This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திருச்சியில் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் 76 ஆவது உதய தின விழா!

நமது உயிரினும் மேலான சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் 76 புனித உதய தின விழா, திருச்சியில் ஆத்ம சகோதரர் ஜனாப். S.B. ஆரிப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவுக்கு கிப்லா ஹல்ரத். தமிழ்மாமணி. மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை தங்கி விழாவை நடத்தினார்கள்.

விழாவில் மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி முதல்வர். ஆத்ம சகோதரர் ஜனாப். மக்ஹ்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மௌலவி. N. சயீத் முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், மௌலவி. N. முஹம்மது ரபீயுத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஆகியோர் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் மேன்மை, உயர்ந்த படித்தரங்கள், எளிமை, இனிமை, எண்ணில்லா சிறப்புகள், வாப்பா நாயகமவர்கள் நமக்கு வழங்கி வரும் சிறப்புகள், நன்மைகள், பாதுகாவல்கள், நாம் வாப்பா நாயகம் அவர்களை எவ்வாறு விளங்கிகொள்வது, அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற உயரிய கருத்துக்களை வெகு நேர்த்தியாக எடுத்து வைத்தார்கள்.


விழாவில், திருச்சியை சேர்ந்த முரீது பிள்ளைகள், அஹ்பாபுகள், மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

விழாவின் முத்தாய்ப்பாக, சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் வாரிதாத்துக்களான கசீததுல் அஹ்மதியா - கசீததுல் அவ்னிய்யா சிறப்பாக ஓதப்பட்டது.

இந்த புனித திரு நாளின் பொருட்டால் எல்லா வளங்களும் நலன்களும் எல்லாரும் பெற்று சிறப்புற்று வாழ ஏக மனதாக பிரார்த்திக்கப்பட்டது. நிறைவாக கந்தூரி உணவு உபசாரத்தோடு விழா இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.

தகவல் : இளங்கவி. A. நைனார் முஹம்மது அன்சாரி , திருச்சி.










LIVE

நேரடி ஒளிப்பரப்பு

இன்று வெள்ளிக்கிழமை காலை துபாய் நேரப்படி 9.00 மணிக்கு சபையின் இன்றைய நிகழ்ச்சியை நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

மதுக்கூரில் சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் பிறந்தநாள் விழா

மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞான சபையில் செப்டம்பர் 14-ல் மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் சங்கைமிகு நமது உயிரினும் மேலான சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வஹ்தத்துல் உஜூத் பாடலை அல்லாமா அப்துல் கரீம் அவர்களும் கலீபா முகம்மது காலிது அவர்களும் Er.இத்ரீஸ் அவர்களும் அப்துர் ரஹ்மான் அவர்களும் சேர்ந்து பாடினார்கள் ,அதன் தமிழாக்கம் பின்னர் வாசிக்கப்பட்டது

.அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யாவும் கஸிதத்துல் அஹ்மதிய்யா வும் ஓதப்பட்டன.
கலீபா அட்வகேட் A.N.M.லியாக்கத் அலி அவர்களும் முகைதீன் அமானுல்லா அவர்களும் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.










இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் செப்டம்பர் 11-ல் மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யாவும் ஓதப்பட்டன.
பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.


செப்டம்பர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 9.9.2011 வெள்ளி மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் செப்டம்பர் மாதக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கண்ணியமிக்க மௌலானாமார்கள் முன்னிலையிலும் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமை தாங்கியும் நடாத்தினார்கள்.

கூட்டத்தின் துவக்கமாக கோட்டக்குப்பம் முஹைய்யதீன் அவர்கள் திருமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார்.


மதுக்கூர் முஹம்மது தாவூது ஹுவல்வுஜுது அறபு பாடலை பாடினார்.

அதன் தமிழாக்கத்தை (ஏகக்காட்சி) ஜெகபர்சாதிக் கூறினார்.

பாடகர் சாகுல்ஹமீது ஞானப்பாடலும்
முஹம்மது இத்ரீஸ் நபிப்புகழ் பாடலும் பாடினார்கள்.

நிகழ்ச்சியின் தலைவர் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து மதுக்கூர் முஹம்மது இத்ரீஸ் உரை நிகழ்த்தினார்.

பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வு உரையை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.

M.S.அப்துல்வஹாப் இமெயிலில் நிகழ்ந்துவரும் வஹ்காபிய சாடல்களை பற்றி உரை நிகழ்த்தினார்.

மன்னார்குடி ஷேக்தாவூது முழுமை என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.


திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.


இறுதியாக நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் உரை நிகழ்த்தினார்.




தௌபா பைத்துடன் இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவடைந்தது.

அத்வைத கானம்

நானல் லாது நீயல்ல
நீயல் லாது அவனல்ல
அவனல் லாது தானல்ல
தானல் லாது வேறல்ல!

நானே மறைந்து நீயானாய்
நீயே மறைந்து அவனானாய்
அவனே மறைந்து தானானாய்
தானே மறைந்து அணுவானாய்!

அணுவா யிருந்து அருவானோம்
அருவா யிருந்து உருவானோம்
உருவா யிருந்து ஒன்றானோம்
ஒன்றா யிருந்து பலவானோம்!

பலவா யிருந்து ஜகமானோம்
ஜகமா யிருந்து ஜடமானோம்
ஜடமா யிருந்து வடிவானோம்
வடிவா யிருந்து பெயரானோம்!

பெயரா யிருந்து மகத்தானோம்
மகத்தா யிருந்து உணர்வானோம்
உணர்வா யிருந்து அறிவானோம்
அறிவா யிருந்து வளமானோம்!

வளமா யிருந்து குணமானோம்
குணமா யிருந்து குணியானோம்
குணியா யிருந்து குறியானோம்
குறியா யிருந்து இனமானோம்!

இனமா யிருந்து குலமானோம்
குலமா யிருந்து யுகமானோம்
யுகமா யிருந்து தொகையானோம்
தொகையா யிருந்து பொருளானோம்!

பொருளாய்த் தற்பதக் கலையானோம்
கலையாய்த் தொம்பதக் கிளையானோம்
கிளையாய் அசிபத நிலையானோம்
நிலையாய் நின்றே மிளிர்வானோம்!

மிளிர்வா யிருந்து தெளிவானோம்
தெளிவா யிருந்து நிறைவானோம்
நிறைவா யிருந்து நிஜமானோம்
நிஜமா யிருந்து நிகரானோம்!

நிகரா யிருந்து சுகமானோம்
சுகமா யிருந்து சுயமானோம்
சுயமா யிருந்து தொடரானோம்
தொடரா யிருந்து தொனியானோம்!

தொனியா யிருந்து மொழியானோம்
மொழியா யிருந்து இயலானோம்
இயலா யிருந்து இசையானோம்
இசையா யிருந்து நடமானோம்!

நடமா யிருந்து உறவானோம்
உறவா யிருந்து கருவானோம்
கருவா யிருந்து வினையானோம்
வினையா யிருந்து வித்தானோம்!

வித்தாய் முளையாய் விளைவானோம்
விளைவிக்கும் பொருள் விரிவானோம்
விரிவாய்க்கொத்தாய்ச் சுவையானோம்
சுவையாய்ப் பயனாய்ச் சத்தானோம்!

சத்தா யிருந்து வானானோம்
வானா யிருந்து வளியானோம்
வளியா யிருந்து கனலானோம்
கனலா யிருந்து புனலானோம்!

புனலா யிருந்து நிலமானோம்
நிலமா யிருந்து பயிரானோம்
பயிரா யிருந்து உயிரானோம்
உயிரா யிருந்து உயர்வானோம்!

உயர்வா யிருந்து ஒளியானோம்
ஒளியா யிருந்து வெளியானோம்
வெளியா யிருந்து உளமானோம்
உளமா யிருந்து மனமானோம்!

மனமா யிருந்து மகிழ்வானோம்
மகிழ்வா யிருந்து நனவானோம்
நனவா யிருந்து கனவானோம்
கனவா யிருந்து நினைவானோம்!

நினைவா யிருந்து மதியானோம்
மதியா யிருந்து வரவானோம்
வரவா யிருந்து விரவானோம்
விரவா யிருந்து திரமானோம்!

திரமா யிருந்து திடமானோம்
திடமா யிருந்து பரிவானோம்
பரிவா யிருந்து அமைவானோம்
அமைவா யிருந்து தரமானோம்!

தரமா யிருந்து லயமானோம்
லயமா யிருந்து பதியானோம்
பதியா யிருந்து பரமானோம்
பரமும் நீ-நான் ஒன்றானோம்!

-சங்கைமிக்க மஹானந்தபாபா

இஸ்லாமிய ஞான விளக்கம்

சங்கைமிக்க ஷெய்குனா இமாம் அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அவர்களின் துபாய் விஜயத்தின்போது ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ஏப்ரல் 24 லில்(2011) நடைபெற்ற இஸ்லாமிய ஞானவிளக்க மஜ்லிஸ்...




ஒளி இழந்த உள்ளங்கள் ( or ) கும்மிருட்டு குடியிருக்கும் குருவில்லா கல்புகள்



சந்தேகம் இல்லாத விசுவாசம்

உன்னில் வரவில்லையெனில் நீ நாசம்

குருவில் விசுவாசம் கொண்டோருக்கு இறைவாசம்

குருவை மறந்தவர்க்கு உள்ளமே சிறைவாசம்



கப்பல் மூழ்கி கடனாளி ஆகிவிட்டால்

அண்டாவை அடகு வைத்து காப்பாற்ற முடியாது

குருவை துறந்து மதி கெட்டு போய்விட்டால்

உருப்போட்ட பாடத்தினால் கதியடைய முடியாது



சாண் உயர்ந்த பானுவின் கதிரின்

வெப்பக்கொடுமையில் வெந்தே தவிப்பான்

கோனில் உயர்ந்த குருவின் நிழலை

குறைகள் கூறி விட்டே அகன்றோன்



கொட்டும் தேளின் கொடுக்கின் விஷத்தில்

மட்டே இல்லா துன்பம் துய்ப்பான்

வையகம் வாழ வந்தே உதித்த

பொய்யா குருவின் மெய்யை அறியான்



எண்ணங்கள் ஆயிரம் எழுந்தே வந்து

இன்னல் நெருப்பில் எரித்தே கரித்திடும்

சலனங்கள் மனதில் சல்லாபமாடிடும்

சற்குரு தீட்சை தத்துவம் இழந்தாற்கு



குருவில்லா கல்பினிலே கும்மிருட்டும் குடியிருக்கும்

பேதங்கள் தோன்றிவிடும் பேய்கள் நடமாடும்

வேத நிலை மாறிவிடும் ஆதி நிலை அகன்றுவிடும்

உடலென்னும் மண்ணறையும் உருக்குலைந்து போய்விடும்



ஆக்கம் : Adv. A.N.M லியாக்கத் அலி B.sc.,B.L ஹககியுள் காதிரி

மதுக்கூர் .

ஈகைத்திருநாளின் ஈத்முபாரக் வாழ்த்துக்கள்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 30.08.2011 அன்று காலையில் ஈகைத்திருநாள் தொழுகை முடித்து அனைத்து சகோதரர்களும் சபையில் தக்பீர் முழக்கத்துடன் ஈத்பெருநாள் இதயவாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகத்தலைவர் கலீபா சகாபுதீன் ஈத்பெருநாளின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

அனைவரும் ஒருவருக்கொருவர் ஈத்பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.