"நுஜூல்" - "உரூஜ்"

ஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் ஏழு படிகளாகும். மனிதன் தான் "அர்வாஹ்" உடைய ஆலத்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் இருந்தான். அப்போது அவன் உயர் அந்தஸ்தில் இருந்தான்.

பின்னால் அவன் உலகத்தில் பிறந்து சிறிது சிறிதாய் உலகத்தை அறியும்போது அவன் முதலிருந்த நிலையை மறந்து விடுகிறான்.
அப்போது அவன் அப்படியே கீழ்ப்படிக்கு இறங்கிவிடுகிறான். முதலில்
அவன் இருந்தது "உரூஜில்" ஆகும். பின்னர் அவன் "நுஜுலுக்கு"
வந்து விட்டான்.

அவன் இப்படியே உலக ஆசாபாசங்களில் கட்டுண்டு அதிலேயே இருந்து
விடுகிறான். ஹக்கு யாருக்கு நேர்வழி காட்டுகிறதோ அவர் அவனின்
அருளைக்கொண்டு படிப்படியாகவும் அமைதியாகவும் பல படிகளை
ஒரே நேரத்தில் கடந்து விரைவாகவும் "உரூஜ்" சென்று விடுகிறார்கள்.

இப்படி உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு "நுஜூல்" "உரூஜ்" என்னும் வித்தியாசம் அற்றுவிடும். அவர்களுக்கு நுஜூல் , உரூஜ் என்பது மிகவும் இலகுவாக இருக்கும்.

அவர்கள் கீழ்ப்படிக்கு வந்து பார்க்கும்போதும் அவர்கள் உயர்படியில்
இருப்பதையே நினைப்பார்கள். உயர்படியை மறந்துவிடவும் மாட்டார்கள்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.

நன்றி சிராஜிதீன் துபை