This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label நிகழ்ச்சி. Show all posts

ஆகஸ்ட் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 05/08/2011 வெள்ளிக்கிழமை மாலை இப்தாருக்கு பின் ஆகஸ்ட் மாதக்கூட்டம் மௌலானா முன்னிலையில் நிர்வாகத் தலைவர் ஏ.பி.சகாபுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மௌலவி முஹம்மது மூஸா மன்பஈ அவர்கள் வருகைப்புரிந்து சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தாயகத்திலிருந்து வருகைப்புரிந்திருக்கும் மூத்த சகோதரர் கண்ணியமிக்க கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து சொற்பொழிவாற்றினார்கள்.

இன் நிகழ்ச்சிக்கு அஜ்மானிலிருந்து பாம்பன் ஜாஹிர்உசேன் மற்றும் அப்துல்கபூர் வருகை புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக திருக்குர்ஆனிலிருந்து கோட்டைக்குப்பம் முஹைய்தீன் கிராஅத் ஓதி துவங்கினார்.
அதன் பின்னர் வஹ்தத்துல்வுஜீத் அரபுபாடலை முஹம்மது தாவுது பாடினார்
நபிப்புகழ்பாடலை மதுக்கூர் சாகுல்ஹமீது பாடினார்

ஞானப்பாடலை பாடுவது மதுக்கூர் சிராஜ்தீன்






தலைமை உரை நிகழ்த்துகிறார் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள்
பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் உரை நிகழ்த்துகிறார்




கிளியனூர் இஸ்மத் உரை நிகழ்த்துகிறார்

சிறப்பு சொற்பொழிவு மௌலவி முஹம்மது மூஸா மன்பஈ நிகழ்த்தினார்கள்.


தௌஃபா பைத்துடன் இனிதே ஆகஸ்ட் மாதக்கூட்டம் நிறைவு பெற்றது.



புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான் மற்றும் முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்

புனித மிஉராஜ் நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் புனித மிஉராஜ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியமிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக குடந்தை இதழியல் ஆசிரியரும் பேராசிரியருமான முஹம்மது உசேன் மற்றும் மௌலவி உசேன் மக்கி அவர்களும் ஊடகத்துறையாளர் முதுவை ஹிதயத்துல்லாஹ்வும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.

மிஉராஜ் நிகழ்வைப்பற்றி மௌலவி உசேன் மக்கி மற்றும் முஹம்மது உசேனும் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

நன்றி உரையை பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா தலைமை உரை நிகழ்த்துகிறார்கள்


ஊடகத்துறையாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு அப்துல் வஹாப் நினைவு பரிசு வழங்குகிறார்
மௌலவி உசேன் மக்கி அவர்கள் மிஉராஜ் நிகழ்வைப் பற்றி உரை நிகழ்த்துகிறார்கள்.


குடந்தை இதழியல் ஆசிரியரும் பேராசிரியருமான முஹம்மது உசேன் அவர்களுக்கு மௌலானாமார்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
உரை நிகழ்த்துகிறார்கள் பேராசிரியர் முஹம்மது உசேன் அவர்கள்

நன்றி உரை நிகழ்த்துவது ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் அவர்கள்
புகைப்படங்கள் - முதுவை ஹிம்தாதுல்லாஹ்

மதுக்கூரில் மகத்தான மஜ்லிஸ்

அன்புமிக்க சகோதரர்களே கிளியனூர் இஸ்மத் எழுதுகிறேன்.

விடுமுறையின் நிமித்தமாக இந்தியா வந்துள்ளேன். நமது ஆருயிர் சங்கைமிக்க வாப்பா நாயகத்தை மதுக்கூரில் வக்கீல் கலீபா லியாகத்அலி அவர்களின் இல்லத்தில் தரிசித்தேன்.

எத்தனை முறைகள் தரிசித்தாலும் மனம் அடையும் ஆனந்தமும், அமைதியையும் என்னால் இங்கு வரிகளாக்க முடியவில்லை. தன்னைத் தேடிவந்த பிள்ளைக்கு அவர்கள் அள்ளித்தரும் அன்பை பருகுவதற்கு நான் திக்குமுக்காடினேன்.

மதுக்கூரின் நூற்றுக்கனக்கான குடும்பங்கள் நம் ஷெய்குநாயகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்பித்து வக்கீல் கலீபா லியாகத்அலி அவர்களின் இல்லத்திற்கு சாரை சாரையாக வருகைப் புரிந்துக் கொண்டிருந்தார்கள்.
வாப்பா நாயகத்தின் உபநியாஷங்களை கேட்பதற்கு அதிகாலை பஜர் தொழுகையை முடித்துவிட்டு பல ஊர்களிலிருந்து முரீதுகளும், நல் அபிமானிகளும் திரளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை நிறைகளைக் கேட்டு ஆதரவான வார்த்தைகளும், அவர்களுக்காக துவாவும், ஏகமயமாய் பரிபூரண எண்ணத்துடன் வாப்பா நாயகம் செய்கிறார்கள்.

அவர்களை கண்டுச் செல்லும் பக்கதர்களின் முகம் மலர்ந்து செல்வதை என்னால் அங்கு காணமுடிந்தது.

வாப்பா நாயகத்தைக் கண்டு விட்டு உடன் ஊர் திரும்ப இருந்த எண்ணை உங்களுடன் நீண்ட நேரம் பேச முடியவில்லையே என்று அவர்கள் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு நான் மாலை வரை தங்கியிருப்பேன் என்றேன்.

மாலை நேரத்தில் எண்ணற்ற பக்தர்களை கண்ட ஆருயிர் நாயகம் அவர்கள் உணவு வேலையின்போது என்னை அருகில் அமரவைத்து உணவு பண்டங்களை அள்ளி அள்ளிவைத்த அந்த தாய்உள்ளத்தை என்ன வார்த்தைகளைக் கொண்டு எழுதுவது என்றே தெரியவில்லை.

இஷா தொழுகைக்குப்பின் பிள்ளைகளுடன் மருத்துவத்தைப் பற்றி உரையாடல் முடியும் நேரம் இரவு பத்து மணியைத் தாண்டியது… நான் ஊர் புறப்படுகிறேன் என்று கூறியபோது இந்நேரத்திலா வேண்டாம் காலையில் செல்லலாம் என்று அன்பு கட்டளை பிறப்பித்தார்கள்.
நான் அந்த இரவு புறப்பட்டிருந்தேன் என்றால் கோடைமழையில் நனைந்து சிரமம்பட்டிருப்பேன். அன்று இரவு தங்கியதால் காலை மஜ்லிஸின் ஞான மழையில் நனைந்து சந்தேகங்களை போக்கிக் கொண்டேன்.

இந்த இனிய நாட்களை என்னால் மறக்க இயலாது அதனால் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்… மிக்க நன்றி.!


















புனித உம்ரா வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சஹாபுதீன் அவர்கள் தனது குடும்பத்தாருடன் புனித உம்ரா சென்றுவிட்டு 14/06/2011 அன்று திரும்பி உள்ளார்கள்.
அவர்களை வரவேற்கும் முகமாக சபை சகோதரர்களும் நிர்வாகத்தினரும் 15/06/2011 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் அவர் இல்லம் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.

முஹம்மது மாதிஹ் அவர்களுக்கு ஜியாவுதீன் மௌலானா மற்றும் அதிரை ஷர்புதீன், ஷேக்தாவுது பொன்னாடை அணிவித்தார்கள்

கலீபா ஏ.பி.சஹாபுதீன் அவர்களுக்கு மூத்த சகோதரர் எம்.எஸ்.அப்துல்வஹாப் மற்றும் சாகுல்ஹமீது பொன்னாடை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முஹம்மது யூசுப், கிளியனூர் இஸ்மத், அதிரை அப்துல்ரஹ்மான், ஜாகிர்உசேன், அபுல்பசர், அக்பர் ஆகியோர்களும் கலந்து தங்கள் வாழ்த்தினை வழங்கினார்கள்.
வருகைத்தந்த சகோதரர்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் மற்றும் பேரிச்சைப்பழம் வழங்கப்பட்டது.

அமீரகம் தழுவிய இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 15/05/2011 ஞாயிறு அன்று திங்கள் மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு முரிதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

சார்ஜாவில் அதிரை அப்துல்ரஹ்மான் இல்லத்திலும் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி மிக சிறப்பாக சார்ஜா முரிதீன்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

அபுதாயில் மதுக்கூர் ஜெகபர் சாதிக் இல்லத்திலும் இராத்திபத்தல் காதிரிய்யா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.








கவிஞர்களை கௌரவித்த சிறப்பு இசை நிகழ்ச்சி

துபாய் நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் மே 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சிறப்புமிகு கவிஞர்களான கலீபா ஆலிம் புலவர் திண்டுக்கல் எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி அவர்களையும் கவிஞர் ஹாபிழ் கொள்ளுமேடு பாரூக் பஜ்லி அவர்களையும் கௌரவிக்கும் முகமாக தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜீத்தீன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்தும் பலரும் வருகைப்புரிந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற உறுதுணை புரிந்தனர்.

நமது ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையிலிருந்து ஆன்மீகச் சகோதரர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்புமிகு கவிஞர்களை கௌரவிக்க கண்ணியமிக்க லால்பேட்டை நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் வருகைப்புரிந்து கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிந்தித்துபாரு புதிய இஸ்லாமிய தத்துவப்பாடல்கள் அடங்கிய ஒலி குருந்தகடு வெளியிடப்பட்டது.















கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு கண்ணியமிக்க நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் நினைவு பரிசு வழங்குகிறார்கள்


P.P ஜுவல்லரியின் மேலாளர் கீழக்கரை M.E.S.அபுதாஹிர் பைஜிக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்

கீழக்கரை கவிஞர் அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்.








புகைப்படங்கள் - அஹ்மது ஹிம்தாதுல்லாஹ் முதுவை