அகமிய கருவே

அகமிய கருவே
அனுபவ உருவே
இறையில் உறைந்த பிறையே!

ஒளிரும் சுடரே
மிளிரும் எழிலே
அறிவின் திறளெம் குருவே!

திறந்த வெளியின்
பரந்த அறிவை
வெளிக்கொணர்ந்ததாம் ஏகம்!

நித்தம் தனியும்
புவிதனில் எங்கும்
ஞானமெனும் உயர்தாகம்!

மெல்லிய உருவாம்
மின்னிய நடையாம்
கருணை மழைபொழியும் விழியாம்!

பணிவினில் மரமாம்
பொறுமையில் புவியாம்
அன்பின் இயற்பெயர் ஹலீலாம்!

மலரும் நுகரும்
அகமிய வாசம்
அதரம் திறந்தால் கமழும்!

மொழியிற் முதலாம்
அறபும் தமிழும்
விரலின் நுணியில் தவழும்!

பிறை பத்தும் நான்கில்
சித்தி நிறைத்தருளி
புத்தி மறைத்தருளும் குருவே!

பித்தாம் உம்மேல்
வித்தோம் எம்மை
நித்தம் அழைத்துச் செல்வீர் அருளே!

ஆதம் நபிமுதல்
தாஹா நபிவரை
அதன்பின் தோன்றியோ ரெல்லாம்!

கண்டோம் நன்றாய்
உம்மில் ஒன்றாய்
ஒன்றில் ஒன்றிவிட்ட உயிரே!

நபியை மதியார்
இறையின் சதியார்
இவர் விதியென இவரறியார்!

பொருளைக் க‌ண்டு
புரளும் கூட்டம்
அலைமுன் திரளும் நுரையாம்!

இழியும் கூட்டம்
அழியும் மொருனாள்
விழியின் நெதிராம் இறையே!

அடைப்பால் அறிவின்
திடைப்பால் பொருளின்
கடப்பாய் பொறுமையின் நிலையே! ‍இறைனீ
கடப்பாய் பொறுமையின் நிலையே!
கடப்பாய் பொறுமையின் நிலையே!

-அமீர்அலி ஹக்கியுல் காதிரி
துபாய்