மதரஸத்துல் ஹஸனைன் பீ ஜாமியா யாசீன் அறபுக்கல்லூரி தோட்டக்கலை

முதல் பகுதி நிறைவு இரண்டாம் பகுதி தொடக்க அறிவிப்பு

சங்கைக்குரிய நமது செய்குநாயகம் அவர்களின் நல்லாசியுடன் 2008-ம் ஆண்டு புனிதமிக்க நமது ஹஸனத்துல் உசேனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக்கல்லூரியின் எல்லை முழுவதிலும் நாயகம் அவர்களின் அறிவுருத்தலின் பேரில் தென்னை மரங்கள் நடும்வேலை துவங்கப்பட்டு இவ்வாண்டில் (2010) முதல் பகுதி பணிகள் முடிவடைந்துவிட்டது என்னும் சுப செய்தியை அனைத்து நாடுகளிலும் வாழும் ஏகத்துவமெய்ஞ்ஞான சபை உறுப்பினர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம்.

மரங்களுக்கு சொட்டு நீர் பாசனம் வழங்குவதற்காக மதுரஸாவின் எல்லை முழுவதிலும் குழாய் அமைத்து மிக அழகா மற்றும் தெளிவான முறையில் பொருத்தப்பட்டுள்ளது என்பதையும் மிக மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இத்திரு பணியில் ஆரம்பமுதல் இன்று வரையில் முழு ஒத்துழைப்பு தந்து இதை வெற்றிக்கரமாக செய்து முடிக்க உறுதுணையாக நின்ற எனது அருமை உயிர் நண்பர்கள்.

திண்டுக்கல் முஹம்மது அலி ஹக்கியுல்காதிரி,
மதுக்கூர் அமீர்அலி ஹக்கியுல்காதிரி,
திண்டுக்கல் நூருல்ஹக் ஹக்கியுல்காதிரி,
மன்னார்குடி ஷேக்மைதீன் ஹக்கியுல்காதிரி,
மதுக்கூர் ஹாஜா ஷரீப் ஹக்கியுல்காதிரி,
ஆகியோருக்கும்...

மேலும் நாங்கள் சோர்ந்து தடுமாறும்போது புத்துணர்ச்சியையும், தைரியத்தையும் தரும் வார்தைத்தைகளால் எங்களுக்கு அனுகனமும் முழு ஒத்துழைப்புத் தந்த

ஜனாப் ஏ.பி.சஹாபுதீன் ஹக்கியுல்காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் துபை,
ஜனாப் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
பொதுச் செயலாளர் துபை,

ஜனாப் எம்.முஹம்மது தாவூது (பாடகர் ) ஹக்கியுல்காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை பொருளாளர் துபை,

ஜனாப் எஸ்.ஷேக்தாவூது மன்னார்குடி ஹக்கியுல்காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபை
அவர்களுக்கும்,
ஜனாப் அப்துல் ஹமீது பாக்கவி ஹக்கியுல் காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் குவைத்,
ஜனாப் ஏ.முஹம்மது மீரான் ஹக்கியுல்காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை குவைத்,
ஜனாப் ஜெகபர்அலி ஹக்கியுல்காதிரி ஏகத்துவமெய்ஞ்ஞானசபை குவைத்,


மேலும் இத்திருப்பணியில் தமது வியர்வை சிந்தி ஒரு நொடியினும் அயராமல் உழைத்த சகோதரர் தோட்டக்கலை வளர்ச்சியின் தலைவர் ஜனாப் நத்தர்வலி ஹக்கியுல்காதிரி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திண்டுக்கல் அவர்களுக்கும்,

அனுபொழுதும் இத்திரு பணியின் மேம்பாட்டை சிந்தித்து அதற்காக பலவிதத்திலும் பாடுப்பட்ட சகோதரர் ஜனாப் கலீபா உமர் மேலூர் ஹக்கியுல்காதிரி அவர்களுக்கும்,

மேலும் இத்திருப் பணியில் அனுதினமும் அயராது தமது வியர்வைச் சிந்தி கடினமாக உழைத்து இத்திரு பணியின் முதல்பகுதியை வெற்றிக்கரமாக முடிப்பதற்கான முக்கியக் காரண நாயகர்களான நமது மதரஸாவின் அருமைப் பிள்ளைகள், மற்றும் மதரஸாவிலேயே படித்து பட்டம் பெற்று பணியாற்றும் மௌலவிமார்கள் குறிப்பாக,

ஜனாப் காஜாஷரீப் யாசீனி ஹக்கியுல்காதிரி,
ஜனாப் சாதிக்ராஜா யாசீனி ஹக்கியுல்காதிரி,
ஜனாப் முஹம்மதுஹஸன் யாசீனி ஹக்கியுல்காதிரி,
ஆகியோர்களுக்கும் மற்றும் ஏனைய மாணவ மனிகளுக்கும்
இன்னும் தமது உழைப்புடன் சேர்த்து தமது பெயரையும் தியாகம் செய்த அன்பர்களுக்கும்,

இன்னும் இறுதியாக ஆனால் உருப்படியாக நமது புனித மதரஸாவின் வலாகத்தை பசுமையாக்கி காணவேண்டும் என்பது நமது உயிரிலும் மேலான ஷைகுநாயகம் அவர்களின் பேரவாவாக உள்ளது என நான் கூறியதும் அடுத்த நொடியே மேன்மை மிக்க இத்திருப் பணியில் இணைந்து மேலும் ஏனைய ஆத்மசகோதரர்களையும் இணைத்து ஒருகனமும் அயராமல் சற்றும் பின்வாங்காமல் பணத்தாலும், மனத்தாலும், உழைப்பாலும், மற்றும் எண்ணத்தாலும் உருதுணையாக நின்று நடத்தித்தந்த,

ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபாய்,
ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை குவைத்,
ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை இந்தியாவைச் சார்ந்த தியாகிகலான அத்தனை ஆன்மீக சகோதரர்களுக்கும் நமது அருமை நாயகம் அவர்களின் பொன்னான வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ள விழைகின்றேன்.

"எமது மதரஸா எமது உயிர்போன்றதாகும் அதற்காக எவரும் ஒரு ரூபாய் ஏனும் சிலவு செய்வாராயின் அதைக் கொண்டு அந்தப் பணம் அவருக்கு பல மடங்கு பல்கி பெருகும்."

"தமது சொந்த வேலைகளிலிருந்து எமது மதரஸாவின் வேலைக்காக சிரிதெனும் நேரத்தை ஒருவர் சிலவு செய்வாரெனில் அது அவருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் அது பல நன்மைகளை நல்கும்."

"எமது மதரஸாவில் எவரொருவர் ஒரு சிறு செடியையேனும் நடுகின்றாரோ அந்த செடி மரமாகி அதை நட்ட மானிடருக்கு ஆகிரத்தில் நிழல்தரும்."

"எமது மதரஸா கராமத் வாய்ந்ததாக உள்ளது மேலும் இதை உணர்ந்து பலர் எம்மிடத்தில் கூறியும் உள்ளனர். ஏவர் ஒருவர் மதரஸாவின் பெயரில் நிய்யத் நெர்ச்சை வைக்கின்றாரோ அது கண்டிப்பாக நிறைவேறுகிறது."


மேலும் குறிப்பாக,

எமது மதரஸாவின் எல்லை முழுவதிலும் தென்னை மரம் நடும்பணிக்காக அனைத்து விதத்திலும் ஈடுபட்ட / ஈடுபடும் பிள்ளைகள் அனைவரின் நாட்டங்களும் நிறைவேறி எந்தவித நோய்களும் அனுகாமல், எல்லாவித கஸ்டங்களும் விலகி, நிறைந்த செல்வந்தர்களாக வாழ, ஒவ்வொரு கனமும் ஏகஇறையை வேண்டுகிறோம்.
என்று நமது ஆருயிர் ஷைக்கு நாயகம் அவர்களின் திரு வார்த்தைகளை
இப்போது பணியில் ஈடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் நற்கூலியாக வழங்கி வாழ்த்துகிறோம்.

சங்கைக்குரிய ஷைக்கு நாயகம் அவர்களின் உத்தரவின்பேரில் மிக விரைவில் இத்திரு பணியின் இரண்டாம் பாகவேலைகள் தொடங்க உள்ளன எனும் சுப செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதாவது நமது மதரஸாவின் எல்லை முழுவதிலும் தென்னை மரங்கள் நடப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே மேலும் ஒரு வரிசை தென்னை மரங்கள் நடுவதற்கு சங்கைக்குரிய ஷைக்குநாயகம் ஆணைபிறப்பித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகையால் இதுவரை இத்திரு பணிக்காக முழு ஆதரவு அளித்த நல்லுள்ளங்கள் அனைவரும் மேலும் இரண்டாம் பாகுதி வேலைபாடுகள் தொடர்ந்து நடைப்பெற்று நிறைவுப் பெற முன்புபோல் முழு ஒத்துழைப்புதர வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இத்திருபணியின் சம்பந்தமாக எந்தவிதமான சந்தேகங்கங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ள அனுகவும்,

துபையில் ஆன்மீகச் சகோதரர் அமீர்அலி,
குவைதில் ஆன்மீகச் சகோதரர் அப்துல்ஹமீது( பாக்கவி),
திண்டுக்கல் ஆன்மீகச் சகோதரர் நத்தர்வலி
திருச்சியில் அக்பர்அலி ஆகியோருடன் தொடர்புக் கொள்ள வேண்டுகிறோம்.


நமது மதரஸாவை பசுமையாக்க வாரீர்
நமது உயிரினும் மேலான நாயகரின் கனவை நனவாக்க வாரீர்

எல்லாம் வல்ல ஏக இறை நமது நாட்டங்களை அனைத்தையும் பூர்த்தி செய்ய போதுமானவன்.

இப்படிக்கு
ஏம்.அக்பர் அலி ஷாஜகான் ஹக்கியுல்காதிரி (குலாம் கலீல்)
திருச்சி