அதிரையில் மீலாதுன்னபி விழாஅதிராம்பட்டினத்தில் உஸ்வத்துன் ஹஸனா மீலாதுவிழா கமிட்டியினரால் 14 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக சிறப்பான முறையில் சுன்னத் வல் ஜமாஅத் அகிதா உடைய ஆலிம் பெரும் மக்கள் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இன்ஷாஅல்லாஹ் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 9.00 மணிவரையில் மிகச் சிறப்பாக பல மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவுடன் இந்த ஆண்டும் மீலாதுவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவினை இணையத்தின் வாயிலாக நாம் காண்பதற்கு அதிரைநேசம் (இங்கு கிளிக் செய்யவும்) வலைதளம் நமக்கு நேரடி ஒளிப்பரப்பை அளிக்கிறது.

கண்மணிநாயகம் (ஸல்அலை) அவர்களின் புனித பிறந்ததின விழாவை நேரடியாக காணும் பாக்கியத்தை தந்த உஸ்வத்துன் ஹஸனா குழுவினருக்கும் அதிரைநேசன் வலைதளத்திற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்கிருபை ரஹ்மத்தும் அளிப்பானாக ஆமின்.