இமாம் ஷெய்குனா பன்னிரெண்டாம் ஆண்டு துபாய் வருகை


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஸ்தாபகர் இமாம் செய்யிது கலில் அவுன் மௌலானா அவர்கள் ஆகஸ்ட் 9 ம்தேதி குவைத் நாட்டிலிருந்து துபாய் வந்தார்கள். இது 12 வது வருட விஜயமாகும்.
குவைத் நாட்டில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை நிறுவி ஞானத்தேடல் உள்ளவர்களுக்கு தவ்ஹித் விளக்க சொற்பொழிவு நிகழ்த்தியும் பிறை 14ல் இராத்தீப் ஒதியும் சிறப்பித்துள்ளார்கள்.பலர் ஆர்வத்துடன் இணைந்து பைஅத் பெற்று தங்களை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையுடன் இணைத்துக் கொண்டார்கள்.

துபையில் ஓவ்வொருவருடமும் நடக்கக்கூடிய மஜ்லிஸ் நிகழ்ச்சி போல இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. அனைத்து முரீதின்களும் மஹ்ரிப் தொழுகைக்கு பின் மஜ்லிஸில் கலந்துக் கொண்டார்கள்.

தவ்ஹிதின் அறிவு ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக அவசியம் என்றும் ஷரிஅத்தை எந்த காலக்கட்டத்திலும் மறந்தோ அலட்சியமோ படித்திடாமல் பேணி நடக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஐங்காலத் தொழுகையை சந்தோசமான முறையில் தொழவேண்டும் பஜ்ர் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் ஒதவேண்டும் என்றும் கூறினார்கள்.
அண்ணல் பெருமானார் (ஸல்) அலைஹி வஸல்லாம் அவர்களின் மீது அதிகமான அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உபந்நியாசம் செய்தார்கள்.

பெற்றோர்களை எந்த காலகட்டத்திலும் கைவிட்டிடாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும் இது ஒவ்வொருவர்களின் மீதும் கடமை என்றும் கூறினார்கள்.

ஆகஸ்ட் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையில் நடந்த மஜ்லிஸில் முரீதின்கள் தங்களின் சந்தேகங்களை கேக்கும்படியும் பணித்தார்கள். பலர் தங்களின் ஐயங்களைக்கேட்டு தெளிவுற்றார்கள்.

துபாய் சபையில் நிர்வாகச் சீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமித்தார்கள். அனைவருமே தலைவர்கள் தான் என்ற மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் புது பொலிவுடன் சபை இயங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்ளக்கூடாது என்றும் அறிவுரித்தினார்கள்.

20ம் தேதி மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் சிறப்பு துவா ஓதி அனைத்து முரீத்தீன்களுக்காகவும் உலக மக்களின் ஒற்றுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.


21 ம் தேதி மாலை 7.30 மணிக்கு இலங்கைக்கு திரும்பினார்கள்.






புதிய நிர்வாகிகளுடன் இமாம் செய்யிதுகலில் அவுன் மௌலானா அவர்கள்