இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 21.01.2010 வியாழன் வெள்ளி இரவு இஷா தொழுகைக்குப் பின் 8.00 மணிக்கு “ஆன்மீக அருள் இசை முரசு” அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பல இஸ்லாமிய புதியபாடல்கள் அரங்கேற்றப்பட்டன.மனதில் நீங்கா இடம் பெற்ற கண்ணியமிக்க அல்ஹாஜ் நாகூர் ஹனீபா பாடிய பாடல்களும் திண்டுக்கல் ஆலிம் புலவர் ஹக்கியுல் காதிரி எழுதிய பாடல்கள் பல பாடப்பட்டன.
அனைவரையும் வரவேற்று நிர்வாகத் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினர்களாக இலங்கை தமிழ்சங்கத் தலைவரும் பல இஸ்லாமிய தமிழ் காவியங்களை படைத்தவரும் இலங்கை அரசாங்கத்திலும் இந்திய அரசாங்கத்தினாலும் பல விருதுகளைப் பெற்ற “காவியத்திலகம்” புலவர் ஜின்னாஷரிபுத்தீன் அவர்களும்


திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி அல்ஹாஜ் மௌலவி முக்தி கே.ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பஈ அவர்கள் ஏகத்துவமெய்ஞ்ஞான சபைக்கு விஜயம் செய்தார்கள்.

இவ்விழாவிற்கு தமிழ் பண்பாட்டுத் கழகத் முன்னால் தலைவர் குத்தாலம் கே.அஸரப்அலி கலந்து ஒரு பாடலையும் பாடினார்.

அடமங்குடி அல்ஹாஜ் அப்துல்ரஹ்மான் நூரி அவர்களும்

வானலை வளர் தமிழ் அமைப்பினர்கள்
அமீரகத் தமிழ் பதிவர்களான கீழைராஜா சிம்மபாரதி அப்துல்ஹக்கீம் முதுவை முகில் வருகைத்தந்தார்கள்

மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத்தினரும்
பைஜி தரீக்காவிலிருந்து மௌலவி சபியுல்லாஹ் ஜமாலி ஆலிம் மற்றும் பல தரீக்காவிலிருந்தும் ஆன்மீக சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மௌலானாமார்கள் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இறுதியாக கிளியனூர் இஸ்மத் நன்றி உரை நிகழ்த்தினார்.
இரவு 11.00 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சி இனிதே நிறைவுப் பெற்றது.


புகைப்படங்கள் மதுக்கூர் ராஜாமுஹம்மது