மத ஒப்பியல் அறிஞர்.!


வாப்பாவை நான் சந்தித்திருக்கிறேன்.
அவர் ஒரு ஆன்மீகவாதியாக இறைநேச செல்வராக ஆழ்ந்த மார்க்க ஞானமும் மதங்களிடையே நல்லிணக்க கருத்துக்களை சிறப்பாக எடுத்துக்காட்டும் மத ஒப்பியல் அறிஞராகத் திகழ்பவர்.
அவருடைய அரபி ஞானமும் தமிழ் இலக்கிய இலக்கணப் புலமைத்தன்மையும் வியப்பூட்டக் கூடியது.

ஏகத்துவ(ஒரிறை)கோட்பாடுகளைக் கவிதை நடையில் வடித்து எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் படிக்கவும் சிந்திக்கவும் வைப்பதுடன் எளிய முறையில் தத்துவ விளக்கமும் செய்து வருகிறார்.

அவருடைய எளிமை தூய்மை யாரையும் புண்படுத்தாத வகையில் மக்களுக்கு உபதேசங்களை சொல்வதோடு எல்லா இடத்துக்கும் சென்று நடமாடும் நல்லிணக்க பிரச்சாரகராக இருக்கிறார்.(மொபைல் பிரபகண்டா)என்று வாப்பாவைக் கூறலாம்.


இன்றைய காலகட்டத்திற்கு இவர் சேவை மிக மிக அவசியமானது.அவரை நபிகள் நாயகத்தின் வாரிசு எனச் சொல்வதில் தவறில்லை.ஆன்மீக வரிசையில் தரிக்காவில்(ஞான வழி) இப்படி எல்லாம் சொல்வது இயற்கைதான்.இதைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.என்று கூறுகிறார்
தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் (முன்னால்)நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்.