முப்பெரும் விழா







































துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 26.03.2010 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு முப்பெரும் விழா துவங்கியது.

விழாவின் துவக்கமாக மஹ்பூபே சுப்ஹானிய் கிந்தீலே சமதானி முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மௌலுது ஷரீப் ஒதப்பட்டது.

காலை 9.30 மணிக்கு மாதாந்திர கூட்டமும் அதனைத் தொடர்ந்து அறபு – தமிழ் (காமுஸ்) அகராதி மற்றும் மனிதா நூற்கள் வெளியீடப்பட்டன.

மௌலவி அப்துல்ஹமீது நூரி கிராஅத் ஓதி விழாவினை துவங்கி வைத்தார்.
நபிப்புகழ் பாடல்கள் அடமங்குடி அப்துல்ரஹ்மான் நூரி அவர்களும், மதுக்கூர் தாவுதும் பாடினார்கள்.

அறிமுகஉரை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்த,
அதிரை ஷர்புத்தீன் அனைவருக்கும் வரவேற்புரை அளித்தார்.
புலவர் அத்தவுல்லா கவிதைப் பாடினார்.

நிர்வாகத்தலைவர் ஏபி.சஹாபுதீன் தலைமை உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில முஸ்லிம் வீக் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர்முகைதீன் எம்.ஏ. அவர்கள் கலந்து நூற்களை வெளியீட்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல் பிரதியை ஜாகித்அலி மௌலானா பெற்றுக் கொண்டார்கள்.

பொதுச் செயராளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப்,
திருமுல்லைவாசல் சையது அலி மௌலானா
உரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவிற்கு காயிதேமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் லியாகத்அலி,
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், மற்றும் துணைத்தலைவர் குத்தாலம் அஷரப்அலி,
வானலை வளர் தமிழ் துணைத்தலைவர் ராஜாகான் (கீழைராஸா),
இணையதள வலைப்பதிவர்கள் இலக்கியச் செம்மல் முஹம்மது ஆஸாத்,
மற்றும் அஹமது சுபைர்,

ஊடகத்துறை ஆர்வாளர் முதுவை ஹிதாயத்துல்லா ,

சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது,

அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூரி, அப்துல்ரஹ்மான் நூரி, மற்றும்
மதுக்கூர் சுன்னத்வல்ஜமாஅத்தினர், தஞ்சாவூர் ஜமாஅத்தினர், லால் பேட்டை ஜமாஅத்தினர், பத்ருசஹாபாக்கள் அறை நண்பர்கள், பாரடைஸ் அறை நண்பர்கள், மற்றும் பல தரீக்காவிலிருந்தும் ஆன்மீக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவினை சிறப்புச் செய்வதற்கு பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா,அப்பாஸ் ஷாஜகான், காதர்ஷாகிப் ,முதுவை ஹகமது ஹிம்தாதுல்லா,அதிரை அப்துல்ரஹ்மான், மதுக்கூர் ராஜா முஹம்மது, மதுக்கூர் வாவாமுஹம்மது, அப்துல்சுபுஹான்,ஆலியூர் அபுல்பசர், மதுக்கூர் அமீர்அலி ,மன்னார்குடி ஷேக்தாவுது பிரதர்ஸ், மற்றும் ரூம்மெம்பர்ஸ் மற்றும் பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு நூற்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.