புதுப் பொலிவுடன் முதல் நிர்வாகக் கூட்டம்


முதல் நிர்வாகக் குழு கூட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 9.00 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நடந்தது.


புதிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கூட்டத்தை சிறப்பித்து தந்தார்கள்.
அது சமயம் நிர்வாகத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மாதச்சந்தா, மதரஸா வளர்ச்சி, மறைஞானப்பேழை மாதப்பத்திரிக்கை வளர்ச்சி இவைகளுக்கு புதிய பல நிர்வாகிகளை நியமிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கபட்டது.
2009 வரையிலான கணக்குகளை ஆடிட் செய்ய புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது.


உதவித் தலைவர் அப்பாஸ் ஷாஜகான் ஐந்து நிமிடம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
இறுதியாக சபைத் தலைவர் அனைவருக்கும் நன்றி கூறி சலவாத்துடன் இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.