ரமளான் பிறை 17...பதுரு சஹாபாக்களின் நினைவுதினம்...!



ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு என்ற இடத்தில் மதினாவிற்கு அருகில் இந்த யுத்தம் நடைப்பெற்றது.
எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாகு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் இஸ்லாம் பரவுவதற்கும் முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி.அறுநூற்றிருபத்து நான்காம் ஆண்டு ஹிஜ்ரி இரண்டாம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள் 313 பேர் என்றும் இன்னும் வேறு பல வேறுபாடுகளும் கூறுகின்றனர்.
எதிரிகளின் தொகை ஏறக்குறைய ஆயிரம் என்றனர்.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


அந்த சிறப்புமிக்க யுத்தத்தில் கலந்துக் கொண்ட பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17-ல் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மாலை அஸர் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன. அத்துடன் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள் உறுப்பினர் அனைவரும் திருக்குர்ஆன் 30 சூதும் ஒதி பதுரு சஹாபாக்களுக்கு ஹதியா செய்தனர்.
இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் அமீரகத்தின் அரசு அவ்காப் அட்வைஸர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் ஜரார் கல்நதுக் கொண்டு சிறப்பித்தார்.


பதுரு சஹாபாக்களின் சரிதையை அரபி மொழியில் உறையாற்றினார். அதை கண்ணியமிக்க சிறப்பு விருந்தினரான ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புதீன் மிஸ்பாஹி அவர்கள் மொழி பெயர்ப்பித்தார்கள்...

இன் நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்து சிறப்புபிரஜைகள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

துபாய் ஈமான் அமைப்பிலிருந்து
பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத்அலி,

துணைத்தலைவர் அஹமது மைதீன் (அல்மாலீக் ஸ்டேஸ்னரி)
துணைத்தலைவர் அப்துல்கதீம் (அமீரகக் கவிஞர்பேரவைத் தலைவர்)

கல்வி பொதுப்பணி முஹம்மது தாஹா
விழாக்குழுச் செயலாளர் முஹம்மது யஹ்யா
தணிக்கணையாளர் முஹம்மது பாருக்
ஆகியோரும் மற்றும்

தமிழ்பண்பாட்டுக்கழக முன்னால் தலைவர் குத்தாலம் அஸரப்அலி
வளைகுடா பேரவைத்தலைவர் அன்வர்பாட்சா
டாக்டர் முனைவர் அய்யுப் (நம்மஊரு செய்தி - பத்திரிக்கை ஆசிரியர்)

சகோதர அமைப்பான வானலை வளர்த்தமிழ் செயலாளர் சிம்மபாரதி
அமீரக பிரபல இணையபதிவர் கீழைராஸா
சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது
இவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்...

மற்றும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன்அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமுடியாமைக்கு வருந்துவதாய் எஸ்எம்எஸ் மூலம் செய்தி அனுப்பியிருந்தார்...

இவ்விழாவில் பத்ரு சஹாபாக்களின் மௌலுதும் சொற்பொழிவும் நிறைவு செய்து இஃப்தார் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது...இஃப்தாருக்கு பின் மஃரிப் தொழுகை அங்கே நடத்தப்பட்டது...

இவ்விழா சிறப்பான முறையில் நிகழ்வதற்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைத் தலைவர் சஹாபுதீன், துணைத் தலைவர்கள் அப்பாஸ் ஷாஜகான், காதர் சாகிப் ,பொதுச் செயலாளர் யூசுப், துணைச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் மற்றும் விழாஅமைப்பாளர்கள் அனைவரும் புதுப்பொலிவுடன் இன் நிகழ்ச்சியை செய்தார்கள்....
இலங்கை புஸ்ரா பத்திரிக்கை ஆசிரியர் ஆலிம் பத்ருதீன் அவர்கள் துவா ஒதினார்கள்

சபையின் அலங்காரங்களை விழாஅமைப்பாளர்கள் அக்பர் ஷாஜகான் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் அலங்கரித்திருந்தார்கள். முதுவை அஹமது ஹிம்தாதுல்லா உறுதுணையாக இருந்தார்....அதிரை அப்துல் ரஹ்மான் ஆஷிக் அப்துல்ரஹ்மான் மற்றும் பொருளாளர் தாவுது ஆடிட்டர் ஆதம் அப்துல்குத்தூஸ் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் மிகஆர்வத்துடன் செயல்பட்டார்கள். எந்த வருடமும் இல்லாதளவு இவ்வருடம் அனைவரும் மனம் மகிழும்படி இவ்விழா மிக சிறப்பாக நடைப் பெற்றது...

விழா சிறப்பு விருந்திரனர்களை கௌரவிக்கும் முகமாக திருமுல்லை வாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல்ஜரார் (துபாய் அவுக்காப் அட்வைஸர்) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மனம் மகிழ்ந்தார்கள்....


கவிஞர் ஆலிம் தேங்கை ஷர்புதீன் மிஸ்பாஹி அவர்களுக்கு சபைத் தலைவர் சஹாபுதீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்..


வந்திருந்த சிறப்பு விருந்தினர் அனைவர்களுக்கும் நினைவு பரிசாக குதுபுகள் திலகம் பெரியநாயகம் இமாம் சையது யாசீன் மௌலானா அவர்களின் வாழ்க்கை சரிதை நூல் வழங்கப்பட்டது....

இஃப்தார் நிகழ்ச்சி

இஃப்தார் நிகழ்ச்சி



சிறப்பு விருந்தினர்களுடன்

பிரபல அமீரகப்பதிவர் கீழைராஸா, சிம்மபாரதி ,திருச்சி சையது, குத்தாலம் அஸரப் , அப்துல்கதீம், முஹம்மது பாருக் ,கவிஞர் ராஜாகமால், இஸ்மத் ,அப்துல்ரஹ்மான் மற்றும் அன்பர்கள்



ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் தாஹா யஹ்யா


மஃரிப் தொழுகைக்குப்பின் இனிதே இவ்விழா நிறைவுப் பெற்றது....