துபாய் சபையில் மீலாதுன்னபி விழாதுபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின விழா மிக விமர்சையாக மார்ச் 11 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் துவங்கப்பட்டது.

7 மணிக்கு மௌலுது ஷரீப் ஓதப்பட்டு இஷா தொழுகைக்குப் பின் மீலாதுவிழா துவங்கியது.
இவ்விழாவிற்கு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமைவகித்து நடாத்தி தந்தார்கள்.

விழாவின் ஆரம்பமாக அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.
மதுக்கூர் பாடகர் தாவுது ஹுவுல் வுஜூது அறபு பாடலை பாடினார்.அதன் தமிழாக்கத்தை மன்னார்குடி ஷேக்மைதீன் வாசித்தார்.
நபி புகழ் பாடலை பாடகர் சாகுல்ஹமீதும், மதுக்கூர் சிராஸ்தீனும் பாடினார்கள்.

சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.அண்ணல்நபி (ஸல் அலை)அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை கோடிட்டு பேசினார்கள்.

மதுக்கூர் அமீர்அலி சென்ற மாதம் இலங்கை வெலிகமையில் நடைப்பெற்ற மீலாதுன்னபி நிகழ்ச்சியைப் பற்றியும் அந்த நிகழ்வில் நடைப்பெற்ற அறபு-தமிழ் அகராதி வெளீட்டு நிகழ்வைப் பற்றியும் சங்கைமிகு இமாம் ஷெய்க்குனா கலீல்அவுன் மௌலானா அவர்களைப்பற்றியும் மிக தெளிவாக அழகாக கூறினார்.

அவரைத்தொடர்ந்து

மன்னார்குடி ஷேக்தாவுது மீலாதுன்னபியின் சிறப்புகளை கூறினார்.

அவரைத் தொடர்ந்து கிளியனூர் இஸ்மத் உரையாற்றுகையில்
இறைவன் பெருமானாரை நேசிக்குமளவு இன்னும் மனிதர்கள் நேசிக்கவில்லை என்று திருமறையிலிருந்து எடுத்துக் கூறினார்.

மதுக்கூர் முஹம்மது யூசுப் பேசுகையில்
மனிதனிடம் பொறமை இருக்கக் கூடாது என்று சில சம்பவங்களை சுட்டிக்காட்டி பெருமானாரின் வாழ்வை எடுத்தியம்பினார்.

கீழக்கரை காதர்ஷாகிப் உரையாற்றுகையில்
பெருமானார் (ஸல் அலை) அவர்கள் மீது அதிகம் நேசம் கொண்டோமானால் பயமில்லாமல் வாழலாம் என்றுரைத்தார்.

கிளியனூர் முஹம்மது சபீர் உரை நிகழ்த்துகையில்
ஹுதைபிய்யா உடன்படிக்கையான வரலாற்று சம்பத்தை எடுத்து கூறினார்.

துபாய் சபையின் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் பேசுகையில்
பெருமானாரின் திருக் குடும்பத்தினரின் மீது நேசம் வைப்பதைப் பற்றியும் இலங்கை வெலிகமையில் நடைப்பெற்ற மீலாதுன்னபி விழாவினைப் பற்றி சுறுக்கமாக கூறினார்.

இவ்விழாவில் மதுக்கூர் கலீபா அட்வகேட் லியாகத்அலி அவர்கள் மறைஞானப்பேழை மாதஇதழில் 1990 லிருந்து மெய்யொளி பதில்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.அதனை தொகுத்து மன்னார்குடி ஷேக்தாவுது அவரின் சகோதரர் ஷேக்மைதீன் இருவரும் நூலாக அதனை வெளியீட்டுள்ளார்கள்.அன் நூலை இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இறுதியாக ஸலவாத்துடன் இந்நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.