மனிதா




மனிதனே நீ யார்?

நீ வெறும் தசையாலும் எலும்பாலும் நரம்பாலும் தோலாலும் ஆக்கப்பட்டஒரு பொருளல்ல. பஞ்ச பூதங்களுமே உன்னில் அடங்கியுள்ளன. மனிதனே நீ உன்னைப் பற்றிச் சிந்திக்கப் பயப்படுகிறாயா? ஏன் பயப்படுகிறாய்?

உன்னை நீ கற்ற அறிவுகளும் உன் ஆசிரியர்களும் உன் தாய் தந்தையரும் ஓரளவுக்குள் மட்டுப்படுத்தி விட்டார்கள். சட்டதிட்டங்களைக் கொண்டு உன்னை அடக்கி ஒடுக்கி விட்டார்கள். நீ கற்ற கல்விகளும் நூல்களும் உன்னை உண்மையின் பக்கம் செல்லவிடாது தடுத்து விடுகின்றன. அவை உன்னைக் கீழே இழுத்து விடுகின்றன. காலமெல்லாம் நீ மாய இருளில் அமிழ்ந்து உன் ஆத்துமாவை வெளியிட முடியாது தவிக்கின்றாய்.

மனிதனே!

உண்மையைக் காக்கவும் உண்மைக்காகவும் உயிர் கொடுத்த தியாகிகளை நீ அறிவாயா? ஏம்பெருமானாரை நீ அறிந்து கொள். முஹிய்யுத்தீனெனும் பெருங்குருவை நீ அறிந்து கொள். ஆத்மஞான சொரூபிகளை நீ அறிந்து கொள். இவர்களெல்லாம் உடலையும் உயிரையும் தியாகம் செய்த உத்தமர்கள். ஆனைத்திலும் தம்மை அழித்துப் பேரின்ப மடைந்தவர்கள். பேரின்பத்திற்கு அழிவே இல்லை.

வாழ்க்கையின் இரகசியம்

எக்கஷ்டத்திலும் நிலத்தை போலும் மலையைப் போலும் பொறுமையுடன் இருப்பதும் கவலை கொள்ளாது எல்லாம் ஹக்கிலிருந்தே (இறையிலிருந்தே) ஏற்படுகின்றன எனப் பூரணமாய்க் கருதி பொறுமையாய் மனச்சாந்தியுடன் உங்களைச் சூழ்ந்து உங்களுக்கு உதவியாய் நிற்கும் சக்தியைக் கருதி அதன்பால் சாடி நிற்பதும் சூபித்துவத்தின் இலட்சணமாகும் என்பதைப் பூரணமாய் நினைத்து நினைத்து எப்போதும் சந்தோசமாயிருத்தலே வாழ்வின் இரகசியம்.

எண்ணத்தைக் கொண்டே செயல்வடிவம் பெறுகின்றது. ஒரு தாய் ஏதாவதொன்றை அதிகமதிகம் சிந்திக்கும்போது வயிற்றிலுள்ள குழந்தையும் அதனைப் பற்றிச் சிந்தித்து வெளியே வந்தவுடன் தாயைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது.

மூளை கம்ப்யூட்டர் போன்றதுதான் எனினும் அதைவிட சிறப்பாகச் செயல்பட முடியுமானது மூளை. மூளையுள்ள மனிதன் தானே கம்ப்யூட்டரையே கண்டுபிடித்தான்.

ஒரு பொருளை எங்கு வைத்தோம் என்பதனையும் எங்குச் செல்லவேண்டும் என்பதனையும் மனதில் பதித்துவிட்டால் மறதி ஏற்பட வழியேயில்லை. விஞ்ஞானிகள் ஒரே சிந்தனையில் இருந்தமையால் வாழ்க்கையையே மறந்திருந்தார்கள். ஆதற்காக அவர்களைப் பைத்தியக்காரர்கள் எனக் கூறவியலுமா?

வாழ்க்கையின் இரகசியம் சிந்தனையே. சுpந்தனையில்லாத மனிதன் இறைச்சிந்தனை இல்லாமலே இறந்து போவதால் திண்டாடிப் போகின்றான்.

அல்லாஹ்வை அறிவது சிந்தனையால்தான் ஏனெனில் அல்லாஹ்வை நாம்பார்ப்பதில்லை.

பின்னாட்களில் நடக்கப் போகும் விஷயங்களையும் பின்னாட்களில் செல்லவுள்ள இடங்களையும் முன்னமேயே நாம் தெரிந்து கொள்ள முடியும் ஆத்மாவின் சக்திதான் அதற்கு காரணம்.

ஒரு கொலைகாரனைக் கண்டு தாவரங்களும் ஏனைய பொருட்களும் கூட அஞ்சி நடுங்குகின்றன. ஒரு கொலைகாரப் பாபியைப் பார்த்தவுடனேயே அவனைப் பற்றிய எண்ணம் மனதிலே வந்துவிடுகிறது.

தாவரங்களைத் தீ வைத்துக் கொளுத்திய மனிதன் நடந்து போகும் போது பிற தாவரங்களும் அவனைக்கண்டு அஞ்சி எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. பிறருடைய மனதைப் புண்படுத்துவது கொலையைவிடக் கொடிய பாபமாகும்.

அந்தக் காலத்திலும் விஞ்ஞானம் இருந்துள்ளது. விஞ்ஞானிகளும் இருந்துள்ளார்கள். இப்போதுள்ள விஞ்ஞானிகள் ஏதாவதொரு ரூபத்தில் விஞ்ஞானச் சாதனங்களைக் (கம்ப்யூட்டர் போல்) கண்டுபிடித்து வருகின்றனர். சாதனங்களே இல்லாமல் விஞ்ஞான விசயங்களை முற்காலத்தில் வாழ்ந்த ஞானிகள் பார்த்துக் கண்டு பிடித்தும் உள்ளார்கள். முpகத் தூரத்தில் உள்ளவைகளைக் கண்டுமுள்ளார்கள் பேசியும் போயும் உள்ளார்கள்.

சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் உபநியாஷங்களை தொகுத்த மனிதா நூலிலிருந்து

-தொடரும்