ஈத்முபாரக் வாழ்த்துக்கள்....

ஈத்முபாரக் வாழ்த்துக்கள்.... 20.9.2009 அன்று காலை அமீரகத்தில் பெருநாள் தொழுகை காலை 6.30 மணிக்கு துவங்கியது...பல்லாயிரமக்கள் ஈத்பெருநாள் தொழுகையில் கலந்து சிறப்பித்தார்கள்....
தொழுகைக்குப்பின் வழக்கம்போல் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் காலை 8.30 மணிக்கு அனைத்து ஆன்மீகசகோதரர்களும் ஒன்று கூடி தௌஃபாஹ் (பாவமன்னிப்பு) துவா ஒதி அனைவரும் ஒருவருக்கொருவர் முஸாபாசெய்து தங்களின் பரஸ்பர அன்பினை வெளிப்படுத்திக் கொண்டனர்....

மௌலானாமார்களும் நிர்வாகிகளும் அனைவருக்கும் தங்களின் வாழ்த்துக்களை சமர்ப்பித்தனர்...
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல்அவுன் மௌலானா அவர்கள் அனைத்து முரீத் பிள்ளைகளுக்கும் தங்களின் ஆத்மார்த்தமான ஈத்பெருநாள் வாழ்த்தினை தெரியப்படுத்தினார்கள்...
அனைவருக்காகவும் வேண்டி எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துவாச் செய்வதாகவும் கூறினார்கள்....

அனைவருக்கும் ஈத்முபாரக்....