ஜனவரி மாதக்கூட்டம்துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஜனவரி மாதாந்திர கூட்டம் வியாழன்கிழமை(07.01.2010) வெள்ளி இரவு 8.00 மணிக்கு துவங்கியது.
இக்கூட்டத்திற்கு முன்னிலை மௌலானாமார்கள் வகித்தனர்.

இம்மாதக் கூட்டத்தின் தலைவராக கௌரவ ஆலோசகரும் மூத்த சகோதரருமான எம். அபுசாலிஹ் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

கூட்டத்தின் துவக்கமாக சகோதரர் காதர் சாஹிப் கிராஅத் ஓதி துவங்கினார்.
சகோதரர் சிராஜ்தீனும், சாகுல்ஹமீதும் இஸ்லாகீதம் பாடினார்கள்.

திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் இரத்தின சுருக்கமாக உரை நிகழ்தினார்கள்.

பின் சகோதரர் மதுக்கூர் சாகுல்ஹமீது, சகோதரர் மன்னார்குடி ஷேக்தாவுது, செயளாலர் முஹம்மது யூசுப், தலைவர் சஹாபுதீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.

9.30 மணிக்கு தௌபா பைத்துடன் இனிதே இக்கூட்டம் நிறைவுபெற்றது.
அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் திரளாக வந்து கலந்துக் கொண்டார்கள்.