சிங்கை சகோதரர் அஹமது கபீர் துபாய் சபைக்கு வருகை......


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் ஒருவாரத்திற்கு கஸியத்துல் அவுனியா ஒதப்பட்டுவருகிறது.
இந்த தொடர் நிகழ்ச்சிக்கு சிங்கை ஆன்மீக சகோதரர் அஹமது கபீர் அவர்கள் டோஹா கத்தார் வியாபாரநிமித்தமாக சென்று விட்டு சிங்கைக்கு திரும்புகையில் 01/10/2009 அன்று காலை துபாய்க்கு வருகை புரிந்துள்ளார்.
இரவு 9.00 ஒதப்படும் கஸிதத்துல் அவுனியா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.

துபாய் சபையின் தலைவர் சஹாபுதீன் அவர்களும் துணைத்தலைவர் ஷாஜகான் அப்பாசும் அஹமது கபீரை இனிதே வரவேற்று கண்ணியப்படுத்தினர்.

இன் நிகழ்ச்சியில் சையதுஅலி மௌலானா துணைத்தலைவர் காதர் சாஹிப் பொதுச் செயளாளர் முஹம்மது யூசுப் இணைச் செயளாளர் இஸ்மத் பொருளாளர் தாவுது ஆடிட்டர் அப்துல்குத்தூஸ் மற்றும் அதிரை அப்துல் ரஹ்மான் ஆஷிக் அப்துல்ரஹ்மான் சுபகான் அமீர்அலி அக்பர் முஹம்மது அலி அஸரப்அலி சாகுல்ஹமீது மொய்தீன் ஹாஜாஅலவுதீன் அன்வர்உசேன் மற்றும் பல ஆன்மீக சகோதரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள்- அதிரை அப்துல்ரஹ்மான்.