிது கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்கள் இல்ல திருமண நாளை
முன்னிட்டு அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை மற்றும் மதுக்கூர்
ரோட்டரி சங்கம் , கோவை சங்கரா கண் மருத்துவமனை , தஞ்சாவூர்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண்
சிகிச்சை முகாம் இன்று 05.12.2010 காலை 9.30 முதல் மதியம் 1.30
வரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கண் சம்பந்தமான அணைத்து நோய்களுக்கும்
இலவச மருத்துவ ஆலோசனை தரப்பட்டது. இதில் 137ஆண்கள்,
69 பெண்கள் ,6 குழந்தைகள் உள்பட 212 நபர்கள் பயனடைந்தனர்.

அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உணவு ,
தங்குமிடம் ,மருந்து,கோவை சென்று வர போக்குவரத்து ச்செலவு
அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது, அறுவை சிகிச்சைக்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள் (7 நபர்கள் ) உடனே அறுவை சிகிச்சைக்காக
கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்

கண் சிகிச்சைமுகாம் சேர்மனாக கலீபா அட்வகேட் A.N.M.லியாக்கத் அலி
ஹக்கியுள் காதிரிய்யி அவர்களும் ,அவர்களுக்குத் துணையாக கலீபா
M.முஸ்தபா ஹக்கியுள் காதிரிய்யி அவர்களும் , டாக்டர் A. முஹம்மது
கலீல் ஹக்கியுள் காதிரிய்யி அவர்களும் செயல் பட்டனர்

எழுத்துப்பணிகளை ,Er.A. இத்ரீஸ்
ஹக்கியுள் காதிரிய்யி, J.ஹாரிஸ் ஹக்கியுள் காதிரிய்யி, A.நத்தர்ஷா
ஹக்கியுள் காதிரிய்யி,நூருல் பகுருதீன் ஹக்கியுள் காதிரிய்யிஅவர்களும் மேற்
கொண்டனர் .
மேற்பார்வை பணிகளை செயலாளர் முஹம்மது இஸ்ஹாக்
ஹக்கியுள்காதிரிய்யி,பக்கீர் மைதீன் ஹக்கியுள் காதிரிய்யி,M.முஹைதீன்
அமானுல்லா ஹக்கியுள் காதிரிய்யி,அஹமது கபீர் ஹக்கியுள் காதிரிய்யி
மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் அனைவரும் மேற்
கொண்டனர்
மற்றும் ரோட்டரி சங்கதலைவர் டாக்டர்A. வாஞ்சிலிங்கம்
,ரோட்டரி சங்கசெயலாளர் T.P.R தேவதாஸ் ,ரோட்டரி சங்க பொருளாளர்
K.செல்வமணி அவர்களும் இதர ஏற்பாடுகளை செய்தனர்.மேலும் மதுக்கூர்
நர்சிங் கல்லூரி மாணவிகளும் உதவி புரிந்தனர்.

முடிவில் சேவைப்பணியாற்றியவர்கள் அனைவருக்கும் உணவு
வழங்கப்பட்டது
தகவல்
Er.A.இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,
மதுக்கூர்.