சிறப்பாக நடைப்பெற்ற புனித கந்தூரிவிழா

திருமுல்லைவாசலில் நேற்றைய தினம் ஹிஜ்ரி 1431 துல்கஃதா பிறை 17-ல் 25.10.2010 அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பின் சுபுஹான மௌலுதும் மஃரிப் தொழுகைக்குப்பின் இராத்திபத்துல் காதிரிய்யாவும் ஓதப்பட்டு,

காலத்தின் இமாமும் ஆத்மஞான குருநாதருமான குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாசீன் மௌலானா அல்ஹஷிமிய்(ரலி) அவர்களின் 46வது வருடக்கந்தூரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கண்ணியமிக்க மசூது மௌலானா மற்றும் குடும்பத்தினர்கள் தலைமை வகித்தனர்.

இவ்விழாவில் ஞானப்படல்களை மதிப்பிற்குரிய ஆலிம் உசேன்முஹம்மது மன்பஈ அவர்கள் இசைத்தார்கள்.
இவ்விழாவிற்கு வருகைப்புரிந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடுசெய்து கொடுக்கப்பட்டது.

பல ஊர்களிலிருந்தும் புனித கந்தூரிவிழாவில் 1300க்கும் அதிகமான முரீதுகளும் பக்தர்களும் கலந்து மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் அருளையும் ஆசியையும் பெற்று ஈருலக நற்பேருகளையும் அடைந்துக்கொள்ளவதற்கு பலரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.


தகவல் - முஹம்மது இத்ரீஸ் மதுக்கூர்