புனிதமிகு புர்தா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 18.09.2009 அன்று அஸர் தொழுகைக்குப் பின் புர்தா நிகழ்ச்சியும் அத்துடன் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைப் பெற்றது.
இவ்விழாவில் மௌலானாமார்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத்தினரும் லால்பேட்டை ஜமாத்தினரும் மற்றும் திருநெல்வேலி ஜமாத்தினரும் கலந்து சிறப்பித்தார்கள்.
புர்தா ஒதி முடித்ததும் சொற்பொழிவு நிகழ்வு ஆரம்பமானது…
புஸ்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் பத்ருத்தீன் அவர்கள் புர்தாவுடைய வரலாற்றை மிகத் தெளிவாக கூறினார்கள்.

புர்தாவை இயற்றிய இமாம் ஷர்புதீன் முஹம்மதுல் பூஸிரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 608-ல் பிறந்து சுமார் 87 ஆண்டு காலம் இவ்வுலகில் வாழ்ந்து 696-ம் ஆண்டில் மறைந்துள்ளார்கள்.
இவரது தந்தையின் பெயர் ஸயீது. புhட்டனார் பெயர் ஹம்மாது இவரது முன்னோர்கள் வடமேற்கு ஆப்ரிக்காவில் ஸன் ஹாஜத் என்ற ஊரில் குடியிருந்தார்கள். பின்னர் அந் நாட்டைத் துறந்து எகிப்து தேசத்தில் வந்து அல்பூஸீர் என்னும் ஊரில் குடியேறினார்கள்.அங்கு இவர்கள் ஹிஜ்ரி 608-ம் ஆண்டில் பிறந்தார்கள். அங்கேயே இளமையில் திருக்குர்ஆனையும் மனனம் செய்தார்கள். பின்னர் எகிப்து தலைநகரிலுள்ள பிரபல அரபி சர்வ கலாசாலையான ஜாமிஉல் அஜ்ஹரில் கல்விபயின்று பலகலைகளிலும் தேர்ச்சியுற்று இலக்கண இலக்கியத்தில் வல்லுனரானார்கள். அப்பால் எகிப்து அரசாங்கத்தில் உத்தியோகமேற்றார்கள். இப்பதவி காலம் முடிவடைந்த பிறகு இவர்களுக்கு பாரிசவாய்வு நோய் ஏற்பட்டது. இதனால் இவர்கள் சுகவீனமடைந்தார்கள்.படுத்தபடுக்கையிலிருந்து கொண்டே புர்தாஹ் என்னும் இக்காவியத்தை பாடினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்அலை) அவர்கள் அன்னாரது சொப்பனத்தில் தோன்றி தங்களது திருக்கரத்தால் அவரது உடலைத் தடவியதோடு தங்களது போர்வையையும் அவர்மீது போர்த்தினார்களென்றும் அக்கணத்திலேயே ப+ரண சுகமடைந்து எழுந்து நடமாட சக்தி பெற்றார்கள். என்று வரலாறு கூறுகிறது.

இந்த புர்தாவின் கவி வசனங்கள் மக்காவிலும் மதினாவிலும் ரவ்லாஷரீபிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஓவ்வொரு முஸ்லிமும் தங்கள் இல்லங்களிலும் புர்தாவை ஓதிவந்தால் அவர்களுக்கு பிடித்த பீடையும் பலா முசீபத்துகளும் அல்லாஹ்தால பெருமானார் (ஸல்அலை) அவர்களின் பொருட்டால் நீக்கிவிடுகிறான்.
என்று கூறினார்கள்.

அடுத்து பேசிய பொதுச் செயளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்கூறினார்கள்.அவரைத் தொடர்ந்து திருமுல்லைவாசல் சையதnலி மௌலானா அவர்கள் நோன்பின் மகத்துவத்தை இரத்தின சுருக்கமாக உரைநிகழ்த்தினார்கள்.
சபைத்தலைவர் சஹாபுதீன் அவர்கள் ஷெய்குநாயகத்தின் பண்புகளையும் ஷரிஅத்தின் அவசியத்தையும் கூறினார்கள்.
நன்றி உரை இஸ்மத் நிகழ்த்தினார்.
வந்திருந்தசிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு துணைத்தலைவர் கிளியனூர் முஹம்மது சபீர் வழங்கினார்


இஃப்தார் நிகழ்ச்சிக்கு பின் மஃஹ்ரிப் தொழுகை நடைப்பெற்றது.
இவ்விழாவில் ஆன்மசகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன் நிகழ்ச்சிகளை அதிரை அப்துல்ரஹ்மான் நிழல்படத்தையும் திருச்சி ஜெகபர் சாதிக் வீடியோ கவரேஜ்சும் செய்தார்கள்…இன் நிகழ்ச்சி இன்pதே நிறைவுப்பெற்றுத.