This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

சிங்கப்பூரில் புனித கந்தூரிவிழா

சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 24.10.2010 ஞாயிறு திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்குப் பின்
குத்புல் பரீத் சங்கைமிகு யாசீன் மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் புனித விசால்தின கந்தூரிவிழாவினை மிக விமர்சையாக ஆன்மீக சகோதரர் சம்சுல் மற்றும் அப்பாஸ் அவர்களில் இல்லத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்தியா கொடிக்கால்பாளையத்திலிருந்து கேபிஎம்.பசீர்ஹகமது கலந்து தந்தைநாயகத்தின் வரலாற்று சிறப்புகளை பேசினார்.

நிர்வாகத்தலைவர் நிஜாமுதீன் தலைமையில் மற்றும் சுபுஹான், சாதிக் இன்னும் ஆன்மீகச் சகோதரர்கள் கலந்து அருளைப்பெற இவ்விழாவை சிறப்பித்தார்கள்
இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது




சிங்கை நிர்வாகிகளும் முரீதுகளும்


சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகிகள் மற்றும் முரிதீன்கள்

தலைவர்: நிஜாமுத்தீன் (கூத்தாநல்லூர்)
செயலாளர்: பரக்கத் அலி (கூத்தாநல்லூர்)
பொருளாளர்: அஹமது கபீர் (ஆழியூர்)
தணிக்கையாளர்: தாஜுத்தீன் (கூத்தாநல்லூர்)
செயற்குழு: ஹாஜா ஷேக் அலாவுத்தீன் (ஆழியூர்)
செயற்குழு: அப்துல் சுபஹான் (ஆழியூர்)

சிங்கையில் ஷைகு நாயகத்தின் ஜும்மா தொழுகை:

இந்த வெள்ளி ஜும்மா தொழுகைக்காக ஷைகு நாயகம் அவர்கள் சிங்கையின் இயூஷுன் எனும் பகுதியிலுள்ள 'மஸ்ஜித் அன்-நஹ்தா'விற்க்கு முரீதுகளுடன் சென்றார்கள்.

பள்ளி வாயிலுக்கு செல்லும் வழி முழுவதும் ஜும்மாவின் மான்புகளை முரீதுகளுக்கு எடுத்துறைத்த கொண்டிருந்தார்கள் சங்கைக்குறிய ஷைகு நாயகம் அவர்கள்.

சிங்கை ஏகத்துவமெய்ஞ்ஞான சபை (சகோதரர் கபீர் அலுவலகம்)



தகவல்- அக்பர் ஷாஜகான்

சங்கை மிகுந்த ஷைகு நாயகம் அவர்களின் 12 வது ஆண்டு சிங்கை விஜயம்


விஜயத்தின் முத்தான முதல் மூன்று நாட்கள்:

ஷைகு நாயகம் அவர்கள் 1-1-2010 அன்று காலை 10:20 மணியளவில் சிங்கை விமான நிலையத்தை வந்தடைந்தார்கள். சிங்கை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் சகோதரர் நிஜாமுத்தீன் தலைமையில் சிங்கை வாழ் முரீதுகளும் மற்றும் இந்தியா, மலேசியா, துபாயிலிருந்து வருகை தந்திருந்த முரீதீன்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு அளித்தார்கள்.


அங்கிருந்து புறப்பட்டுச்சென்ற ஷைகு நாயகம் அவர்கள் சகோதரர் ஆஷிகுர் ரஹ்மான் அவர்களின் இல்லத்தை வந்தடைந்தார்கள். அங்கு அவர்களுக்கு சிங்கை முரீதீன்கள் சார்பாக சகோதரர் நிஜாமுத்தீன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்தியாவிலிருந்து வந்திருந்த மூத்த சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சங்கை செய்தார்கள்.

அன்று மாலை முதலாவது மஜ்லீஸ் மஃரீபுக்குப் பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது. அனைத்து முரீதீன்களும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த அமர்வில், சபையின் நோக்கம் மற்றும் அதனின் பயன்களைப்பற்றி ஷைகு நாயகம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். அமர்வின் தொடக்கத்தில் ஞானப்பாடல்களை சகோதரர் ஜாஹிர் ஹுசைன் பாடினார்.

இரண்டாவது அமர்வு சனிக்கிழமை மாலை மஃரீபுக்குப் பிறகு இனிதே நடந்தேறியது. சகோதரர்கள் ஜாஹிர் ஹுசைன் மற்றும் ஜைன் அலி ஆகியோரது இனிய குரலில் ஞான கீதங்கள் அரங்கேறின. இந்த அமர்வில் இன்றைய முஸ்லீம் சமுதாயத்தின் நிலையையும் அதன் வருந்தத்தக்கப்போக்கு பற்றியும் ஷைகு நாயகம் அவர்கள் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள். அதன் பின்பு முரீதீன்களின் பல கேள்விகளுக்கு ஷைகு நாயகம் அவர்களின் விரிவான பதிலுரைக்குப்பின் மஜ்லீஸ் நிறைவுற்றது.

மூன்றாவது நாள் மஜ்லீஸ் ஞாயிறு மாலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இறையருட்பாவிலிருந்து ஞானப்பாடல்களை சகோதரர்கள் ஜைன் அலி மற்றும் ஜாஹிர் ஹுசைன் பாடினார்கள். ஷைகு நாயகம் அவர்கள் பிரபஞ்சத்தின் நிலையை பற்றியும் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அறிவுப்பூர்வமான நுண்ணிய விளக்கங்களை அழகுற எடுத்துரைத்தார்கள். ஏகத்துவ விளக்கங்கள் பற்றி முரீதீன்கள் கேட்ட கேள்விகளுக்கு திரு குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஞான நூல்களை மேற்கோள்காட்டி அளித்த விளக்கவுரைக்குப்பின் மஜ்லீஸ் இனிதே நிறைவடைந்தது.

அமர்வுகளின் முழுமையான விளக்கவுரைகள் மற்றும் மற்றைய அமர்வுகளின் விவரங்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த இதழ்களில் தொடரும்.

நன்றி- அப்துல் சுhஹான் (சிங்கை)

அக்பர் ஷாஜகான் (துபாய்)

எழில்மிகு சிங்கையில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினருடன்







கடந்த மாதம் ஜூன் 17ம் தேதி சிங்கப்பூர் சென்றிருந்தேன்...அங்கு எழில்மிகு சிங்கையில் இயங்கிவரும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அழைப்பை ஏற்று மாதாந்திர கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அவர்களை சந்திததில் பெரிதும் மனம் மகிழ்ந்தேன்...
சிங்கை சகோதரர்கள் மிக ஆர்வத்துடன் இயங்கிவருவதைக் கண்டு ஆனந்தம் கொண்டேன்...