ஜமாலிய்யா மௌலானா(ரலி) அவர்களின் ஜியாரத் விழாதுபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 16.04.2010 வெள்ளிக்கிழமை மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் 61ஆவது புனித விசால் தினத்தை(கந்தூரி ஜியாரத்) முன்னிட்டு இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரியா ஓதப்பட்டது.

நிர்வாகத்தலைவர் சஹாபுதீன் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா அவர்களின் வாழ்க்கை சரிதையை சுருக்கமாக கூறினார்.

17.04.2010 அன்று சம்பைப்பட்டிணத்தில் புனித ஜியாரஅத் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சங்கைமிகு இமாம் கலீல்அவுன் மௌலானா அவர்களின் குவைத் விஜயத்திற்கு உடன் சென்றுவந்த நிர்வாகத்தலைவர் சஹாபுதீன் அக்பர் ஷாஜகான் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவவிக்கப்பட்டனர்.