மாதாந்திரக் கூட்டம்

ஜுன் மாதக்கூட்டம் வியாழன்கிழமை 02/06/2011 மாலை 8.45 மணிக்கு துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மதிப்பிற்குரிய ஆத்மசகோதரர் ஜனாப் M.S.அப்துல்வஹாப் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கு கண்ணியமிக்க ஜனாப் சையது அலி மௌலானா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த நிகழ்விற்கு அமீரகத்தில் இயங்கும் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளரும், காயல் நலமன்றம் மற்றும் இக்ராஹ் கல்வி அமைப்பின் பொறுப்பாளருமான மதிப்பிற்குரிய சகோதரர் ஜனாப் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத் கோட்டக்குப்பம் முஹைய்தீன் அவர்கள் ஓதி அமர ஹுவல்வுஜுத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது அவர்கள் பாடினார்கள்.

அதன் தமிழாக்கம் ஆலியூர் அபுல்பசர்
நபிப்புகழ் பாடல் மதுக்கூர் சாகுல் ஹமீது

ஞானப்பாடல் மதுக்கூர் சிராஜ்தீன்
தலைமை உரையை துக்கம் சையதுஅலி மௌலானாமதுக்கூர் ஹிதயத்துல்லாஹ் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை கூறி அதன் பொருளையும் விளக்கி பேசினார்
மதுக்கூர் நஜ்முதீன் சுயசிந்தனையை ஏற்படுத்தும் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கூறினார்
கிளியனூர் இஸ்மத் தன்னை அறியும் ஞானமே இஸ்லாத்தின் முக்கியக் கடமை என்பதை வலிறுத்தி பேசினார்.
சிறப்பு பேச்சாளர் காயல் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் சபாஅத்தை பற்றியும் பல விருந்தினர்களை பேசுவதற்கு இச்சபைக்கு நான் அழைத்து வந்திருக்கிறேன் அதன் பொருட்டால் இங்கு நான் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று எடுத்தியம்பினார்.
பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையில் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் மீதும் கொண்ட நேசத்தைப்பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசாக பர்ஜன்ஸி மௌலூது நூலை வழங்குகிறார்கள்
காயல் அப்துல்காதிர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்
தௌபா பைத் ஓதப்பட்டு இனிதே இம்மாதக்கூட்டம் நிறைவு பெற்றது
இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.